/* ]]> */
Nov 242011
 

 

 

 

 

 

 

 

 

வயதுக்கு வந்தவர்கள்
வயதுக்கு வந்த புதிதில் …….
வயசு கோளாறில்……….
அறியாத வயசில் ……..
புரியாத மனசில்…….
புதிதாய் மணம் புரிவோர்…..
புரிந்தும் புரியாமலும்…….
பிரிந்து போவதாலும்…….
“விவாகரத்து “……… அது ஒரு ரகம்…

வயதானவர்கள்…….
வையம் முழுதும் அலசி …….
வாய் நிறைய வாழ்த்தி ……..
வாழ வைத்த மறுநாளே….
வேண்டாம் ….. இவள் …….
விட்டு வா …..அவள் வீட்டில் என்று
வயதான தன் வயதுக்கு சற்றும் பொருந்தாமல்
வாழவந்தவள் வாழ்க்கையை சீரழிக்கும் …..
“விவாகரத்து “……….இது ஒரு ரகம் ………

வாழவும் முடியாமல்…..
வீழவும் முடியாமல் ……
விவாகரத்தும் செய்யாமல்………
வாழ்ந்தும் தொலைக்காமல் ……மற்றவர்
வியாக்கியானங்களுக்கு பயந்து …….
வீட்டுக்குள்ளயே தன் “விவாகம் “ தானே “ரத்து ” செய்தவர்கள்……
வெறு(த்)தே வாழ்க்கையை வீண் செய்பவர்கள்….
இது ……………ஒரு புது ரகம்
கொடுமை முதலிரண்டு ரகம் ……….
பெரும் கொடுமை முன்றாவது ரகம்…….
ரத்து ஆக்கி போனவர்கள்………..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>