/* ]]> */
Feb 052018
 

விலங்குகளுக்கு வால்களால் என்ன பயன் ?

tail

விலங்குகளுக்கு வால் ஒன்று. வேலை பல.  நிலத்தில் வாழும் நான்கு கால் பாலூட்டி விலங்குகளைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட பயன்படும் உடல் பகுதிதான் வால். எனவே வீட்டில் வளரும் விலங்குகளுக்கு வாலை வெட்டிவிட்டாலும் அவை பெருமளவு பாதிப்படைவதில்லை.

கங்காரூ. பூனை போன்ற விலங்குகளுக்கு கயிற்றில் நடப்பவரின் கையில் இருக்கும் கம்பு போல வால் பயன்படுகிறது. கூத்தாடி கம்பை வலமும் இடமும் நீட்டிச் சாய்த்து கயிற்றின் மேல் தன்னை சமநிலை செய்து நிலை நிறுத்துவது போல், தாவும்போது , தமது உடலை நிலை நிறுத்த வாலைப் பயன்படுத்திகொள்கின்றன. இந்த விலங்குகள் மரத்துக்கு மரம் தாவும் சிலவகைக் குரங்குகளில் கிளைகளைப் பற்றிக்கொள்ள உதவும் ஒரு பற்றும் உறுப்பு. இவ்வாறே உயிரி பரிணாமத்தில், பல விலங்குகளுக்கு பல வேறு விதமாக வாலின் பயன் அமைந்துள்ளது. எல்லா விலங்குகளும் வாலை எதற்காகப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு தேவை.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>