/* ]]> */
Feb 172012
 

அருண்பாண்டியன் பண்ருட்டி விஜய்காந்துக்கு துரோகம்

செய்யப் போகிறார்களா?

விஜய்காந்த் ஜெயலலிதா மோதல்

விஜய்காந்த் ஜெயலலிதா மோதல்

 

சட்டமன்ற போக்கைக் கண்டித்து, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச் சட்டையோடு  சட்டசபைக்கு சென்றபோது, பண்ருட்டியும், அருண்பாண்டியனும் மட்டும் கருப்புசட்டை அணியாமல் சென்றனர். அவர்களை  விஜய்காந்த் கேள்விக் கண்களோடு பார்த்தபோது, பண்ருட்டி, ” நான் பொதுக் கணக்குக் குழுவில்  தலைவராகவும் இருப்பதால் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருந்ததால்தான்,  கருப்புசட்டை அணியவில்லை “ என்று தானாகவே விளக்கம் அளித்தார்.  நடிகர் அருண்பாண்டியன்  ஏதும் சொல்லவில்லை. அதிமுக, எம்.எல்.ஏ.க்களுக்கு விரிக்கும் வலையில், பண்ருட்டியார், திருமங்கலம் எம்.எல்.ஏ. ராஜா, திருவெறும்பூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார்,  பேராவூரணி எம்.எல்.ஏ. நடிகர் அருண் பாண்டியன் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. முருகேசன் ஆகிய ஐவருக்கும்  அதிமுகவினர் ரூட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஒரு முக்கிய செய்தி!

சங்கரன் கோயில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்ட முத்துலட்சுமி, தைப்பூச நாளன்று தொடங்கினார். அன்றைய நாளில், கோவில் பூஜைக்காக ‘முப்பிடாதி அம்மன் கோவில் குள’த்திலிருந்து தண்ணீர் எடுத்துவர  ஊர்வலத்தினர் ஆயத்தமானார்கள். . குளத்துக்கு நீர் எடுத்துச் செல்ல புறப்பட்ட ஊர்வலம் மேளதாளம் முழங்க வெடிச் சத்தங்களோடு புறப்பட்டது. அப்போது  வழியிலிருந்த ஒரு பள்ளிவாசலை கடந்து போக நேர்ந்தது. போகும்போழுது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தாலும், திரும்பி வரும்போது பள்ளிவாசலைக் கடந்து சென்ற போது பள்ளிவாசல்  திசையிலிருந்து கற்கள் வந்து ஊர்வலத்தின்மீது விழுந்தன. அதற்காகவே காத்திருந்ததுபோல் கலவரம் ஆரம்பமாகியது. கற்கள், உருட்டுக் கட்டைகள், வெடிகுண்டுகள் என்று என்று வன்முறை வெடித்தது. போலீஸ் வந்து நிலைமை சீரடந்தாலும் இன்றுவரை இரு தரப்பும் அமைதியடையவில்லை.

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>