/* ]]> */
Jan 072017
 

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் அலர்ஜி ஏற்படுமா?:

pet-animals

  • வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் அலர்ஜி ஏற்படுமா?

ஆம். செல்லப் பிராணிகளால் மனிதர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.நாய் மற்றும் பூனைதான் அதிகளவில் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. கோழி, வாத்து, வான்கோழி , புறா, மீன், முயல், அணில், குதிரை, எலி, லவ் பேட்ஸ் போன்றவைகளும் , அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

  • மேற்சொன்ன விலங்குகளைத் தவிர, வேறு என்னென்ன உயிரினங்களால் அலர்ஜி ஏற்படுகின்றது?

வீடுகளில் உலாவும் பல்லி, கரப்பான் பூச்சிகளின் கழிவுகள், அலர்ஜி ஆகும் பொருட்களில் முக்கியமனவை.

  • இவைகளை வளர்ப்பதால் எப்படி அலர்ஜி ஏற்படும்?

வளர்ப்புப் பிராணிகளின் இறந்த செல்கள், உதிர்ந்த ரோமம், உமிழ்நீர், சிறுனீர், மலக் கழிவுகள் காற்றில் கலப்பதால், , அதை சுவாசிக்கும் நமக்கு, உடல் பாதிப்பு ஏற்படுவதோடு, சரும பாதிப்பும் ஏற்படுகின்றது.

  • எவ்வகையான பாதிப்புகளை இவை உருவாக்குகின்றன?

இந்த அலர்ஜி பொருட்கள் உடலுக்குள் சென்றதும், ஆன்டிஜென்களாக செயல்பட்ம். அப்போது ரத்தத்தில் இம்யூனோகுளோபுலின்-இ எனும் எதிர் புரதம் உருவாகும்.இது அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகளுடன் இணைந்து, சில வேதிப் பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்புகளைத் தாக்கும்.

  • இவ்வாறு நரம்புகள் பாதிப்படையும்போது, எவ்வகையான உடற்கோளாறுகள் ஏற்படும்?

மூக்கு ஒழுகுதல், தும்மல், சரும அரிப்பு, தடிப்பு, தோல் சிவந்து  வீங்குதல், போன்றவை ஏற்படும்.

  • அறிகுறிகள் என்னென்ன?

மூக்கு ஒழுகுதல், வறட்டு இருமல், ஆஸ்துமா, நெஞ்சு இறுக்கம், கண்ணில் நீர் வடிதல், எரிச்சல், கண்கள் சிவப்பது, இமைகள் வீங்குவது, தோல் அழற்சி, கரப்பான் நோய், தூக்கமின்மை, சோர்வு, தொண்டை வலி போன்றவை.

  • ஏற்கெனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வளர்ப்புப் பிராணிகளால் அலர்ஜி ஏர்படுமா?

கட்டாயமாக ஏற்படும். ஏர்கெனவே ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு, வளர்ப்புபிராணிகளால், அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு 40% அதிகம் உள்ளது.

  • என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

ரத்தப் பரிசோதனை அலர்ஜியை அறிய உதவும். மற்றும் தோல் பரிசோதனைகள் உள்ளன.

  •  சிகிச்சைகள்?

அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை உள்ளது. இதோடு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படும். இம்யூனோதெரபி சிகிச்சை அளிக்கப்படும்.

  • வளர்ப்புப் பிராணிகளால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க?

அலர்ஜி உள்ளவர்கள், வீட்டில் எந்தப் பிராணியையும் வளர்க்காமல் இருப்பதே நல்லது.செல்லப் பிராணிகளைத் தொட்டுத் தூக்குவது, முத்தம் கொடுப்பது, கொஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்து, வீட்டைச் சுத்தம் செய்வது அவசியம். வளர்ப்புப் பிராண்கலை வளர்க்க ஆசைப்படுபவர்கள், அலர்ஜிக்கான தடுப்புசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>