/* ]]> */
Aug 282021
 

வார பலன- 29.8.2021 முதல்  4.9.2021 வரை:

Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்
Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்

மேஷம்:

இந்த வாரம், கிரகங்கள் சாதகமாக இருப்பதால், மனதிற்கு ஏற்புடைய பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். இதனால் மனதில் மகிழ்ச்சி கூடுவதோடு, அதிக உற்சாகத்தால், அக்கம்பக்கத்தவர்களுடன், நல்லிணக்கம் வளரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி தடையின்றி நடக்கும். எதிரிகளிடம் சரிக்குச் சரி நிற்கவேண்டாம். அவர்களிடமிருந்து விலகுவதால், சிரமம் விலகும். வாழ்க்கைத் துணை உறவினர்களை உபசரிப்பதால், குடும்பத்தின் நன்மதிப்பு சிறந்தோங்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடப்பது நல்லது. பணியாளர்கள் அதிக உழைப்பினால், குடும்பத்திற்குத் தேவையான பண வரவைப் பெறுவர். பெண்கள் குடும்ப நடைமுறை சிறக்க புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவர். மாணவர்கள் உடல்நலம் பாதிப்படையக்கூடும்.

ரிஷபம்:
இந்த வாரம் கிரகங்கள் அனுகூலமாக அமர்ந்துள்ளன. பெரிய மனிதர்கள், நல்லவர்கள் அறிமுகம் கிடைக்கும், மனதில் நம்பிககை பிறக்கும். சுப நிகழ்வுகளுக்கு தாராள பணச்செலவு செய்வீர். வீடு வாகன சுகம் நன்கு சிறக்கும். புத்திரர்கள் கவனக் குறைவால் சிரமப்படுவார்கள். உங்கள் ஆறுதலும் ஆதரவும் அவர்களை வழிநடத்தும். உங்கள் ஆரோக்கியம் சிறக்கும். உங்கள் வாழ்ககைத் துணை, குடும்ப உறுப்பினர்கள் எண்ணியதை எண்ணியவணணம் செய்து முடிப்பார். தொழில், வியாபாரம் சிறக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து, உற்பத்தி, விற்பனை சிறக்கும். பணியாளர்கள் சிறப்பான பணிக்கான சலுகைகளைப் எறுவார்கள். பெண்கள் ஆடை அணிகலன்கள் வாங்குவர். மாணவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்கி சக மாணவர்களின் பாராட்டைப் பெறுவர்.
மிதுனம்:
இந்த வாரம் உங்கள் ராசிக்கு  கிரகங்கள் அனுகூலமாக அமர்ந்துள்ளன. இதனால் நன்மை உண்டாகும். கவர்ச்சிகரமான பேச்சால், வேண்டியவைகளைச் சாதித்துக்கொள்வீர்கள். உங்கள் நன்மதிப்பும் உயரும். உறவினர்களுடனும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் குடும்பத்தின் பழைய நிகழ்வுகள் பற்றிப் பேசவேண்டாம். உட்ன்பிறந்தவர்களின் பணத் தேவைக்கு இயன்ற அளவுக்கு உதவுவீர்கள். வாகனம் ஓட்டும்போது வேகம் அறவே கூடாது. மித வேகம் வாகன வசதியைக் கூட்டும். பிள்ளைகளின் கல்விக்கு சிறந்த ஊக்கமும் ஆதரவும் கொடுப்பீர்கள். ஆரோக்கியம் சிறக்க, ஒவ்வாத உணவுகளை ஒதுக்கிவிடவும். இல்லத் துணைவியார் உங்கள் நல்ல குணங்களைப் பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் உழைப்பை அதிகப்படுத்தி, மூலதனத்தை அளவாகப் பயன்படுத்துவீர்கள். அதனால், பணத் தட்டுப்பாடு இல்லாமல் காலம் தள்ள முடியும் . அத்தியாவசிய செலவுக்கு உங்கள் சேமிப்பு பயன்படும். பணியாளர்கள் பணிச் செலவில் சிக்கனம் நல்லது. பெண்கள் கணவரின் எண்ணங்களைப் புரிந்து நடந்துகொள்வர். மாணவர்கள் அதிகமாக வெளியில் சுற்றி படிப்பில் கோட்டைவிடுவர். கடின உழைப்பே காப்பாற்றும் எனப் புரிந்துகொள்ள வாண்டிய அவசியம் வந்துவிட்டது.
கடகம்:
இந்த வாரம் கிரகங்களின் சுழற்சி சாதகமற்ற நிலையில் உள்ளது. எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொது இடங்களில் நின்று வெகு நேரம் வேடிக்கை பார்ப்பது, பொது விஷயங்களை மற்ரவர்களிடம் பேசுவது, நணபர்களிடம் வாக்குவாதம் செய்வது வம்பில் கொண்டுவிடும். உடன் பிறந்தவர்களின் மன வேதனைக்கு ஆறுதல் சொல்வீர்கள். வீடு வாகனப் பாதுகாப்பில் அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் உடல்நலம் கவலையளிக்கும். மருத்துவச் செலவும் அவசியமாகும். வெளியூர்ப் பயணம் தேவையா, என்று யோசித்தபின் மேற்கொள்வது நல்லது. தேவைப்படாத வெளியூர்ப் பயணத்தைத் தவிர்த்தால், நேரமும் பணமும் மிச்சமாகும். வாழ்க்கைத் துணையுடன் கருத்தொற்றுமை நிலவும். குடும்ப நலம் சிறக்கும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர். பணியாளர்கள் இயந்திரங்களைக் கையாள்பவராக இருந்தால், பாதுகாப்பு முறைகளைக் கட்டாயம் கடைப்பிடிப்பது அவசியம். பெண்கள் சேமிப்புப் பணத்தை தங்கள் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துவர். மாணவர்கள் தேர்ச்சி பெற கூடுதல், உழைப்பு தேவை.
சிம்மம்:
இந்த வாரம் உங்கள் ராசிக்கு  கிரகங்கள் அனுகூலம் செய்கின்றனர். வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி நல் வளர்ச்சியை இந்த கிரக நிலைகள் தரவுள்ளன. உங்கள் செயல்கள் பரிமளிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவிர்கள். பிள்ளைகளை மதிப்பதோடு, அவர்களின் வார்த்தைகளை வேதம் போல எடுத்துக்கொள்வீர்கள். உங்கள் எதிரிகள் உங்கள் பலத்தைக்கண்டு, பயந்து பின்வாங்கி விலகுவர். வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம் நிலவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் போட்டு அபிவிருத்திப் பணி மேற்கொள்வீர்கள். ஆன்மீக வழிபாடுகளைத் திட்டமிட்டு நடத்துவீர்கள். பணியாளர்கள் சம்பள உயர்வும் சலுகைப் பயன்களும் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் அருமை பெருமைகளை தங்கள் உறவினரிடம் பெருமை பேசுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, பாராட்டு, பரிசுகள் பெறுவர்.
கன்னி:
இந்த வாரம் உங்கள் ராசிக்கு  சாதகமாக  அமர்ந்து நற்பலன் தருவார்கள். பணிகளைத் திட்டமிட்டு, முழுக்கவனம் செலுத்தி செய்வீர்கள். அதனால், உங்களுக்கு நற்பலன் கிடைக்கும். வெட்டிப் பேச்சுப் பேசி காலத்தை வீணாக்குபவர்களிடமிருந்து ஒதுங்கியிருங்கள். அவர்கள் , தாங்கள் கெடுவதோடு, உங்களையும் சேர்த்துக் கவிழ்த்துவிடுவார்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள். ஆரோக்கியம், சிறக்க, கடின வேலைகளுக்கிடையே சற்று ஓய்வெடுப்பது நல்லது. குடும்பப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவார்கள். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு பாசத்தைப் பெற்று இனிய இல்லறம் நடத்துவார்கள். மாணவர்கள் அதிக பயன் தராத பொருள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. படிப்பில் நல்ல யோக நேரமாக விளங்கும்.

துலாம்:
இந்த வாரம் கிரகங்கள் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி தருகிறார்கள். பண வரவை மிஞ்சும் அளவில் செலவுகள் உண்டாகும். தகுதி உணர்ந்து செயல்படுங்கள் .சிரமங்களைத் தவிர்க்கலாம். வீடு வாடகைக்கு விடும்போது நமபகத் தன்மை இல்லாதவர்களுக்குத் தரவேண்டாம். அதுபோல வாகனங்களில் அறியாதர்களுக்கு லிஃப்ட் தரவேண்டாம். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். காலம் தவறி உணவு கொள்வதால் ஆரோக்கியம் கெடும். இல்லறத் துணையிடம் கருத்து மோதல் உண்டாகும். பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அனுகூலங்கள் உண்டாகும். அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள தக்க வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களைக் கவனத்துடன் பின்பற்றவேண்டும். குடும்பப் பெண்கள் குடும்பச் செலவில் சிக்கனம் மேற்கொள்வதால், குடும்ப ஒற்றுமை சிறக்கும். மாணவர்கள் சாகச விளையாட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:
இந்த வாரம் உங்கள் ராசிக்கு 6ல்கேது , 8ல்புதன், 9ல்சுக்கிரன் என்ற கிரகங்கள் அமர்ந்து நற்பலன் வழங்குகின்றனர். உங்களின் நற்குணம் செயல்திறன் கண்டு, புதியவர்கள் அன்பு பாராட்டுவர். எதிர்கால வாழ்வில் கூடுதல் நம்பிக்கை வளரும். வாகன வசதி ஒரு அளவுக்குள் இருக்கும். பிள்ளைகளின் ஆன்மீக அறிவை வளர்ப்பீர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் தாக்கலாம். வாழ்க்கைத் துணை உங்கள் கருத்துக்களை மதித்து நடந்து குடும்ப ஒற்றுமை பாதுகாப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்துவிடுவீர்கள். அதனால், உற்பத்தி அளவும் ,விற்பனையும் குறையாமல் பாதுகாப்பீர்கள். . பணியாளர்கள் தொழில் நுட்ப அறிவை வளர்த்துக்கொண்டு, பணித்திறனை வளர்ப்பர். பெண்கள் உறவினர்களின் குடும்ப நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வர். மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவர்.

தனுசு:
இந்த வாரம் உங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூல பலத்துடன் உள்ளனர். இதனால், உங்கள் சிந்தனை மற்றும் செயலில் அனுகூலம் ஏற்பட்டு, வளர்ச்சி மாற்றம் உண்டாகும். தாமதமான பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றி, கூடுதல் அளவில் நன்மை பெறுவீர்கள். உறவினர் கேட்ட பண உதவியைச் செய்வீர்கள். வீட்டை அழகுபடுத்த சிறந்த கலைப் பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் படிப்பில் சிறந்து, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத் துணையுடன் குடும்ப உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றுவீர்கள். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பு ,அதிக சம்பளம் பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க தேவையான அறிவுரைகளை வழங்குவர். மாணவர்களின் ஞாபகத் திறன் வளர்ந்து, படிப்பில் உயர்ந்த்
நிலையை அடைவர்.

மகரம்:
இந்த வாரம்  எந்த செயலையும் நன்கு யோசித்து செய்வீர்கள். நண்பர்களுக்காக பெரிதும் உதவி செய்வீர்கள். நிறைய புத்தகங்கள் படிப்பதன் மூலம், நிறைய பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். பிள்ளைகளின் மன நிலை அறிந்து கண்டிப்பதோ, அறிவுரை சொல்வதோ நல்லது. அதிகம் கண்டிக்க வேண்டாம். அவர்கள் ம்ன பயம் கொள்ளும் சூழ்நிலை உள்ளது. அரோக்கியம் சீராக இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் பழைய பிரச்சினைகள் பற்றிப் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பால் உற்பத்தியும் விற்பனையும் பெருகும். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டவசமாக பொறுப்பான பதவிகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, சலுகைப் பயன் பெற நல்ல யோகம் உணடு. மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர்.

கும்பம்:
இந்த வாரம் மனதில் அமைதி நிலவும். அன்புக்குரியவர்களின் உதவி கிடைத்து, முக்கிய பணியை நிறைவேற்றுவீர்கள். அதிக பயனற்ற பொருள் வாங்குவதைத் தவிர்ப்பீர்கள். அதனால், வீணான பணச்செலவு செய்யாமல் பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். வீடு வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு அவசியம். பிள்ளைகள் உங்கள் பேச்சை மீறும் நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தாமதமின்றி சரிசெய்வது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் ரொக்கத்திற்கு விற்பனை செய்யாவிட்டால், மூலதனம் செய்ய பணக் கஷ்டம் ஏறப்டும். மாணவர்கள் புதியவரை நணப்ராக ஏறக்வேண்டாம். .

மீனம்:
இந்த வாரம்  கிரகங்கள் சாதகமில்லை. குடும்பச் செலவுகளுக்கு தாராள பண வசதி உண்டு. வெளியிடங்களில், சூழ்நிலை அறிந்து பேசுவதால், உங்கள் சமூக அந்தஸ்தை காப்பாற்றிக்கொள்ளலாம். தம்பி தங்கைகள் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். வாகனப் பராமரிப்பு செய்யாவிட்டால், அவசரப் பணிக்கு வாகனமின்றி சிரமப்பட நேரும். பிள்ளைகளும் நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் வார்த்தைகளைக் கேட்டு நடப்பர். தொழில் உற்பத்தியும் பணவரவும் சுமாராக இருக்கும். பணியாளர்கள் உடல்நலம் பேணாமல் விடுவதால் தொழில் ஆர்வம் குறையும். பெண்கள் பிள்ளைகளின் நலம் காக்க தக்க அறிவுரை கூறுவார்கள். மாணவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்,
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் ஜாதகப்படி விரிவான பலன் திரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற முகவரியைத் தொடர்புகொள்ளவும். ] நன்றி!
************************************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>