/* ]]> */
Nov 172012
 
2013 விருச்சிக ராசி

விருச்சிக ராசி 2013 |விருச்சிகம் ராசி ஆண்டு பலன் 2013 |

புத்தாண்டு பலன்

 

2013 விருச்சிக ராசி

2013 விருச்சிக ராசி

விருச்சிக  ராசி:

புத்தாண்டு பலன்கள் 2013:

விசாகம்(4),  அனுஷம், மற்றும் கேட்டை ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:

[ சாதகமான காலம் : குருவின் 7-மிட சஞ்சாரமான 31.1.2013 முதல் 26.5.2012 வரையும் குருவின் வக்கிர சஞ்சாரமான 8.11 2013 முதல் ஆண்டின் இறுதிவரை. மற்றும் கேதுவின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.

சாதமற்ற காலம்: குருவின் வக்கிர சஞ்சாரமான 1.1.2013 முதல் 30.1 2013 வரையும் குருவின் 8-மிட சஞ்சாரமான 27.5.2013 முதல் 7.11.2013 வரை. சனி பகவானும் ராகுபகவானும் சாதகமற்றநிலையில் சஞ்சரிக்கிறார்கள்.]

இந்த புது வருடம் 2013ல்   உங்களுக்கு நல்ல பலன்களாகவே நிகழப் போகிறது.  .

இந்த ஆண்டு தொடங்குமுன்பே, சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-மிடத்தில் அதாவது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.  குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் அதாவது மே மாதம் 26-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின்  அதாவது மே மாதம் 27-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் 12, 6-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஆண்டுத் துவக்கத்தில்  30.1.2013 வரையிலும், குரு வக்கிர நிலையில் இருப்பதால் சாதகமற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இந்த காலக் கட்டத்தில் நீங்கள் எதைத் தொட்டாலும் தோல்வியில் முடியும். எந்தக் காரியமும் சட்டென்று முடியாமல் ஜவ்வு மாதிரி இழுத்துட்டே போகும்.  உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். மருத்துவச் செலவுகள் கூடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து ஏமாற்றச் செய்திகளே வந்து சேரும். வியாபாரம் மந்தமாகும். வருமானமும் குறையும். காணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படும். குடும்ப அமைதி கெடும். சிக்கல்களும் வீண் வம்புகளும் வீடு தேடி வரும். எனவே நீங்கள் அமைதி காப்பது மட்டுமின்றி அனைத்து  முயற்சகளையும் ஒரு மாத காலத்துகு ஒத்திப்போடலாம்.

சனி பகவானும்  ராகுவும் உங்கள் ராசிக்கு  12-ம இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. ஆனால், நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், குரு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் எந்தவித கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றிவிடுவார்.  மேலும் சனி பகவான் துலாம் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும்,  சனி பகவான் உங்கள் கேந்திர ஸ்தானாதிபதியாகவும் , யோக காரகனாகவும்  இருப்பதால் கெடு பலன்கள் பெருமளவுக்கு மாறி , நற்பலன்களாகவே நிகழும். இதை மனதில் கொண்டு   சனி மற்றும் ராகு போன்ற இரு கிரகங்களின் சஞ்சார பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தியனர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நல்ம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள்  தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் உண்டாகும். வாழ்க்கைத் துணையை  விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் ,அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நல்ம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.

பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். துக்க செய்தி வரும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். சிலருக்கு உயிர் பற்றிய பயமும் ஏற்படலாம். இதைப் படிக்கும்போது பயப்பட வேண்டாம். இதற்குறிய பலன் இது என்று சொல்லவேண்டியதாகிறது. கூறப்படும் பலன்கள் பிறந்த ஜாதகத்தின்ப் பொறுத்தும், திசா புத்திப் பலன்களைப் பொறுத்துமே அமையும். உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு சரியான பரிகார முறைகளை மேற்கொண்டால்கெட்ட நேரமானாலும்கூட வெற்றிக்கொள்ள முடியும். சிலருக்கு தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் எண்ணம் தோன்றலாம். ஆனால், சிறைத் தண்டனை அடைந்த ஒருவன் எப்படி விடுதலையாக இன்னும் ஓரிரு மாதம் இருக்கும்போது தப்பிக்க முயற்சித்து ,பிடிபட்டுவிட்டால், தண்டனையை மீண்டும் முத்லிலிருந்து முழுவதுமாக அனுபவிக்க வேண்டியிருக்கும். அதுபோல கர்ம வினைகளை அனுபவித்து தீர்ப்பதே நல்லது.

இந்த  சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வரலாம்.  கோர்ட் கேஸ்களில் தீர்ப்புகள் சாதகமாக வராது.  குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும்.  பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.

இனி  மே மாதம் 26-ம் தேதிவரை குருபகவானின் 7-ம் இடத்து சஞ்சாரம் மற்றும் கேது பகவானின் 6-ம் இடத்து சஞ்சாரமும் தரப்போகும் அனுகூலமான பலன்களைப் பற்றிப் பார்க்கலாம்.  குரு தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதும் நல்லதே. இதனால் திருமணத் தடை நீங்கும். தகுந்த வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவரும் தொய்வான நிலை மறைந்து பண ப்புழக்கம் அதிகரிக்கும். உதியோகத்தில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிப் போய்விடுவார்கள். புத்திரர்கள்  சம்பந்தமான நற்காரியங்கள்  சிறிது தாமதமாக நடந்தேறும். புத்திரர்களுக்கான சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள்.  நகையை அடகு வைத்து கஷ்டப்பட்ட நீங்கள் இப்போது மனைவி பிள்ளைகளுக்கு தேவையான நகைகளையும் ஆடை ஆபரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி கிரைண்டர் போன்றவைகளையும் வாங்குவீர்கள.

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இந்த ஆண்டின்  தொடக்கத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் வருகிற மே மாதம்  26-ம் தேதிவரை நீடிக்கும். குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்துகொண்டு, உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறார். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதல் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள்  கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன் குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் மேன்மையடைவார்கள்.  இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது திறமை, இப்போது வெளி உலகுக்குத் தெரிய வரும். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள்கூட உங்களுக்கு சாதகமாக முடியும்.  அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு குறையும். கூட வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலர் நூதன பொருள்களை விற்பதன்மூலம் எதிபர்பாராத லாபம் அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கும் இது அதிர்ஷ்டமான காலம்.

குரு மே மாதம்  27-ம் தேதி முதல், 8-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக்  காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து பாட்டால் , அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படவேண்டியிருக்கும். . குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள்  ஏற்பட்டு, அவைகளை  குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். . கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள்.  விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள்  மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர , மகிழ்ச்சியைக் கொடுக்காது. நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தொலைதூரங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை  ஒப்படைத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.  ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 31-ம் தேதிவரை ,குருவின் வக்கிர சஞ்சாரமும் நன்மை தராது.

இத்தனை சாதகமற்ற நிலையும்  நவம்பர் மாதம் 8-ம்  தேதி  முதல் மாறிவிடும். ஆண்டின் இறுதியான இந்த இரு மாதங்களும்  குருவின் வக்கிர சஞ்சாரத்தால் மிகவும் நற்பலன்களாக நிகழும்.  மீண்டும் சாதகமான பலன்களாக நிகழ ஆரம்பிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். எடுத்தகாரியங்கள் சட்டுப்புட்டென்று நிறைவேறும். தொட்டது துலங்கும். வேலை  தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பூர்வீக சொத்துகள் வந்து சேரும். வியாபாரம் சிறக்கும். வருமானம் கூடும். இப்படியாக பலவித நன்மைகள் நடக்கும். ஆண்டு இறுதி மங்களகரமாகவும் மகிழ்ச்சியாகவும்  நிறைவடையும்.

மொத்தத்தில் இந்த ஆண்டு ,  நன்மையும் தீமையும் கலந்து இருந்தாலும், குருவின் பார்வைகளாலும், சனியின் ஸ்தான பலத்தாலும், அதிக பாதிப்புகள் இருக்காது.

பரிகாரம்:

ஆண்டு பிற்பகுதியில் குரு 8-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல.  தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். சனி விரயச் சனியாக வலம் வருவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின் 12-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை  தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும்.

வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும்  இன்ட்இனிய புத்தாண்டில்!.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>