வேலாயுதம் விமர்சனம் – வேலாயுதம் திரை விமர்சனம் – வேலாயுதம்சினிமா விமர்சனம் – வேலாயுதம் திரைப்பட விமர்சனம்
படம் : வேலாயுதம்
நடிப்பு : விஜய், ஜெனிலியா, ஹன்சிகா
இசை : விஜய் ஆண்டனி
இயக்கம் : ஜெயம் ராஜா
தயாரிப்பு : ஆஸ்கார் ரவிச்சந்திரன்
விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்து தீபாவளிக்கு ரிலீசான வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். சூர்யாவின் ஏழாம் அறிவோடு தியேட்டர்களுக்கு போட்டி போட்டு உலகெங்கும் ரிலீசாகிவிட்டது வேலாயுதம் !
கதை :
ரெண்டு ட்ராக் . ஜர்னலிஸ்ட் ஜெனிலியா ஒரு அடிதடி கும்பலிடம் சிக்குகையில் வேலாயுதம் பெயரை இறந்தவன் உடம்பில் குறிக்கிறார். இன்னொரு ட்ராக் , கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் சந்தோசமான பால்காரன் விஜய். சந்தர்ப்பவசமாய் சென்னை வருகிறார்.
சிட்டியில் வில்லன் ஒருவனின் அக்கிரமம் எல்லை மீறி போகிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஜெனிலியா, இந்த சதிக்காரனை கண்டுபிடித்து சாகடிக்க வேலாயுதம் வருவான் என்று துண்டு பிரசுரங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் கட்டுரை மூலம் பரப்புரை செய்கிறார்.
இந்த சமயம் பார்த்து அப்பாவி விஜய் கோயிலில் வந்து அர்ச்சனை செய்யும் போது பெயர் என்ன என்று அய்யர் கேட்க, வேலாயுதம் என்று அவர் சொல்ல, அய்யர் உட்பட சாமி கும்பிட வந்தவர்கள் எல்லோரும்,,,,ஆ! வேலாயுதம்…வேலாயுதம்…என்று பிரமிக்கிறார்கள். வில்லன் வைத்த பாம் தற்செயலாக வெடிக்க முடியாமல் போகும் போதெல்லாம் அங்கே வேலாயுதம் நிற்கிறார். இதனால் வேலாயுதம் பெயரும், முகமும் பிரபலமாகிவிடுகிறது.
கற்பனை பாத்திரம் நிஜமாய் வந்துவிட்டது என்று சந்தோசப்படுகிறார் ஜெனிலியா. இந்த சந்தோசத்தை விஜய்யை நேரில் சந்தித்தும் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் விஜய் அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்குகிறார்.
ஊருக்குப்போகும் முடிவில் பணத்தை எடுப்பதற்காக சிட்பண்ட் செல்கிறார். பணம் இல்லை என்று சிட்பண்ட் ஏமாற்றுகிறது. தங்கையின் திருமணம் நின்றுவிடுமே என்று கொதிக்கிறார் விஜய். அப்புறமென்ன…ஜெனிலியா விரும்பும் வேலாயுதமாக மாறுகிறார். இதனால் வில்லன் வேலாயுதத்தை பழிவாங்க துடிக்கிறார். இந்த சமயத்தில் ஊரில் வேலாயுதம் தங்கையின் திருமணம் நடக்கிறது. சமயம் பார்த்து வேலாயுதத்தை பழிவாங்கத்துடிக்கும் வில்லன், திருமண பந்தலில் பாம் வைத்து விடுகிறார். இதில் தங்கை இறந்துவிட இன்னும் வீரியமாக புறப்படுகிறார் வேலாயுதம்.
ஹன்சிகா சிக்கென்று அத்தை மகளாய் வந்து டூயட்டுகளில் பட்டை கிளப்ப, ஜெனிலியாவுக்கு தியாகம் செய்யும் ரோல்.
நடிப்பு :
விஜய் :
விஜய்க்கு பழக்கப்பட்ட ரோல். ஆனாலும் ஏதோ ஒரு வெரைட்டி கொடுக்க ட்ரை பண்ணியிருக்கிறார். பாடல் காட்சிகளில் துறு துறு விஜய்.சொன்னா புரியாது பாடலில் தியேட்டரே அதிர்கிறது. அது விஜய்க்கு இன்னும் உள்ள மாஸிற்கு சாட்சி. “ரத்தத்தின் ரத்தமே” பாடல் விஜய் ரசிகர்களுக்கென்றே உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் உறுத்தாமல் கதையோடு நகர்கிறது.
ஜெனிலியா : ஹிந்தியிலும் தமிழிலும் மார்க்கெட் உள்ள பெண் ஏன் தமிழில் மட்டும் ஷோபிக்க முடியவில்லை தெரியவில்லை. இதிலும் தியாகி ரோல் தான். கூடவே நடிக்க முயற்சிக்கும் காட்சிகளில் முகபாவம் வேறு லூசுப்பெண் இமேஜை விட்டு வெளிவர மறுக்கிறது.
ஹன்சிகா : ஹன்சிகாவுக்கு வேளாயுதம் ஒரு பெரிய மாஸ் பிரேக் தான் ! விஜயுடன் டூயட்டுகளில் தூள் கிளப்புகிறார். ஏதோ நடிக்க வேறு ஆரம்பிச்சுருக்கு பாப்பா ! வாழ்த்துவோம் !
சந்தானம் : காமெடி காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார். பொறம்போக்கு பொழுதுபோக்குன்னு அவர் வார்த்தைகளை வச்சே டமிங் வெடி வெடிக்கிறார்.
ஒளிப்பதிவு : சேசிங்க் காட்சிகளில் பின்னியெடுக்கிறது கேமரா. ஆனால் கிராமத்து காட்சிகளில் இன்னும் ரம்மியம் கூட்டியிருக்கலாம்.
இசை : விஜய் ஆண்டனிக்கு இசை மெச்சூரிட்டிக்கு சாட்சி வேலாயுதம் . “மொளச்சு மூணு எலையும் விடல” வில் கிராமியை இசையில் கலக்கி சில்லாக்ஸ், மாயம் செய்தோவில் வெஸ்டர்னில் கலக்கி “சொன்னா புரியாது வில் டப்பாங்குத்துவில் இறங்கி , சூப்பர் வெரைட்டி கொடுத்திருக்கிறார் ! சபாஷ்!
இயக்கம் : தம்பியை மட்டுமே இயக்கிப் பழகிய ராஜாவுக்கு வேலாயுதம் ஒரு புது மாஸ் களம். சவாலாய் எடுத்து செய்திருக்கிறார். சண்டை காட்சிகளை சரியான இடத்தில் புகுத்தி சென்டிமென்டை சரிவர கலந்து விஜயின் மாஸ் அப்பீலை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் ராஜா. ஆனால் சில இடங்களில் விஜயின் பழைய பட காட்சிகளைப் போலவே வரும் ரிப்பிடீஷனை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும், விஜயை வைத்து ஒரு மாஸ் என்டர்டெய்னரை தந்திருக்கிறார்.
பார்க்கலாமா ?
1. நீங்கள் விஜய் ரசிகரா ?
2. நீங்கள் மசாலா பிரியரா?
3. ஒரு மூன்று மணீ நேரம் சூப்பர் டைம் பாஸ் வேணுமா?
இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு உங்கள் பதில் ஆமாமாக இருந்தால், உடனே பார்க்கலாம் வேலாயுதம், டிக்கெட் கிடைத்தால்!
ஃபைனல் வெர்டிக்ட் : வேலாயுதம் வெற்றி வேல் !
Tags : tamil actor, tamil hero vijay, tamil movie, velayudham cinema review, velayudham movie review, velayudham mp3 songs, velayudham vimarsanam, velayutham + vijay + genelia, velayutham movie review, velayutham mp3, velayutham mp3 download, velayutham songs download, velayutham vijay, vijay, அம்மா, அர்ச்சனை, கை, சினிமா, சினிமா விமர்சனம், நடிகர் விஜய், பத்திரிக்கை, விஜய், விமர்சனம், வேதம், வேலாயுதம், வேலாயுதம் + ஜெனிலியா, வேலாயுதம் + விஜய், வேலாயுதம் + ஹன்சிகா, வேலாயுதம் mp3, வேலாயுதம் கதை, வேலாயுதம் ப்ரிவ்யூ சினிமா விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ திரைப்பட விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ விமர்சனம், வேலாயுதம் விமர்சனம், வேலாயுதம் சினிமா,
English summary : A detailed cinema review of vijay starrer tamil movie velayudham or velayutham where genelia and hansika motwani have actred with tamil actor vijay in this latest vijay movie velayutham. this also has velayutham story and velayutham vimarsanam and about velayutham mp3 songs release and velayutham mp3 songs download
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments