/* ]]> */
Jun 102011
 

வினவு கொண்ட தினவு – பதிவுலக திமிரின் பறை சாற்றுதல் வினவு!

வினவு வலைதளம்

வினவு வலைதளம்

வினவு என்ற பிரபலமான வலைத்தளம் சில வித்தியாசமான பதிவுகள் மூலம் தமிழ் வலையுலக வாசகர்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கிறது என்பது நிதர்சனம். ஆனால் அந்த கௌரவமான இடத்தைக் காப்பாற்றும் வகையில் வினவு பதிவுகளை வெளியிடுகிறதா ? ஒரு பதிவு மனதில் கேள்விகள் எழுப்பலாம்… கிளுகிளுப்பூட்டலாம்… சிரிக்க வைக்கலாம் ஆனால் படிப்பவர் மனதை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். பரபரப்பு கிளப்பி டி.ஆர்.பி ரேட்டிங்கை நோக்கி ஓடும் சில மூன்றாம் தர டிவி சேனல்களுக்கும் சிலரை புண்படுத்தும் விஷயங்களை பரபரப்புக்காக வெளியிடும் வினவுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்!

என்று வினவில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் திருப்பதியில் ஒரு சிறுமி அங்குள்ள ஒரு பணியாளரால் கற்பழிக்கப்பட்டதையும் அதை திருப்பதி கோயில் நிர்வாகம் மூடி மறைக்க முற்பட்டதையும் பற்றி எழுதியிருக்கிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் அவலம் எதுவாயினும் அதை எதிர்ப்பதில் வினவுடன் தோள் சேர்ந்து போராட நாம் தயாராய் இருக்கிறோம். சிறுமி கற்பழிக்கப்பட்டது கொடுமை. அதை திருப்பதி நிர்வாகம் மூடி மறைக்க முற்பட்டது கொடுமையிலும் கொடுமை. ஆனால் அதற்காக தேவையில்லாமல் அதில் பலர் தெய்வமாக வழிபடும் வெங்கடாசலபதியை ஏன் இழுக்க வேண்டும். வினவின் பதிவில், இந்த கற்பழிப்பை வெங்கடாசலபதி பார்த்ததாகவும் ஆகவே அவரை கைது செய்ய வேண்டுமென்றும் அறை கூவலிட்டிருக்கிறது வினவு. இது தேவையில்லாத இடைச்செருகல் தானே… பரபரப்பு தேடி அலையும் அரிப்பு தானே… எதையாவது தலைப்பை வைத்து எவனையாவது புண்படுத்துவோம்… வருகிற ஹிட்ஸ் வரட்டும் என்ற கீழ்த்தரமான “சுய சொறிதல்” தானே இது ! வெங்கடாசலபதியை கோடான கோடி மக்கள் வழிபடுகிறார்கள். நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை புண்ணாக்குவதில் வினவுக்கு என்ன வேடிக்கையோ!

இது முதல் முறையல்ல.. நாம் சற்றே தோண்டிப் பார்க்கையில், வினவின் அக்டோபர் 15, 2009 இதழில்

திருப்பதி ஏழுமலையானை கைது செய்!

என்று ஒரு பதிவு. அதில் வெங்கடாசலபதி பணக்கார சாமியாம்.. அவருக்கு பக்தர்கள் கோடி கோடியாக காணிக்கை செலுத்துகிறார்களாம்.. வினவு கூடத்தான் இப்போது நன்கொடை கானீக்கை கேட்டிருக்கிறது. சிலர் தருகிறார்கள்… நாம் ஏதாவது கேட்டோமா? காணிக்கை பெறுவது குற்றமா?ஆனால் அதையும் ஆந்திர விவசாயிகளையும் எப்படியோ ஒரு பதிவின் கீழ் கொண்டு வந்து அப்போது வெங்கடாசலபதியை வைத்து ஒரு பரபரப்பு கிளப்பி ருசி கண்ட பூனை ஆகியிருக்கிறது வினவு.

அதனால், இப்போது இந்த கற்பழிப்பு சம்பவத்திலும் வெங்கடாசலபதியை இழுக்காமல் வினவால் இருக்க முடியவில்லை. அப்படியே வெங்கடாசலபதி அந்த கற்பழிப்பை பார்த்திருந்தால் கூட , அவர் சாட்சி தானே.. சாட்சியை எதற்கு கைது செய்ய வேண்டும்.. இந்த அடிப்படை சட்ட ஞானம் கூடவா வினவுக்கு இல்லை?

“நானே கடவுள், நானே மனிதன், நானே டில்லி பாபு, நானே செக்யூரிட்டி, நானே கற்பழிப்பு” என்ற கீதை லாஜிக்படியும் அந்த ஆளை கைது செய்திருக்க வேண்டும்”

போன்ற செருக்கு வரிகள் வேறு… கீதையை பற்றி அந்த கட்டுரை ஆசிரியருக்கு என்ன தெரியும். உலகமே போற்றும் நூல்களில் ஒன்று நம் பகவத் கீதை.. அதை “நானே கற்பழிப்பு” என்று புரிந்து கொள்ளும் வக்கிர மனம் கண்டிக்க பட வேண்டியது இல்லையா? தவறாக புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் அதை ஒரு பொது ஊடகத்தில் அரங்கேற்றியிருக்கும் வினவின் திமிரை எதிர்த்து நாம் கேள்வி கேட்டுத்தான் ஆக வேண்டும். 

வேறொரு மத அடையாளமாக இருந்தால் அதை தாக்கி எழுத வினவிற்கு தைரியம் இருக்குமா? இந்துக்கள் என்றால் இளிச்சவாய்ன்கள்   என்ற எண்ணமா?

வினவே… உனக்கு பரபரப்பு வேண்டுமென்றால்  பரபரப்பு சொறிதலுக்கு ஆயிரம் விடயங்கள் உண்டு இங்கே! வீணாக வெங்கடாசலபதியை இன்னொரு முறை சீண்டாதே!

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>