/* ]]> */
Oct 172010
 
(    இது ப‌ரிச‌ல்கார‌ன் ந‌ட‌த்தும் ச‌வால் சிறுக‌தை போட்டியின் விதிமுறைக‌ளுக்கு உட்ப‌ட்டு எழுத‌ப்ப‌ட்ட‌து. அதை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ இங்கே சொடுக்க‌வும்!  http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html .   )
உங‌க‌ளுக்கு காமினிய‌ தெரியுமா? தெரிஞ்சிருக்காது. காமினி காக‌டியா, ஆற‌டி உய‌ர‌ம், மாட‌ல் உட‌ல்வாகு, கோதுமை நிற‌ம், ஜிம்னாஸ்டிக் சாம்பிய‌ன், ஐ.ஐ.டியில் சீட் கிடைத்தும் பி.ஏ வ‌ர‌லாறு ப‌டிக்கும் ” நினைத்த‌தை முடிப்ப‌வ‌ள்”. ஊட்டியில் உள்ள‌ வ‌ளைவுக‌ளை விட‌ அவ‌ள் உட‌ம்பில் அதிக‌ம். ஊர் விஜ‌ய‌வாடான்னாகூட‌ வாடா போடா ரேன்சுல‌ ந‌ல்லாவே த‌மிழ் பேச‌வா. வ‌ச‌தி எக்க‌ச்ச‌க்க‌ம். அவ‌ங்க‌ முன்னோர்க‌ள் எல்லாம் ம‌ன்ன‌ர்க‌ளாம். நான் அவ‌ ல‌வ்வ‌ர்…..பேரு ப‌ரந்தாம‌ன்..பேரைப் பார்த்தாலே தெரிய‌ல‌ சுத்த‌ க‌ர்நாட‌க‌ டைப்… காமினி பி.ஏ ப‌டிக்கிறாளே அதே காலேஜ்ல‌ ல‌க்ச‌ராரா இருக்கேன். மாண‌வியை ல‌வ் ப‌ண்ண‌லாமா? என்று கோவ‌மாய் கேட்ப‌வ‌ர்க‌ள் இன்னொருமுறை காமினியைப் ப‌ற்றிய‌ வ‌ர்ண‌னையைப் ப‌டிக்க‌வும்! இவ்வ‌ள‌வு வ‌ச‌தியான‌ அழ‌கான‌ புத்திசாலித்த‌ன‌மான‌ காமினி எப்ப‌டி என்னை ல‌வ் ப‌ண்ணான்னு தூத்துக்குடி சிவா லாஜிக் பிழை க‌ண்டுபிடிச்சி ச‌ந்தேக‌ம் கேக்க‌ற‌து என் காதில‌ விழுது. அதுக்கு விடை தெரிய‌ அடுத்த‌ ப‌த்தி ப‌டிக்க‌வும் .
நான் இன்னும் எவ்வ‌ள‌வு கால‌ம் ல‌க்ச‌ர‌ராவே இருக்க‌ற‌து? ஒரு டாக்ட‌ரேட்டாவ‌து வாங்கி அசோசியேட் ப்ரொஃப‌ச‌ராவ‌து ஆனாத்தானே ஆந்த்ராவுல‌ காமினி வீட்டுல‌ போய் பொண்ணு கேட்க‌ முடியும். அத‌னாலே நான் டாக்ட‌ரேட் ஆராய்ச்சி ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சேன். கோஹினூர் வைர‌த்தைப் ப‌த்தி. அங்க‌தான் ஆர‌ம்பிச்ச‌து வ‌ம்பு. கோஹினூர் வைர‌த்துக்கு யாரு சொந்த‌க்கார‌ங்க‌ன்னு தெரியாமதான் அத‌ திருப்பித் த‌ர‌ முடிய‌ல‌ன்னு ப்ரிட்டிஷ் அர‌சாங்க‌ம் சொன்ன‌திலேர்ன்து என் ஆவ‌ல் இன்னும் அதிக‌மாயிடுச்சி. அப்ப‌த்தான் நான் ஒரு அதிர்ச்சிக‌ர‌மான‌ உண்மைய‌ க‌ண்டுபிடிச்சேன். ஆமா , கோஹினூர் வைர‌த்தோட‌ ஒரிஜின‌ல் ஓன‌ர் ந‌ம்ம‌ காமினியோட‌ கொள்ளு கொள்ளு தாத்தா ந‌ர‌சிம்மாஜுலு காக‌டியாதான்.
நான் மெல்ல‌ மெல்ல‌ இந்த‌ உண்மையை ஆதார‌த்துட‌ன் காமினிக்கு நிரூபிக்க‌, நான் ஏதோ அவ‌ள் வாழ்க்கைக்கே ஒரு அர்த்த‌ம் கொடுத்ததைப் போல‌ என்னை ஆராதிக்க‌ ஆர‌ம்பித்தாள் காமினி. கூட‌வே நான் கோஹினூர் வைர‌ம் ப‌ற்றி திர‌ட்டிய‌ த‌க‌வ‌ல்க‌ளையும். அந்த‌ வைர‌ம் அப்ப‌டி இப்ப‌டி ப்ரிட்டிஷ் அர‌சி விக்டோரியாவுக்குப் போய் இப்போது இருக்குமிட‌ம் பிரிட்டிஷ் ம்யூசிய‌ம். நான் அந்த‌ வைர‌த்தைப் ப‌ற்றி சொல்ல‌ சொல்ல‌ காமினி முக‌த்தில் ஒரு புது வைராக்கிய‌ம் . அந்த‌ வைர‌த்தை எப்ப‌டியாவ‌து திரும்ப‌ த‌ன் வீட்டுக்கு கொண்டு வ‌ர வேன்டும் என்று விரும்பினாள். என்ன‌தான் நான் ஆதார‌ங்க‌ள் திர‌ட்டியிருந்தாலும் ஏற்க‌ன‌வே ப‌ல‌ர் முய‌ன்று கூட‌ ஆங்கிலேய‌ அதிகாரிக‌ள் அசைந்து கொடுக்காத‌தால் எப்ப‌டி வைர‌த்தை திரும்ப‌ பெற‌ முடியும் என்ப‌து என் வ‌ர‌லாறு ப‌டித்த‌ மிடில் கிளாஸ் மூளைக்கு எட்ட‌வில்லை. ஆனால் காமினி ஒரு புன்ன‌கை செய்தாள். இர‌ண்டு நாள் க‌ழித்து நானும் அவ‌ளும் ல‌ண்ட‌னுக்கு ப‌ய‌ண‌மானோம்.

ல‌ண்ட‌ன் ம்யூசிய‌த்தில் அந்த‌ கோஹிணூர் மின்னிய‌து.  நானே ப‌க்க‌த்தில் இருந்த‌ அழ‌குச்சிலை காமினியைக்  விட்டு விட்டு அந்த‌ வைர‌த்தைப் பார்த்து  பிர‌மித்தேன். காமினியோ ஏதோ த‌ன் கொள்ளுத்தாத்தாவுக்கே உயிர் வ‌ந்த‌தைப் போல‌ கோஹினூரை பார்த்தாள். அவ‌ள் ஐஐடி மூளை வேலை  செய்ய‌ ஆர‌ம்பித்த‌து. வைர‌த்துக்கு இருந்த‌ லேச‌ர் பாதுகாப்பை அவ‌ள் அறிவு சுல‌ப‌மாய் த‌விடுபொடியாக்கிய‌து. ஒரு நொடியில் நாங்க‌ள் கொண்டு வ‌ந்த‌ போலி வைர‌ம் ம்யூசிய‌த்திற்கும் நிஜ‌ கோஹினூர் காமினி கைக்கும் மாறிய‌து. ஆனால் பிர‌ச்சினையே அப்போதுதான் ஆர‌ம்ப‌ம்… இப்போது இந்த‌ வைர‌த்தை எப்ப‌டி திரும்ப‌ கொண்டு வ‌ருவ‌து? அத‌ற்கும் காமினி ஐடியா வைத்திருந்தாள். காமினிக்கு ல‌ண்ட‌னில் இருந்த‌ ஒரே ந‌ண்ப‌ன் டாக்ட‌ர் சிவா. ஒரு ச‌ர்ஜ‌ரி எக்ஸ்பெர்ட். அவ‌னிட‌ம் முன்ன‌மே காமினி பேசி வைத்திருப்பாள் போலிருக்கிற‌து. ம்யூசிய‌த்திலிருந்து நேராக‌ அவ‌ன் ப்ரைவேட் ஹாஸ்பிட‌லுக்கு போனோம். அங்கே ஒரு ஆப‌ரேஷ‌ன் தியேட்ட‌ரே காமினிக்காக‌ காத்திருந்த‌து. டாக்ட‌ர் சிவா அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் காமினியின் உட‌லுக்குள் அந்த‌ வைர‌த்தை பொருத்தினான். அவ‌ள் இடுப்பு ப‌குதியில் ந‌ட‌ந்த‌ ஆப‌ரேஷ‌ன் அரை ம‌ணி நேர‌ம் கூட‌ எடுக்க‌வில்லை. (எப்ப‌டி வைர‌த்தை உட‌ம்புக்குள் வைத்து ஆப‌ரேஷ‌ன் செய்ய‌ முடியும் என்று லாஜிக் கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ள் “டிக் டிக் டிக் ” “அய‌ன்” போன்ற‌ ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌வும்.  அப்பவும் கன்வின்ஸ் ஆகாதவர்கள் கன்வின்ஸ் ஆகும்வரை அல்லது டிவிடி தேயும்வரை மீண்டும் மீண்டும் பார்க்கவும்!)

காமினி ச‌ர்ஜ‌ரி ம‌ய‌க்க‌த்தில் இருக்க‌ நான் என்ன‌ செய்வ‌தென்றே தெரியாம‌ல் அந்த‌ ஆஸ்ப‌த்திரியில் அங்கும் இங்கும் அலைய‌ அப்போதுதான் டாக்ட‌ர் சிவாவும் காமினிக்கு ம‌ய‌க்க‌ ம‌ருந்து கொடுத்த‌ டாக்ட‌ர் தாம‌ஸும் பேசுவ‌தை ஒட்டுக்கேட்டேன்

“ஏண்டா அந்த‌ ஒரிஜ‌ன‌ல் வைர‌த்தை அவ‌ளுக்குள்ளே வ‌ச்சே ? அதை எடுத்துட்டு ந‌ம்ம‌ டூப்ளீகேட்டை உள்ள‌ போட்டுருக்க‌லாமில்ல‌” ‍ இது தாம‌ஸ்
“நோ தாம‌ஸ்! அது ச‌ரியா இருக்காது ! வைர‌த்தை இவ‌ளை வ‌ச்சே இந்தியா எடுத்திட்டு போயிட‌லாம். அங்க‌ போய் ந‌ம்ம‌தானே வைர‌த்தை எடுக்க‌ணும். அப்ப‌ இந்த‌ டூப்ளிகேட்டை மாத்திட‌ வேண்டிய‌துதான் ! ‍ டாக்ட‌ர் சிவா
“ஸ்மார்ட் ப்ளான் !” ‍ இது தாம‌ஸ்

இதைகேட்ட‌ நான் ப‌த‌றி காமினி இருந்த‌ அறைக்குப் போனேன். ம‌ய‌க்க‌ம் மெல்ல‌ மெல்ல‌ தெளிந்த‌ காமினி என்னைப் பார்க்க‌ நான் ந‌ட‌ந்த‌தை அப்ப‌டியே அவ‌ளிட‌ம்  ஒப்பிக்க‌ காமினியின் முக‌த்தில் க‌வ‌லை ரேகைக‌ள்..

” டார்லிங், இனி நாம‌ இங்க‌ இருக்க‌ கூடாது! த‌ப்பிச்சு போய் ஃப்ளைட் பிடிக்க‌ வேண்டிய‌துதான் ! ”
காமினி சொல்லி முடிப்ப‌த‌ற்கும் செக்க‌ப் செய்ய‌ டாக்ட‌ர் சிவா அங்க‌ வ‌ருவ‌த‌ற்கும் ச‌ரியாய் இருந்த‌து! டாக்ட‌ர் சிவா காமினியை செக்க‌ப் செய்துவிட்டு
” யூ ஆர் ஷேப்பிங் வெல் காமினி!” என்று சொல்லி ந‌க‌ர்ந்தான்

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். நான் அதிர்ச்சியுட‌ன் அவ‌ளுட‌ன் குதித்தேன். க்ரௌண்ட் ஃப்ளோரில் இருந்த‌ அந்த‌ ரூமின் ஜ‌ன்ன‌ல் வ‌ழி குதிப்ப‌து என்க்கே சிர‌ம‌மாய் இருக்க‌வில்லையென்றால் ஜிம்னாஸ்டிக் சாம்பிய‌ன் காமினிக்கு அது ச்சும்மா..

அப்ப‌டி இப்ப‌டி அடித்துப்பிடித்து இர‌ண்டு பேரும் இந்தியா மும்பை ஏர்போர்டில் இற‌ங்கினோம். ஆனால் அங்கேயும் ஒரு அதிர்ச்சி. எங்க‌ளுக்கு முன்னேயே சிவா வ‌ந்திருக்கிறான்…….

எங்க‌ளை ஏர்போர்ட் டேக்சி ஸ்டேண்டிலேயே வைத்து ம‌ட‌க்கிய‌ அவ‌ன்,  அவ‌ன் ந‌ண்ப‌ன் மும்பையில் வைத்திருந்த‌ ஹாஸ்பிட‌லுக்கு ஓட்டிக் கோண்டு போனான். அங்கே வைத்து காமினிக்கு ஆப‌ரேஷ‌ன் செய்து வைர‌த்தை எடுப்ப‌து அவ‌ன் ப்ளான்.” ஹ‌வென் ஃப‌ர்டிலிட்டி க்ளீனிக் என்ற‌ போர்ட் எங்க‌ளை வ‌ரவேற்க‌ நானும் காமினியும் உள்ளே கொண்டு செல்ல‌ப்ப‌ட்டோம்.  காமினிக்கு அவ‌ன்  ம‌ய‌க்க‌ ம‌ருந்து கொடுக்க‌ முற்ப‌ட்ட‌போது காமினி திமிறினாள்..

“சிவா, நீ என்னை க‌ட்ட‌ய‌ப்ப‌டுத்த‌ முடியாது!”

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

காமினி மெல்ல‌ மெல்ல‌ அடி ப‌ணிய‌ என் க‌ண் முன்னாலேயே அவ‌ளுக்கு ம‌ய‌க்க‌ ம‌ருந்து கொடுத்து ஆப‌ரேஷ‌ன் செய்து அந்த‌ வைர‌த்தை வெளீயே எடுத்தான்.என்னை ஒரு அம்மாஞ்சி ல‌க்ச‌ர‌ர் என்ப‌தால் அவ‌ன் ச‌ட்டை செய்ய‌வேயில்லை. ந‌டு ந‌டுவே ஒரு ந‌ர்ஸ் மாதிரி என்னிட‌மே வேலைக‌ளும் சொன்னான் . க‌டைசியில் நான் கெஞ்ச‌ வேண்டா வெறுப்பாய் காமினியின் இடையை மீண்டும் தைத்தான்.

“ஏ ஸ்டுபிட் ல‌க்ச‌ர‌ர்! இவ‌ளுக்கு நினைவு திரும்ப‌ ப‌த்து நிமிஷ‌ம் ஆகும் ! நினைவு வ‌ந்தோன்ன‌ கூட்டிப் போ! நான் வ‌ர‌ட்டா ? “

அவ‌ன் ந‌ட‌க்க‌த்தொட‌ங்க‌ என் ம‌ன‌க்க‌ண்முன் அந்த‌ வைர‌த்துக்காக‌ என் காமினி எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டாள் என்று ஃப்ளாஷ் ஓடிய‌து ( ஹ‌லோ, இது ப்ளாஷ் பேக் இல்லீங்கோ!)

ச‌ட்டென்று சிவாவின் கையில் இருந்த‌ துப்பாக்கியை த‌ட்டி விட்டு அதை நான் கையில் எடுத்தேன். என்னிட‌ம் இது மாதிரி ஸ்ட‌ண்ட் எல்லாம் எதிர்பார்க்காத‌ சிவா திகைக்க‌, நான் ம‌ன‌திற்கும் காமினி நினைவுக்கு வ‌ர‌ இருந்த‌ அந்த‌ ப‌த்து நிமிட‌மும் எந்த‌ ஆப‌த்தும் இல்லாம‌ல் போக‌ வேண்டிக்கொண்டே சிவாவை நோக்கி துப்ப‌க்கி பிடித்தேன்.  ச‌ரியாக ஏழாவ‌து நிமிஷ‌த்திலேயே காமினி கைய‌சைக்க‌, ஒன்ப‌து நிமிட‌த்தில் க‌ண் விழித்தாள். விழித்த‌வ‌ள் துப்பாக்கியும் கையுமாய் என்னையும் கை தூக்கி நின்ற‌ சிவாவையும் பார்த்து ச‌ட்டென‌ நிலைமையை புரிந்து கொண்டாள்.

“ஹேய் சிவா, அந்த‌ வைர‌த்தை என்கிட்ட‌ கொடு! ” அவ‌ள் அத‌ட்ட‌ சிவா த‌யக்க‌த்தோடு வைர‌த்தைக் கொடுக்க‌

“இங்க‌ பார் சிவா, இத‌ இத்தோட‌ விட்டுரு, எங்க‌ளை இனிமே ஃபாலோ ப‌ண்ணா நானே போலீஸ் கிட்ட‌ ச‌ர‌ண்ட‌ராய்டுவேன்.. அப்புற‌ம் உன் ல‌ண்ட‌ன் மெடிக‌ல் லைசென்ஸ் எல்லாம் போய்டும் ! மைண்ட் இட் !”

 காமினி க‌ண்க‌ளில் அன‌ல் க‌க்கி சொன்னாள்

நானும் காமினியும் அந்த‌ ஆஸ்ப‌த்திரியை விட்டு வெளிவ‌ருகையில் நான் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு துப்பாகிக்கியை இன்னும் என் கையில் வைத்திருக்க‌ எங்க‌ளை ஒரு போலீஸ் ஜீப் வ‌ழி ம‌றித்த‌து.

“ஹே ஸ்டாப், கையில‌ என்ன‌ க‌ன்! ஓப‌ன் யுவ‌ர் பேக்ஸ்!”

காமினியின் ஹாண்பேக்கில் கோஹினூர். என‌க்கு ப‌க் ப‌க்கென்று அடித்த‌து.

“ஓ ஸ்வீட் இன்ஸ்பெக்ட‌ர்.. இவ‌ர் எப்ப‌வுமே இப்ப‌டித்தான்… எங்க‌ போனாலும் த‌ன் அழ‌கான‌ ம‌னைவிக்கு ப்ரொட‌க்ஷ‌ன் த‌ர்ர‌துக்காக‌ க‌ன்னோட‌வே சுத்துறார்… “

“லைசென்ஸ் இருக்கா?”

“அதெல்லாம் வ‌ச்சிருக்கார்.. இந்த‌ துப்பாக்கிக்கி லைசென்ஸ் வ‌ச்சு என்ன‌ செய்ய‌ ? க‌ல்யாண‌ம் ஆகி  நாலு வ‌ருஷ‌ம் ஆச்சு.. இன்னும் குழ‌ந்தை இல்லை.. பாருங்க‌ பாருங்க‌ ஃப்ர்டிலிட்டி க்ளீனிக்கா சுத்திக்கிட்டிடருக்கோம்!”

காமினி ச‌ர‌ள‌மாய் இந்தியில் சொல்ல‌ சிரித்தார் இன்ஸ்பெக்ட‌ர்!

போலீஸ் எங்க‌ளை சோத‌னை செய்யாம‌ல் விட்ட‌தா இல்லையா … காமினி எப்ப‌டியாவ‌து த‌ன் ப‌ர‌ம்ப‌ரை சொத்தான‌ கோஹினூர் வைர‌த்தை ஜெயித்தாளா இல்லையா என‌த் தெரிய‌ க‌தையின் க‌டைசி வ‌ரியைப் ப‌டிக்க‌வும்..

“காமினி…  வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

பின்குறிப்பு : ஹி ஹி ப‌ர‌ந்தாமன் யாருன்னு பார்க்க‌ க‌தையின் ஆர‌ம்ப‌த்தில் என்னைப் ப‌ற்றிய‌ அறிமுக‌த்தைப் ப‌டிக்க‌வும்.

ஹேர்பின் குறிப்பு :காமினி கெட்ட‌வ‌ளா என்று கேள்வி எழுப்புப‌வ‌ர்க‌ளுக்கு
“ப‌ர‌ம்ப‌ரை சொத்தை கைப்ப‌ற்றுவ‌து த‌ப்புங‌க‌ளாண்ணா?”

கொசுறு சீன் : எல்லா மசாலா கதைகளும் முதலிரவு காட்சியில் தான் முடிய வேண்டும் என்று ஏற்கனவே எஸ்.பி.முத்துராமன் இலக்கணம் வகுத்திருப்பதால் இந்த சீன் … கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் )

சில நாட்களுக்குப் பிறகு எனக்கும் காமினிக்கும் கல்யாணம் ஆகி முதலிரவு அறைக்குள் காமினி வருகிறாள்…

காமினி : ஏ , கல்யாணம் ஆகாமயே ஃபர்டிலிடி க்ளினிக் கூட்டிப் போன முதல் ஆள் நீயாத்தான் இருக்கும் !
(கொஞ்ச்சம் கொஞ்சலாய் ) ஆமாம், அந்த துப்பாக்கியை எங்க ஒளிச்சு வச்சிருக்க ?

“எந்த துப்பாக்கி ?” எல்லாம் மறந்தவனாய் நான் கேட்டேன்…

ந‌ன்றி விக்கிபீடியா : கோஹிணூர் வைர‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கு

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>