கிருஷ்ண உத்சவத்தின் இரண்டாம் நாள் ஆன இன்று அருணாசாய்ராமின் ஆன்மீக கச்சேரி அரங்கேரியது.
முன் ஒரு காலத்தில் ரிஷி ஒருவர் தவம் செய்துக்கொண்டிருந்தார், அப்பொழுது அவர் தவத்தை கலைக்கும் வண்ணம் சத்தம் வரவே கண் திறந்து பார்க சின்ன கண்ணன் அங்கு வைத்திருந்த வெண்ணையை திருடி தின்பதை கண்ட ரிஷி விஷமகண்ணனை பிடிக்க ஓட, அவன் ரிஷியின் கையில் சிக்காமல் அங்கும் இங்கும் காட்டில் ஓடினான். காட்டில் வேறு சில ரிஷிகள் விஷமக்கார கண்னனை பிடித்து பக்தி என்னும் கயிற்றில் சுட்டி கண்ணனைக் கட்டிப் போட்டனர். அது போல் திருமதி அருணாசாய்ராம் அவர்கள் தனது கணீர் குரலால் சபையில் உள்ளோரை தனது இசையால் இன்று கட்டிப் போட்டுவிட்டார்.
கோபாலகபாகிமாம் என்று பூபாளத்தில்ஆரம்பிக்கும் பாடலை முதலில் பாடி கச்சேரியை துவக்கிவைத்தார். வந்தனோடு கோவிந்தா என்ற தெலுங்கு கீர்தனையை தோடி ராகத்திலும், சுத்ததன்யாசி ராகத்தில் புரந்தரதாசர் இயற்றிய நாராயணா என்று தொடங்கும் பாடலும், சுரடிராகத்தில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் எழுதிய பார்வை ஒன்று போதும் என்ற பாடலையும் பாடினார்.அவருக்கே உரித்தான விஷமக்கார கண்ணா என்ற படலையும், நந்தகோப என்று தொடங்கும் பாடலையும், கிருஷ்ணா நீ பேகனே என்று பாடி சபையில் உள்ளோரை மெய்மறக்கும் வண்ணம் பாடி செவிகளை குளிரச்செய்தார் .
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments






Please comment with your real name using good manners.