/* ]]> */
Jun 182019
 

விண்வெளி உடை அணியாமல், விண்வெளிக்குச் சென்றால், என்னாகும்?

விண்வெளி உடை

நீரின் அடியில் செல்லும்போது தலையின் மீது பெரும் பாரம் உள்ளது போன்ற அழுத்த உணர்வு ஏற்படும். தலைக்கு மேலே உள்ள நீர்  கொடுக்கும் அழுத்தமே இதற்குக் காரணம். கடலின் அடியில் உள்ள ஓர் உயிரி, அந்த அழுத்தத்திலேயே வாழ்கிறது. அதனைக் கடலின் மேலே எடுத்து வருவது ஆபத்தானது. திடீரென அழுத்தம் குறைந்து, அந்த உயிரியின் உடல் வெடித்துவிடலாம்.

அதுபோல நமது உடல் நிலைக்கு அருகே உள்ள காற்றழுத்தத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.  காற்றின் அழுத்தத்தால் நமது உடல் பூமியில் அழுந்தியுள்ளது.விண்வெளியில் அழுத்தம் கிடையாது.எனவே ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருந்தாலும் காற்றழுத்தம் இல்லாத விண்வெளியில் நமது உடலும் உப்பி வெடிக்கும் வாய்ப்புண்டு.

காற்று அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டால், இதயச் செயல்பாடு, சதை, எலும்பு அமைப்பு, மற்றும் நரம்பு மண்டலத்திலும் பாதிப்பு ஏற்படும். விண்வெளி நிலையத்தின் அறையில் காற்று அடைக்கப்பட்டதன் மூலம் அழுத்தம் கிடைக்கிறது. இங்கு வெப்ப நிலையும் கவனமாகப் பராமரிக்கப்படுகிறது.

^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>