/* ]]> */
Nov 012011
 

V
   ரீமேக் படங்கள் மட்டுமே இயக்கிய ராஜா , கில்லி போன்ற ரீமேக் படங்களால் உச்சத்தை எட்டிய விஜய் இருவருடனும்  இணைந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் ரைட்ஸ் வாங்காமல் தயாரித்திருக்கும்  ரீமேக் படமே “ வேலாயுதம் ” … தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து கொண்டிருந்த விஜய்க்கு இந்த படம் சின்ன கமர்சியல் ப்ரேக் 

அக்கிரமம் செய்பவர்களை அழிப்பதற்கு “ வேலாயுதம் ” வருவான் என்று பத்திரிக்கையாளர் ஜெனிலியா கதை கட்டி விட , இதற்கிடையில் தான் உயிரையே வைத்திருக்கும் தங்கையின்  கல்யாண செலவுக்கு சீட் பணத்தை வாங்க சென்னைக்கு வருகிறார் உண்மையான  வேலாயுதம் விஜய் …விஜய் அக்கிரமக்காரர்களை அழித்தாரா ? அவர் தங்கையின் கல்யாணம் நடந்ததா ? என்பதே மீதி கதை

பல வெற்றிப் படங்களின் சீன்களை ஒரு ஜாடியில் போட்டு குலுக்கி அதில் சிலவற்றை பொறுக்கி எடுத்ததே படத்தின் திரைக்கதை … விஜய்யின்  வழக்கமான பாட்டு , டான்ஸ் , பைட்டு , காமெடி , தங்கை சென்டிமென்ட் என போகிறது படம் …
v

விஜய் தனக்கேற்ற டெயிலர் மேட்   கதாபத்திரத்தில் ஜொலிக்கிறார் … எண்ணை வழியும் கருப்பு முகத்தோடு சுற்றுபவர் பாடல்களில்  மட்டும் வெளுப்பாக இருக்கிறார் … சூர்யா சிக்ஸ் பேக்கை வயிற்றில் காட்டினால் விஜய் த்ரீ பேக்கை விலா எலும்பில் காட்டி வெற்றுடம்புடன் எதிரிகளை அடிக்கிறார் … தங்கை இறந்தவுடன் அழும் இடத்தில் கொஞ்சம் நன்றாகவே நடிக்கிறார் …

விஜய்யை சுற்றி சுற்றி வரும் அத்தை பெண்ணாக கொழுக் மொழுக் ஹன்சிகா … ம்ம் எங்களுக்கும் தான் கிராமத்துல அத்தை பொண்ணு இருக்கு , ஏம்பா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க … பாடல்களில் தொப்பையை காட்டுவதை தவிர இவருக்கு பெரிதாக வேறொரு வேலையுமில்லை …
V
பொதுவாக லூசு பொண்ணு போல நடிக்கும் ஜெனிலியாவுக்கு இதில் சீரியஸ் வேடம் … அம்மணி முக பாவங்களில் ஸ்கோர் செய்கிறார் … தங்கையாக சரண்யா பெர்பெக்ட் … சூரி ஆரம்பித்து வைக்கும் காமெடியை சந்தானம் டேக் ஓவர் செய்த பிறகு படம் சூடு பிடிக்கிறது…

சில படங்களில் நிறைய வில்லன்களை வைத்து வெறுப்பேத்துவார்கள் , ஆனால் இதில் உள்துறை அமைச்சராக வரும் வில்லனே குண்டு வைப்பது , கள்ள நோட் அடிப்பது , பெண்களை கடத்துவது என்று எல்லா அக்கிரமங்களையும் செய்வதாக காட்டி வெறுப்பேத்துகிறார்கள்…காதெல்லாம் முடி வச்சுகிட்டு , கண்ண கண்ண உருட்டிக்கிட்டு வர கார்ட்டூன் கேரக்டரை எங்கப்பா புடிச்சீங்க ?  இது பத்தாதுன்னு பாகிஸ்தானிலிருந்து வந்து  சென்னையில் குண்டு வைக்கும் டெர்ரரிஸ்ட் வில்லன் வேற … விஜயகாந்தும் , அர்ஜுனும் படங்களில் நடிக்காததால் விஜய் இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்திருப்பார் போல …
V

விஜய் - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன … அதிலும் சரியான இடங்களில் பாடலை பொறுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார்கள்

பழைய காமெடி தான் என்றாலும் விஜய்யின் கோழி சேசிங் சீனில் ஆரம்பித்து சூரி , சந்தானம் உதவியில் விறுவிறுவென போகிறது முதல் பாதி படம் … விஜய் கற்பனை வேலாயுதமாக இருந்த போது உள்ள பரபரப்பு இரண்டாவது பாதியில் உண்மையான வேலாயுதமாக மாறி பறந்து , பறந்து சண்டை போடும் போது புஸ்சென்று போய் விடுகிறது …

விஜய் பாணி படமென்றாலும் படம் ஆரம்பித்து பதினைத்து நிமிடங்கள் கழித்தே விஜய் வருவது ,அரைமணி நேரம் கழித்து  முதல் பாடலும் , முக்கால் மணி நேரம் கழித்தே முதல் பைட்டும் இருப்பது , விஜய் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசுவது , கடைசியில் குத்து பாடல் வைக்காமல் செண்டிமெண்ட் பாட்டு வைத்தது இப்படி சில வித்தியாசங்கள் காட்டியிருக்கிறார்கள் … மற்றபடி பி ,சி சென்டர்களில் படம் ஒடுமென்றாலும் வேலாயுதத்தை நீளாயுதமாக இல்லாமல் கொஞ்சம் ட்ரிம் செய்து , புதிதாக யோசித்து விறுவிறுப்பான சீன்களை வைத்திருந்தால் கில்லி போக்கிரி வரிசையில் விஜய்க்கு மிகப்பெரிய  வெற்றிப்படமாக அமைந்திருக்கும் … ” நண்பன் ” கை  கொடுப்பானா ? பொங்கலுக்கு பிறகு பார்க்கலாம் …

ஸ்கோர் கார்ட் : 41 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>