/* ]]> */
Apr 222011
 

jayalalitha_karunanidhi_tamil_nadu_elections-2011

jayalalitha_karunanidhi_tamil_nadu_elections-2011

 

1. ஜெயிக்கப்போவது யாரு? இதுதான் இன்றைய கேள்வி, அத்தனை தமிழ் நெஞ்சங்களிலும். வரட்டும் மே13! இரண்டு சைடிலும் மந்திரிகள் லிஸ்ட் ரெடியாம். அதிகப்படியாக அ.தி.மு.க. சைடில் ஒரு ஹிட் லிஸ்டும் ரெடியாம். பா.ம.க. போன்ற துரோகிகளுக்கு சரியான பாடம் கற்பிக்கவும் தயாராகிகிட்டிருக்காங்களாம்.

2. எல்லா சர்வேயிலும் அவுட்டுனு சொல்லப்பட்டது, வீரபாண்டி தொகுதி. இங்கே 89,7./. ஓட்டு பதிவாகியிருந்ததாம். அதிகப்படியா ஓட்டு விழுந்தாலே,அது ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டு என்று சொல்லப்படும் நிலையில் ஆழமாக அனலைஸ் பண்ணிய பிறகு தெரிய வந்தது என்னன்னா, வேட்பாளரான வீரபாண்டி ராஜா தன்னை ஜெயிக்க வைத்தால், வீட்டுக்கு ஒரு டி.வி.எஸ். 50 ன்னுசொல்லி சலான் கொடுத்திருக்கும் விவரம் தெரிய வந்திருக்கு. அவுட் லிஸ்டில் இருந்த வீரபாண்டித் தொகுதி ப்ரைட் லிஸ்டுக்கு வ்ந்திருக்காம்.

3. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.கழட்டி விடப்பட்டதும், தேர்தல்ல தி.மு.க.வுக்கு ஆதரவா ம.தி.மு.க. காரங்க செயல்பட்டாங்க. இது வைகோவுக்கு தெரிஞ்சும் கண்டுக்காம இருந்தார். ‘மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி’ ங்குறதை முதல்வர் தெரிஞ்சிகிட்டதும், ‘ம.தி.மு.க.வின் மானசீக ஒத்துழைப்பு சந்தோஷமா இருக்கு’ ன்னு மதுரை கூட்டத்துல பேசினாரு. ஓட்டுப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் எப்படியாவது தி.மு.க.வுக்கு ஆதரவா வைகோவை அறிக்கை விட வைக்கணும்னு தி.மு.க.வுல முயற்சி எடுத்திருக்காங்க. இதைப்பத்தி வைகோவும் ஆலோசித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த நேரத்துல “அவசரப்பட்டு, தி.மு.க.வுக்கு ஆதரவா அறிக்கை கொடுத்துடாதீங்க” என்று அமெரிக்கா, மற்றும் ஸ்விட்ஸ்ர்லாண்ட் வாழ் தமிழர்கள் வைகோ கிட்ட பேசியிருக்காங்க. சீமானும் இதே கருத்தைத்தான் சொன்னாராம். அதுக்கப்புறம்தான் தி.மு.க.வுக்கு ஆதரவா அறிக்கை தரும் முடிவை மாத்திக்கிட்டாராம், வைகோ.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>