/* ]]> */
Oct 022011
 
vedi

vedi

 அவன் இவன் படத்தில் வித்தியாசமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற விஷால் பிரபு தேவாவுடன் கை கோர்த்து தன் வழக்கமான ஆக்சன் பார்முலாவிற்கு திரும்பியிருக்கும் படம் ” வெடி ” … தங்கை செண்டிமெண்ட் , போலீஸ்  – தாதா மோதல் , பிளாஷ்பேக்கில் உடையும் சஸ்பென்ஸ் , குத்து பாட்டு , காமெடி   என மசாலா  படத்திற்குரிய அத்தனை சமாச்சாரங்கள் இருந்தும் வேகம் குறைந்ததால் டல்லடிக்கிறது வெடி …

வழக்கமான ஹீரோ – வில்லன் சேசிங் கதையை இடைவேளை வரை சஸ்பென்சுடன்  நகர்த்தி பின் விஷால் ஏன் கொல்கட்டா வந்தார் , அவருக்கும் அவர் காப்பாற்றும் ஐஸ்வர்யாவுக்கும் என்ன உறவு , அவரை ஏன் வில்லன் ஆட்கள் துரத்துகிறார்கள் என்று ஒவ்வொரு முடிச்சையும் வழக்கம் போல பிளாஷ்பேக்கில் அவிழ்க்கிறார்கள் …

முதல் காட்சியிலேயே பெரிய சண்டைக்கான ஸ்கோப் இருந்தும் ஒரே அடியில் முடித்து விட்டு அடுத்த காட்சிக்கு தாவும் போதே நமக்கு கொஞ்சம் நிம்மதி வருகிறது … விஷால் பாலாவின் பட்டறைக்கு போய் வந்தது நடிப்பில் நன்றாக தெரிகிறது விறைப்புடன் இருந்தாலும் வில்லன் சியாஜி ஷிண்டேவை உயிர்  பயம் காட்டி அலைய விடும் போது புன்னகைக்க வைக்கிறார் … வழக்கம் போல சண்டைக்காட்சிகளில் எதிரிகளை பந்தாடுகிறார் … இவரிடம் எவ்வளவு அடி வாங்கினாலும் அடியாட்கள் அடுத்த சண்டைக்கு எப்படியோ பிரெஷ்ஷாக   வந்து மறுபடியும்   உதை  வாங்குகிறார்கள் …

vis

இவர் உயரத்திற்கு பொருத்தமான சமீரா ரெட்டியை ஹீரோயினாக்கியது நடனக்காட்சிகளில் விஷாலுக்கு நிம்மதி கொடுத்திருக்கும் … சமீரா ஆறடியில் கொஞ்சம் ஆண்மை சாயலில் இருந்தாலும் அசத்தல் … க்ளோஸ் அப் காட்சிகள் பயமுறுத்துகின்றன … மேக் அப்  மேன் யாரோ ?… இந்த மாதிரி படத்துல ஹீரோயினுக்கு நடிக்கறதுக்கு  பெரிசா என்ன இருக்கும் ? …

விவேக் யாரையாவது இமிடேட் செய்து இரிடேட் செய்யாமல் நடித்தது நலம்  … இவர் பேசுவதை விட உடலெங்கும் பலூனை சுத்திக் கொண்டு இளைய திலகம் பிரபு போல இவர் செய்யும் சேட்டைகள் சிரிக்க வைக்கின்றன … படத்தின் முதல் பாதி நகர்வதற்கு இவர் காமெடி கொஞ்சம் கை கொடுக்கிறது …

விஷாலின் தங்கையாக வரும் பூனம் அழகாக இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார் … சியாஜி சிண்டே நன்றாக நடித்திருந்தாலும்  வட இந்திய தோற்றம் அவருடைய தூத்துக்குடி வில்லன் கேரக்டரை துவம்சம் செய்கிறது … என்று தணியும் இந்த தமிழ் பட வில்லன் பஞ்சம் ?…

pra
பெரிய சண்டை வருமோ என எதிர்பார்க்கும் இடத்தில் அதை தவிர்த்திருப்பது உத்தமம் … விஷால் வில்லனுக்கு விஷ ஊசி போட்டதாக சொல்லி  உயிரை காப்பாற்றி கொள்வதற்காக அலைய விடும் காட்சிகளில்  ஊர்வசி , ஸ்ரீமன் , பாண்டு இவர்கள் மூவரையும் வைத்து பிரபு தேவா நன்றாக கிச்சு கிச்சு மூட்டுகிறார் … கதை பழசாக இருந்தாலும் அதை புதுசு போல விறுவிறுப்பாக காட்டுவதே ஆக்சன் படங்களின் ஆணிவேர் … அதரப் பழைய கதைக்கு பிரபு தேவா தன் பாணியில் காமெடி , ஆக்சன் மருந்தை  ஆங்காங்கே கலக்கியிருந்தாலும்  நிறைவாக  இல்லாததால் வெடி முழுசா வெடிக்கல  … போக்கிரி படத்திற்கு பிறகு தமிழில் எதுவும் ஹிட் கொடுக்காத பிரபு தேவா தெலுங்கு  படமான ” சௌர்யம் ” கதையை தேர்ந்தெடுத்தது சௌர்யமாக  இல்லை  …

இந்த மாதிரி படங்களில்  லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் போலீசாக இருந்து கொண்டு  ஒரு தகவலும்  சொல்லாமல் தங்கைக்காக திடீரென விஷால் கொல்கொத்தா சென்று விடுவது , கிளைமாக்சில் ஏ.சி.பி யான விஷால் இறந்து விட்டதாக வில்லன் டி.வி. யில் விளம்பரம் கொடுத்து அவர் தங்கையை பிடிப்பது என்று லாஜிக் சொதப்பல்கள் ஏராளம்  …

பிரபு தேவா – விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்களும் சொல்லும் படி பெரிதாக இல்லாததும் ஒரு குறை … ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை … இரண்டே மணி நேரத்தில் முடிந்து விடுவதால் பொழுதுபோக்கை மட்டும் மனதில் வைத்து பார்ப்பவர்களுக்கு படம் ஓரளவு பிடிக்கலாம் … இருப்பினும் காவல்துறையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட சாமி , சிங்கம் , தபங் ( ஹிந்தி ) போன்ற கமெர்சியல் ஆட்டோ பாம்களை பார்த்த நமக்கு இந்த வெடி வெறும் பிஜிலி வெடியாகவே தெரிகிறது …

 

ஸ்கோர் கார்ட் : 39

( இந்த பதிவில் இருந்து அறிமுகம் )

v>

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>