/* ]]> */
May 052014
 

வேதிகாவுக்கு சிம்புவுடன் காதல் இல்லை:

ved
‘பரதேசி’ படத்தில் ஹீரோயினாக நடித்த வேதிகா வெகு அழகாக தமிழ் பேசுகிறார். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட இவர், வசிப்பது மும்பை என்றாலும், தமிழ் மீது இவர் கொண்ட பற்றுதான், இப்படி சரளமாக தமிழ் பேச வைக்கிறது. இளையராஜாவின் மெலடியில் மனம் லயித்ததால், தமிழ் மீது பற்றும் , தமிழ்ப் பேச்சும் வளர்ந்தது, என்கிறார். ஏ.ஆர் ரஹ்மான்கூட இவருடைய தமிழ் வெகு நன்றாக இருப்பதாகக் கூறினாராம். ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஃப்ரெஞ்சு, தமிழ். இந்தி என பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழ் பேசும் சுகமே தனி என்று சொல்கிறார்.
‘காவியத் தலைவன்’ படத்தில் சித்தார்த்துடன் நடிக்கும் இவர், சித்தார்த் சினிமாவின் மீது கொண்ட ஈடுபாட்டையும், அவருடைய சினிமா பற்றிய அறிவையும் வியந்து பாராட்டுகிறார். ‘கையில் எத்தனை படம் வைத்திருக்கிறோம் என்பது பெரிதல்ல. ஆனால் நல்ல நல்ல கேரக்டர்கள் பண்ண வேண்டும் என்பதே முக்கியம், என்கிறார். இப்போது கையில் ஒரு தமிழ்ப் படமும், 2 மலையாளப் படங்களும் இருக்கின்றன. எல்லாமே நல்ல படங்கள். ‘பரதேசி’ யின் ‘அங்கம்மா’ பாத்திரம் போல நடிப்புக்குத் தீனி போடும் பாத்திரங்களாக இருந்தால், டைரக்டர் யார், ஜோடி யார், என்று பார்க்காமல், கால்ஷீட் கொடுக்க ரெடி, என்கிறார். இப்போது சினிமாவில் புதுப்புது இளம் டைரக்டர்கள் கலக்குகிறார்கள், என்கிறார். பெரிய பெரிய நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறார். அஜய் தேவ்கனுடன், ஒரு இந்திப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு நழுவிப் போனதை எண்ணிக் கவலைப்படுகிறார்.
சிம்பு தனக்காக சிபாரிசு செய்யவேண்டும் என எதிர்பார்க்கவில்லை எனக் கூறும் இவர், நான் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்றால் அவரே கூப்பிடப் போறார். ‘காளை’ படத்தில் ‘குட்டிப் பிசாசே” பாட்டுக்கு நனமாடி சிம்புவின் ஸ்டெப்ஸ்க்கு ஈடுகொடுத்து அப்ளாஸ் வாங்கியதாக சொல்கிறார். சிம்புவின் வேகமான டான்ஸ் மூவ்மென்ட்ஸுக்கு ஈடுகொடுபப்து அவ்வளவு சுலபமா என்று வியக்கிறார்.
தனக்கு சிம்புவுடன் காதல் இல்லை என்கிறார். சிறு வயதில் பலர் என்னிடம் காதலைச் சொல்லியிருக்கிறார்கள்; கல்லூரியில் படிக்கும்போது ஒரு பையனை காதலித்தேன், ஆனால் அந்த வயதின் இனக் கவர்ச்சிதான் அது என்பதை பிறகுதான் புரிந்துகொண்டதாகக் கூறுகிறார்.
^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>