/* ]]> */
Apr 042018
 

வாழும் இடத்துக்குத் தகுந்தவாறு, நமது உடலமைப்பு மாறுமா?

systemic body changes

நாம் தினமும் சூரியனைப் பார்த்து வாழ்ந்து வருகிறோம். துருவப் பகுதி நாடுகளில், சூரிய உதயம் முன் பின்னாக இருக்கும். இதுபோன்ற பகுதிகளுக்குச் செல்லும்போது, சில சிக்கல்களைச் சந்திப்போம். சூரிய ஒளி இல்லாமல் விழிப்பு வராது. திசைகளை எளிதில் அறிய முடியாது.  குழப்ப மனநிலை ஏற்படும். ஆனால், சில காலம் அங்கேயே தங்கி வாழ்ந்தால்,  அந்த சூழலில் வாழும் நிலைக்கு மாறிவிடுவோம். உயிரியலில் , இதனை ‘ உடலமைப்பு மாற்றம்’ எனக் கூறுவது இல்லை.

நீர்ப் பசை குறைவாக இருக்கும் இடத்தில் வளரும் கள்ளிச் செடியில், இலைகள் இல்லாமல் முள் போன்ற அமைப்பே இருக்கும். தாவரவியல்படி, இந்த முள் போன்ற அமைப்பே இலைகள். மேலும் இவற்றின் மீது மெழுகு போன்ற பூச்சு தூக்கலாக இருக்கும். நீராவி வெளியேற்றதால், நீர்  வெளியேறாமல் இருக்க இந்த அமைப்பு உருவாகியுள்ளது. இது போன்ற பரிணாஅம் மாற்றங்கலையே உடலமைப்பு மாற்றம் என்று கூறுவாரக்ள். இந்த வகை மாற்றங்கள் ஒரே தலைமுறையில்,  உருவாவதில்லை. பல லட்சம் ஆண்டுகள் பரிணாம  படிநிலை வளர்ச்சியின் தொடர்ச்சியாக  மெல்ல மெல்ல ஏற்படுகின்றது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>