/* ]]> */
Jun 132012
 

வெள்ளை நாகம் கனவில் வந்தால்-  கனவு பலன்கள் -  kanavu palangal

 

இது நமது வாசகி நமக்கு அனுப்பி வைத்த கனவின் பலன் ( பெயர் மறைக்கப்பட்டுள்ளது !)

White-Snake-kanavu palan paambu kanavil vanthaal enna palan

White-Snake-kanavu palan paambu kanavil vanthaal enna palan

sir,nan netru early morning oru kanavu kanden.enga veetukku pakathula oru 6adi nelamulla wellai nagam onru ponathu. Athanai ellorum serthu virattinom. Nanga mendum vetuku warumpothu innumoru wellai nagan padam edukondirukuthu. Konja nerathil antha paambu enga veetuku vandu suddena chinnadanadu.pirahu nanga veetukku vandutom.then oru paambaati vandu magudi uduraru.chinnadana paambu  wire maadiri urumarik kidakku. Paambaati magudi udumpodu anda wire nayaga maari oodi vandu enga veetukkul vara try pannudu.but nan veetukkulla vara widala.inda kanavin palan enna?

 

இந்தக் கனவு ஒரு ஆபத்தை முன் கூட்டியே அறிவிக்கும் ஒரு முன்னோடியாகவே தோன்றுகிறது. தொடர்ந்த மனக்குழப்பத்துக்கும் மன சஞ்சலத்துக்கும் நீங்கள் சமீப காலமாக ஆளாகியிருக்கிறிர்கள் என காட்டுகிறது.
வெள்ளை நாகம் என்பது பொதுவாகவே எதிர்காலத்தை குறிக்கும். ஆகவே எந்த வித புது முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல் படுங்கள் ! பாம்பாட்டியின் முகம் உங்களுக்குத் தெரிந்த முகமா இல்லையா என நீங்கள் குறிப்பிடவில்லை. அந்த பாம்பாட்டியின் ஜாடை நினைவிருந்தால் யோசித்து அவர் உங்கள் உறவினர்களுள் யாரை மாதிரி இருந்தார் என்பதை ஆராயுங்கள். நிச்சயம் அந்த உறவினர் மூலம் உங்களுக்கு வரக்கூடிய ஆபத்து விலகும். கனவின் இறுதியில் நீங்கள் அந்த பாம்பை உங்கள் வீட்டுக்கு வர முடியாமல் செய்திருப்பதும், மேலும் பெரிதான பாம்பு சின்னதானதும் நல்ல குறிகள். அவை உங்கள் ஆபத்தை நீங்கள் எப்படியும் வென்று விடுவீர்கள் என்பதை குறிக்கிறது!
ஆனாலும் இரண்டு பாம்புகள் என்பது தொடர் ஆபத்தைக் குறிக்கிறது. ஆகவே நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது !
 நீங்கள் உங்கள் குடும்பத்தோடு உங்கள் இஷ்ட தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் ! நல்லது நடக்கும் !
- அபி
மூன்றாம் கோணம்
உங்கள் கனவின் பலன் வேண்டுமா ? உங்கள் கனவுகளை moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>