வேட்டை விமர்சனம் – வேட்டை சினிமா
விமர்சனம் - vettai vimarsanam
நடிப்பு : மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால், தம்பி ராமையா
தயாரிப்பு : சுபாஷ் சந்திர போஸ், ரான்னி ஸ்க்ரூவாலா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
எடிட்டிங்க் : அந்தொனி கோன்ஸ்லேவ்
கதை , திரைக்கதை : லிங்குசாமி
இயக்கம் : லிங்குசாமி
கதை :
போலீஸ் அப்பா இறக்க வேலை கோழை மகனான அண்ணன் மாதவனுக்கு கிடைக்கிறது. தயங்கும் அவருக்கு தைரியம் கொடுத்து டூட்டியில் ஜாயின் செய்ய வைக்கிறார் தில் தம்பி ஆர்யா. ரவுடிகளிடம் அவருக்கு பிராப்ளம் ஏற்படும்போதெல்லாம் இவர் டிஷூம் டிஷூம் செய்து காப்பாற்றுகிறார். வில்லன்களை பந்தாடுகிறார். இதனால் மாதவனுக்கு டிபார்ட்மென்டில் உயரதிகாரி ( நாசர் ) பாராட்டு கிடைக்கிறது.
அதோ போல் சமீராவின் தில்லைப் பார்த்து இவர்தான் தன் அண்ணனுக்கு ஏற்றவர் என அவரை அண்ணனுக்கு செட் செய்து, கூடவே அவர் தங்கை அமலா பாலுடனும் ரொமான்ஸ் செய்கிறார். சமீரா இதை எதிர்க்க சூப்பராய் கேம் ஆடி அவரையே அமலா பாலை திருமணம் செய்ய கெஞ்ச வைக்கிறார்.
போகப் போக தாங்கள் அழிக்கப்படுவது போலீஸ் அண்ணனால் அல்ல, பின்னால் இருக்கும் தில் தம்பியால் என வில்லன்களுக்கு புரிகிறது. அடுத்து அவர்கள் செய்யும் சதியும் அதை அண்ணன் தம்பி ரெண்டு பேரும் எப்படி நீட்டாய் முடிக்கிறார்கள் என்பது தான் கதை.
நடிப்பு :
மாதவன் : பயந்த போலீசாய் வருகிறார். நள தமயந்திக்கு பிறகு இது மாதிரி வேஷம். இயல்பாய் பொருந்துகிறார். சமீரா ரெட்டி ரொமான்ஸ் சீன் கள் பரவாயில்லை ரகம் தான் . ஒரு காலத்தில் ரொமான்ஸ் கிங்க் இவர்? வாட் ஹாப்பண்ட் மாதவன்?
ஆர்யா : அதிரடி வேடம். ப்ளஸ் கில்லி தம்பி வேடம். கில்லியாய் அண்ணனை வழிநடத்தி சமீராவை ஏமாற்றி அமலா பாலை ரொமான்சில் கவிழ்ப்பதில் சூப்பர். ஆனால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் பெட்டராய் செய்திருக்கலாம். இந்த ரோலுக்கு பரத் இன்னும் பொருந்தியிருப்பாரோ என எனக்கு ஒரு எண்ணம்.
சமீரா ரெட்டி :
வழக்கமாய் காட்ட வேண்டியதை காட்டுவதோடு இந்த படத்தில் கொஞ்சம் வசனமும் கொடுத்திருக்கிறார் லிங்குசாமி. அதை சமீரா சரியாகவே செய்திருக்கிறார்.
அமலா பால் :
அமலா பாலுக்கு இது நல்ல திருப்பம். ஆர்யாவுடன் ரொமான்ஸ் காட்சிகள் ஜில். அக்கா சமீராவுடனும் நல்ல கெமிஸ்ட்ரி . மாதவன் சமீரா கல்யாண காட்சியில் ஆர்யாவுடன் சேர்ந்து இவர் அடிக்கும் கூத்துக்கள் சூப்பர்.
இசை :
யுவனுக்கு இன்னொரு வேஸ்ட் படம். யுவன் இசை குவாலிடி சரிந்து கொண்டே இருக்கிறது. அவர் ஒரு நல்ல ஹிட் ஆல்பம் கொடுத்து கொஞ்ச நாள் ஆச்சி!
கேமரா :
சண்டை காட்சிகளில் மட்டும் தானிருக்கிறேன் என காட்டுகிறார் நீரவ். மற்றபடி கல அண்ட் ஆம்பியன் பல காட்சிகளில் நன்றாக வந்திருக்கு.
இயக்கம் :
ரன்னில் ஓட வைத்து பையாவில் வண்டி ஓட்ட வைத்த லிங்குசாமி இதில் ஒரு ஹீரோவை பயப்பட வைத்து இன்னொரு ஹீரோவை பாய வைத்து சென்டிமென்ட் மசாலா கொடுத்திருக்கிரார். அதில் ஓரளவு ஜெயித்தாலும் , இன்னும் கொஞ்சம் விறு விறு கூட்டியிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது!
ப்ளஸ் :
நேர்த்தியாக காட்டப்பட்டிருக்கும் அண்ணன் தம்பி பாசம்
ஆர்யா அமலா பால் காட்சிகள்
மைனஸ்
டிவி சீரியல் டைப் செக்ண்ட் ஹாஃப்
அருதப் பழசான க்ளைமேக்ஸ்
பார்க்கலாமா ?
மாதவன், ஆர்யா, சமீரா, அமலா இந்த நாலு பேரில் யாரையாவது பிடித்தால்
ஃபைனல் வெர்டிக்ட் :
வேட்டை – பெரிய டீம் ஆனா சின்ன வேட்டைதான் !
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments