/* ]]> */
Apr 212011
 

 

விஜய் ஜெயலலிதா

விஜய் ஜெயலலிதா

1. பா.ம.க..வுடன் ஏற்பட்ட மோதலால், விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ படம் நஷ்டத்தைத் தழுவியது. இப்போது ஆஸ்கார் ரவியும் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டால், ‘காவலன்’ படத்தில் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறா. இந்நிலையில் விஜய்யை வைத்துததான் தயாரித்து வரும் ‘வேலாயுதம்’ படத்தில் அரசியல் வசனங்கள் இடம் பெறக்கூடாது என்று சொல்லி விட்டாராம். தயாரிப்பாளர் சங்கத்திலும் கோரிக்கை வைத்திருக்கிறாராம். அதுதான் விஜய் சைலண்டாக இருந்ததன் பிண்ணனி. இதற்கிடையே நேற்று விஜய் வீட்டில் விஷமிகள் நடத்திய தாக்குதலால் இந்த சைலன்ஸ் கலைவதற்கும் வாய்ப்பிருக்கிறதாம். நேற்று சாலிக்கிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டை சில விஷமிகள் தாக்கினர். விஜய் தற்போது அந்த வீட்டில் இல்லையென்றும் அந்த வீட்டில் குடியிருப்பது இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி என்பதும்தான் ஹைலைட் செய்தி… இதற்கிடையில் ஜெயலலிதா விஜய் வீட்டில் விஷமிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2. ஷங்கர் தனது ‘நண்பன்’ படத்திற்கு முதலில் தீபிகா படுகோனைத்தான் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அம்மணியை ரீச் பண்ணுவதில் சிரமம் ஏற்பட்டதால், இலியானாவை புக் செய்யவே ‘ராணா’ வுக்காக ரஜினியுடன் சென்னையில் முகாமிட்டிருக்கும் தீபிகா, ஷங்கர் படத்தை மிஸ் பன்ண் விட்டோமே என்று வருத்தப்பட்டாராம்.

3. “புதிய தொழில் நுட்பத்தில் பழமையான கதையை சூப்பராகத் தந்திருக்கும் தியாகராஜனை தாராளமாகப் பாராட்டலாம். மம்பட்டியான் தியாகராஜன் பிரம்மாண்டமாகத் தயாரித்திருப்பதோடு, மிரட்டலான படத்தை இயக்கியும் இருக்கிறார். கலைஞரின் அசத்தலான இரட்டை வேடத்தில் வந்திருக்கும் ‘பொன்னர் சங்கர்’ திரைப்படம் கலைஞருக்கு மணிமகுடமாக அமைந்துவிட்டது.” என்றெல்லாம் அள்ளி விடுவது சாட்சாத் தியாகராஜனேதானாம்…

4. செல்வராகவன் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா மியூஸிக் என்றால் பாட்டெல்லாம் படு சூப்பர். ஆனால் சில பிரச்சினைகளால், யுவன், செல்வத்திடமிருந்து பிரிந்துவிட்டார். திரும்பவும் ஒன்று சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தார்கள், இருவரும். அதன்படி செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விஸ்வரூபம் ‘படத்திற்கு யுவன் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், புதிய இசையமைப்பாளளரை ஒப்பந்தம் செய்தாராம் செல்வராகவன். இதனால், திரும்பவும் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>