/* ]]> */
Nov 212017
 

ஸ்டீவியா எனும் சீனி துளசி:

steevia

சர்க்கரை நோயாளிகளுக்காகவே, ‘சீனி துளசி’ என்ற இனிப்பு துளசிச் செடி வந்துள்ளது.

வீடுகளில் இச் செடியை தொட்டியில் வளர்க்கலாம்.  மூன்று மாதங்களிலேயே பலன் தர ஆரம்பித்து விடும். இனிப்பு துளசி இலையில் கார்போஹைட்ரேட், மெக்னீஷியம், கால்சியம், விட்டமின் என ஏகப்பட்ட சத்துகள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப் பிரசாதம். இந்த செடியின் தண்டு மற்றும் இலைகள் இனிப்பாக இருக்கும். காபி டீயில் சர்க்கரைக்குப் பதில் , 4 இலைகளைப் போட்டால் போதும்.ஷுகர் டேஸ்டைவிட சூப்பரா இருக்கும்.

இதிலிருந்து மாத்திரை, எண்ணெய் மற்றும் விதவிதமாய் ஸ்வீட் தயாரிக்கின்றனர். சோடாவில் கலந்தும் பயன்படுத்தலாம். வயிற்று உப்புசம் போக்க, ஜப்பானில் இப்பொடியைப் பயன்படுத்துகின்றனர். உலக நாடுகளில் எல்லாம் இந்த சீனி துளசி பகழடைந்து வருகிறது. இதன் பிறப்பிடம், தென் அமெரிக்கா. தாவர இயல் பெயர்’ ஸ்டீவியா ரிபோடயானா’. இதில் ‘0’ கலோரி உள்ளது. பராகுவே பிரேசில் நாடுகளில் அதிகம் வளர்கிறது. இந்தியாவில் மகாராஷ்ட்டிர மாநிலத்தில்தான்  முதலில் அறிமுகமானது. செடி 3 அடி வரை வளரும். மணல் கலந்த களிமண் வளர்ச்சிக்கு ஏற்றது.

முதிர்ந்த இலைகளை 8 மணி நேரம் வெயிலில் உலர்த்தி, பாட்டிலில் அடைத்து வைக்கலாம். ஒரு செடி 5 ஆண்டுகளுக்கு பலன் தரும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இலைகளை அறுவடை செய்யலாம்.

இந்த இலை கலந்து தயாரிக்கப்படும், ஐஸ்கிரீம், சாக்லேட், அல்வா என அனைத்து ஸ்வீட் வகைகளும் அமோகமாக விற்பனையாகிறது. இப்பவே ஸ்டீவியாவை வாங்கி, வீட்ல வளருங்க. இதற்கு அதிக இடம் வேண்டாம். பால்கனியில் கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும். மூன்று மாசத்துல உங்க வீட்டு மருந்து செலவு பட்ஜெட்டைக் குறைச்சிடும்.

இரண்டு  இலைகளை,  தினமும்  மென்றால்,

* தோ வியாதிகள் மறையும்.
*கொலஸ்ட்ரால் குறையும்.

* வாய்ப் புண் மற்றும் வாய் துர்னாற்ற பிரச்சினைகள் நீங்கும்.

* ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

* வயிற்றுப்போக்கு பிரச்சினையைக் குணமாக்கும்.

* ‘ஆன்டிபாக்டீரியா’ வாக வினை புரியும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

*

 

^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>