இந்தியாவின் முதன்மை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாகியிருக்கிறது. 4987 காலி இடங்களை அவ்வங்கி நிரப்ப உள்ளது. எஸ்பிஐ வங்கியின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள 4987 புரபேஷனரி ஆபிசர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 21லிருந்து 30க்குள் (02.06.1981 முதல் 01.06.1990க்குள் பிறந்திருக்க வேண்டும்).
விண்ணப்ப கட்டணம்: ரூ.50 (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு), மற்றவர்களுக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். எஸ்பிஐ வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்தி அதற்குரிய ரசீதை வங்கியின் முத்திரையிட்டு பெற்றுக்கொள்ளவும். பணம் செலுத்துவதற்கான வவுச்சரை வங்கியின் இணையதளத்தில் பதவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளவும். கேஷ் வவுச்சரில், வங்கியின் பெயர், வங்கி கிளையின் முகவரி, பணம் செலுத்திய தேதி மற்றும் கட்டணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். கட்டணத்தை 23.06.2011 -க்கு முன்பாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதன் பிரிண்ட் அவுட்டை பதவிறக்கம் செய்து கையெழுத்திட்டு தங்களின் கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத்தேர்வுக்கு வரும்போது ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் விண்ணப்ப கட்டண ரசீதை கொண்டுவரவும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 07.08.2011
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2011
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments