/* ]]> */
May 242020
 

வெற்றிலை லட்டு- செய்வது எப்படி?

betel laddu

தேவை:

தேங்காய்த் துருவல்-1/1/2 தம்ளர்; கன்டென்ஸ்டு மில்க்- ½ தம்ளர்; வெற்றிலை-5; வெண்ணெய்-1 மேஜைக் கரண்டி, குல்கந்து, டூட்டி ஃப்ரூட்டி, நெய்.

செய்முறை;

வெற்றிலையைக் கழுவி, சுத்தமாக துண்டுகளாக்கி , கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெண்ணெய் போட்டு உருகியதும், தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

கூடவே, அரைத்த விழுது சேர்த்து மீண்டும் கிளறிக்கொண்டே இருக்கவும். இடையிடையே நெய் சேர்க்கவும். கலவை கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.

கையில் நெய் தடவி கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து தட்டி, அதன் நடுவில் குல்கந்து,  ‘டூட்டி ஃப்ரூட்டி’ வைத்து சுற்றிலும் மூடி உருட்டவும். இந்த உருண்டையை தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும்.

வித்தியாசமான சுவையில் ‘பான் லட்டு’ தயார்.

*********************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>