/* ]]> */
Dec 132012
 
VR

    

லகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் அவரே தயாரித்து இயக்கம் விஸ்வரூபம் படத்தை ஜனவரி 11 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முதல் நாளே டி .வி.யில் டி. டி.எச் இணைப்பில் வெளியிடுவது சரியா ? தவறா ? என்று ஒருபுறம் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க அவரோ  07.12.2012 - இல் மதுரை , கோவை , சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும்  தனது ரசிகர்கள் புடை சூழ விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை  ஜெயா டி .வி. யுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார் . நேற்று மாலை சென்னை ராயப்பேட்டா ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைஞானி இளையராஜா , இயக்குனர் இமயம் பாரதிராஜா உட்பட பல்வேறு பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் ஜெயராம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் முழு தொகுப்பு  தமிழ் ப்ளாக் உலக வரலாற்றில் முதன்முறையாக இதோ உங்களுக்காக ( யாராவது முன்னரே எழுதியிருந்தால் கம்பெனி பொறுப்பல்ல ஹி .. ஹி … ) :

 

 • ஒரு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஒரு இடத்தில் நடத்துவது என்பதே      சாதாரண காரிமயமல்ல , அப்படியிருக்க அதையே மூன்று வெவ்வேறு நகரங்களில் ஒரே தினத்தில் நடத்துவதென்பது எவ்வளவு சிரமம் என்பது அங்கே நடந்த பரபரப்பிலிருந்தும் , நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதிலிருந்தும் நன்றாகவே தெரிந்தது  ( இதுலயும் உலகநாயகன் ஒரு ட்ரென்ட்செட்டர் )

 

 • எம்.ஐ.பி ( மோஸ்ட் இம்பார்டன்ட் பெர்சன் ) , வி.வி.ஐ.பி , வி.ஐ.பி என்று மூன்று பாஸ்கள் கொடுத்திருந்தார்கள் , அதில் எம்.ஐ.பி யில் மட்டும் பிரபலங்கள் அமர்ந்திருக்க மற்ற இரண்டையும் ரசிகர்கள் ஆக்ரமித்தார்கள் . எம்.ஐ.பி யில் இருந்ததால் இசைஞானி மற்றும் உலகநாயகனை மிக அருகாமையில் ரசிக்க முடிந்தது ( எதுக்கு இந்த விளம்பரம் )

 

 • நிகழ்ச்சியை அறிமுகம் செய்த பெண் ஒரு இடத்தில வாய் தவறி ஜெயா டி .வி என்பதற்கு பதில் விஜய் டி .வி என்று சொல்லிவிட்டு பின்பு சுதாரித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார் … ( பேமண்ட் அவுட்டா ?!  )

 

 • மதுரையில் நடந்த நிகழ்ச்சியை திரையில் காட்டிய போது சென்னையை விட அதிக கூட்டத்தையும் ,ஆரவாரத்தையும் காண முடிந்தது . மதுரையில் இசைபேழையை ஒரு ரசிகரே வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது … ( பாசக்கார பயலுக )

 

 • ஜெயா டி .வி யின் ராகமாலிகா குழுவினர் கமல்ஹாசனின் பழைய பாடல்களை பாடினார்கள் … ( பொழுத ஓட்டனும்ல )

 

 • ஜெயராம் மூன்றாம்பிறை படத்தின் கமல் – ஸ்ரீதேவி குரல்களை நன்றாக மிமிக்ரி செய்ததோடு தன் 25 வருட கால நட்புக்காக கமல் பணம் வாங்கிக்கொள்ளாமலேயே போர் ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்ததையையும் நன்றியோடு  நினைவு கூர்ந்தார்  ( ஆ..ஆ..ஆ ) 

 

 • பாடகர் கார்த்திக் போட்டு வைத்த காதல் திட்டத்தில் ஆரம்பித்து மேகம் கொட்டட்டும் வரை கமல் பாடல்களை பாடி நம்மை இசை மழையில் நனைத்தார் … ( நல்ல வேலை உண்மையிலேயே மழை வரல )

 

 • கமல் கொன்னக்கோல் வாசிக்க சங்கர் மகாதேவன் பாடிய “ உன்னை காணாமல் ” பாடலை தரணி , லிங்குசாமி , ஏ .ஆர்.முருகதாஸ் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தனர் . கமல் குரலில் மாயா , மாயா என்ற வரிகள் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது … ( குரலுக்கு மட்டும் தனியா ஏதாவது காயகல்பம்  சாபிடுவாரோ ?! )

 

 • ” சிவாஜி ஒரு நடிப்பு சிங்கம் ஆனால் அவருக்கு இயக்குனர்கள் தயிர் சாதம் தான் வைத்தார்கள் , எனவே எனக்கான உணவை நானே தயாரித்துக்கொள்கிறேன் ” என்று கமல் தானே படத்தை இயக்குவதற்கான காரணத்தை சொன்னதாக முருகதாஸ் ஒரு தகவலை சொன்னதோடு கமலுக்கேற்ற சமையலுடன் காத்துக்கொண்டிருப்பதாக சொல்லி ஒரு விண்ணப்பத்தையும் வைத்தார் … ( உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  )

 

 • படத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர் – எஸான் – லாய் மூவரையும் கமல் அறிமுகம் செய்ததோடு இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம்  என்பதையும் சொன்னார் … ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )

 

 • சங்கர் மகாதேவன் குரலில் “ எதை கண்டு ” பாடலை இயக்குனர்கள் பாரதிராஜா , கே.எஸ்.ரவிக்குமார் , வசந்த் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தார்கள் . ரவிக்குமார் கமலிடம் படங்களுக்கு இடையே ஏனிந்த இடைவெளி என்றும் நடு நடுவே  என்னை போன்ற இயக்குனர்களையும் வைத்து படம் பண்ணலாமே என்றும் ரசிகர்கள் கேட்பதாக சொல்லி அவர் கேட்டுக்கொண்டார் … ( நல்லா வருவீங்க தம்பி )

 

 • பாரதிராஜா பேசும் போது முன்னணி  நடிகராக இருக்கும் போதே  கமல் 16 வயதினிலே படத்திற்காக கோமணம் கட்டிய துணிச்சலை பாராட்டியதோடு சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் ஒரே நடிகர் கமல் என்றும் புகழாரம் சூட்டினார் … ( உடலும் ரசிகனுக்கு பணமும் ரசிகனுக்கு  )

 

 • ஜெயராம் கமலிடம் நீங்க ஹாலிவுட்டுக்கு போகும் போது  எந்த நடிகைக்கு கிஸ் அடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு ” நான் எச்ச பண்றதுகாகவா அங்க போறேன் ” என்று சொல்லி கமல் காமெடி செய்தார்… ( பயபுள்ளைக திருந்த விட மாட்டேன்றாய்ங்களே )

 

 • பிரபு , ராம்குமார் , விக்ரம் பிரபு மூவரும் மேடையேறிய போது பிரபு கமலை அண்ணே என்று அழைத்து பாசத்தை காட்டினார் … ( சிவாஜி செத்துட்டாரா ?! எவன் சொன்னது ?  )

 

 • படத்தின் கதாநாயகிகளான ஆண்ட்ரியா , பூஜா இருவரும் கமலுக்கு இடம் , வலது என அழகாக நின்று கொண்டிருந்தார்கள் . ஆண்ட்ரியா பாடியதை விட பூஜா தப்பு தப்பாக பேசிய கொஞ்சும் தமிழ் அழகாக இருந்தது …                ( நைட் நேரத்துல ஆண்ட்ரியாவ  அரை கவுன்ல பாத்ததுல இருந்து தூக்கம் போச்சு  )  

 

 • விழாவின் முடிவில் பிரபலங்கள் உட்பட படத்தின் தொழில்நுட்பகலைஞர்கள் அனைவரும்  மேடை ஏற்றப்பட்டார்கள் . இரண்டு பாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்தது மற்றும் ஸ்பீக்கரின் இரைச்சல் போன்ற சில குறைகளை தவிர இசை வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது … ( இந்த தடவ பொங்கல் ஜனவரி 11 ல தான்)

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>