பசுமைபபுரட்சியினால் தான் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைய முடிந்தது என்பதே நிதர்சனமான உண்மை.பயிர் உற்பத்தித்திறனை பல மடங்கு அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நாம் இயற்கை உரங்களை மட்டும் நம்பியிருந்த நிலையினை மாற்றி அதிகளவில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தியும்,நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிட்டும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியும், புதிய தொழிலநுட்பங்களைப் புகுத்தியும், இத்தகைய சாதனையை நிகழ்த்தி உள்ளோம்.
கோடிக்கணக்கான மக்களின் பசியைப் போக்கியுள்ள நவீன வேளாண்மையின் தந்தையும்,பசுமைப்புரட்சியின் தந்தையுமான வேளாண்விஞ்ஞானி நார்மன் போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்தியாவும் பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.[இந்தியாவின் நண்பர் போர்லாக்கின் நினைவு தினமான செப்டம்பர் 13ல் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.]
தற்போதைய நிலை: இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தி2009 புள்ளிவிபரப்படி 233.88மில்லியன் மெட்ரிக்டன்.மேலும் உலக அளவில் அரிசி உற்பத்தியில்[99.8மி.டன்] இரண்டாம் இடத்திலும் உள்ளோம்.கோதுமை உற்பத்தி80.58மி.டன்னாகவும்,கரும்பு உற்பத்தி271.5மிடன்னாகவும் உள்ளது. இந்த உற்பத்தி1950-51ல் இருந்ததைவிட பல மடங்குஅதிகம் என்பதையும இதற்கு முக்கிய காரணம் பசுமைப் புரட்சியே என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.இந்த சாதனை போதுமா?
தொடரும்:
agri.S
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





Please comment with your real name using good manners.