/* ]]> */
Jan 132018
 

14.1.18 முதல் 20.1.18 வரையிலான வார ராசி பலன் :

Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்
Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்

மேஷம்:

உங்களது ஒவ்வொரு செயலும் சிறந்து,அதிக நன்மை பெற்றுத் தரும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வாகன பயன்பாடு குறைந்த அளவில் இருக்கும். புத்திரரின் உடல்நலம் பலம் பெற சத்தான உணவளிப்பீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு பெருமளவில் குறைந்துவிடும். இல்லறத்துணையிடம் தேவையற்ற விபரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள் கவனமுடன் செயல்பட்டு பணி இலக்கைப் பூர்த்தி செய்வர். பெண்கள் குடும்பச் செலவை சிக்கன முறையில் மேற்கொள்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால், எதிர்பார்த்த தேர்ச்சி கிடைக்கும்.

ரிஷபம்:

மனதில் புத்துணர்வும் கலா ரசனையும் உருவாகும். புதிய திட்டம் செயல்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகர அளவில் இருக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்புப் பணி செய்வீகள். புத்திரரின் கவனக் குறைவை இனிய அணுகுமுறையால் மாற்றுவீர்கள். நிலுவை பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் குடும்ப நலன் பேணுவார். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து தாராள பண வரவு கிடைக்கும். பணியாளர் பதவி உயர்வு, சலுகை பெற யோகம் உண்டு. பெண்கள் பண வசதிக்கேற்ப அணிகலன் வாங்குவர். மாணவர்கள் மனதில் குழப்பம் விலக , படிப்பில் முன்னேற்றம் உருவாகும்.

மிதுனம்:

பணிகளை மதிநுட்பத்துடன் செயல்படுத்துவீர்கள்.. பலமடங்கு நன்மை எளிதாகக் கிடைக்கும். அக்கம் பக்கத்தவ்ர் நல் அன்பு பாராட்டுவர்.உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உருவாகும். புத்திரரின் பழக்கவழக்கம் சிறக்க , ஆலோசனை சொல்வீர்கள். எதிரிடையாக உங்களிடம் பேசியவர், தன் தவறை உணர்ந்து அன்பு பாராட்டுவர்.  இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான அரசு உதவி பெற அனுகூலம் யோகம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்க முக்கியஸ்தர் உதவுவர். பெண்கள் தாராள பண வசதி, கணவரின் அன்பு பாசம் கிடைத்து, மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து புதிய சாதனை நிகழ்த்துவர்.

கடகம்:

ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவேண்டும். போட்டி, பந்தயங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதால், நேரமும் பணமும் மிச்சமாகும். முக்கியமான பணி நிறைவேற தெய்வத்தின் அருள் துணை நிற்கும். இல்லறத்துணையிடம் குடும்பத்தின் கடந்தகால நிகழ்வுகளை நினைவுபடுத்துவீர்கள். தொழிலில் கூடுதல் உழைப்பு, உற்பத்தி, விற்பனையை சீராக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் மாறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் சேமிப்பு பணத்தில் சிறு செலவுகளை மேற்கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.

சிம்மம்:

உடல்நலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இல்லறத்துணையின் கவனக் குறைவான செயலை விமர்சிக்க வேண்டாம். வாழ்வில் எதிர்பார்த்த நன்மை ஒவ்வொன்றாகக் கிடைப்பதற்கு புதிய சூழ்நிலை உருவாகும். சமூகப் பணியில் ஆர்வம் உண்டாகும். இளைய சகோதரர் வழியில் மங்கலப் பேச்சுவார்த்தை இனிதாக முடியும். சிலர் புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடைவர். உடல்நலம் ஆரோக்கிய பலம் பெறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிபெற கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். உபரி பண வரவு இருக்கும். உத்தியோகஸ்தர் பணியாளர், ஒற்றுமை குணத்துட்ன் செயல்பட்டு, நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். பெண்கள் ஒவ்வாத அழகுசாதனப் பொருள் பயன்படுத்தவேண்டாம். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை கவனமுடன் ஏற்றுக்கொள்வர்.

கன்னி:

தொழில், வியாபாத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்க சில நிபந்தனைகளைத் தளர்த்துவீர்கள். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை, ஓய்வு தேவைப்படும். இல்லறத்துணை உங்களின் நல்ல குணத்தைப் பாராட்டுவர். உங்கள் பேச்சில் நிதானம் அவசியம். பணவரவு அதிகம் பெற பணிகளில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். வீடு, வாகனத்தில் நம்பகக் குறைவானவர்களுக்கு இடம்தரவேண்டாம். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு நியாயம் உணர்ந்து செயல்படவேண்டும். புத்திரர் நற்செயல்களால் பெருமை தேடித் தருவர். பெண்கள் குழந்தைகளின் நலனில் கூடுதல் அக்கறை கொள்வர். மாணவர்கள் அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவேண்டும்.

துலாம்:

வீட்டுத் தேவைகளை வாங்க தாராள பண வசதி துணை நிற்கும். புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். தாய்வழி உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர். மனதிலும் செயலிலும் தன்னிறைவு பெறுவீர்கள். ஆன்மீக அன்பர்களின் ஆசி, வழிகாட்டுதல் கிடைக்கும். எதிரியால் இருந்துவந்த தொந்தரவு விலகும். இல்லறத்துணை குடும்ப  நலன் சிறக்க ஆலோசனை சொல்வர். தொழிலில் புதியவர்களின் வரவினால், உற்பத்தி, விற்பனை செழிக்கும். பெண்கள் தெய்வ வழிபாடு நடத்தி மன நிறைவு பெறுவர். மாணவர்கள் தகுதி, திறமை வளர்த்து பாராட்டு பெறுவர்.

விருச்சிகம்:

இல்லறத்துணையின் அன்பு பாசம் அதிகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். நிலம், வீடு வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் மாறுபட்ட எண்ணங்களை சரி செய்வீர்கள். மனமும் உடலும் புத்துணர்வு பெறும். புதிய சாதனை நிகழ்த்த பணிபுரிவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி எளிதாகக் கிடைக்கும். எதிரி வியக்கும் நல்ல வாழ்வுமுறை உருவாகும். பணியாளர், பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் உறவினர்களை உபசரித்து நற்பெயர் பெறுவர். மாணவர்கள் ஆன்மீகக் கருத்துகளைக் கேட்பதில் ஆர்வம் கொள்வர்.

தனுசு:

குடும்பத்தில் மங்கல நிகழ்வு நடக்கும்.விவேகம் பண்புடன் பேசி, முக்கியஸ்தரின் அன்பு, உதவி பெறுவீர்கள். இல்லறத்துணை ஒற்றுமையுடன் குடும்ப நலம் பேணுவார். புத்திரரின் எண்ணங்களுக்கு மதிப்பு தருவீர்கள். எதிரி இடம் மாறிப்போகிற நல்ல நிலை உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரித்து, உபரி பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, விவகாரங்களில் சுமுக தீர்வு கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள் பண வரவிற்கேற்ப ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வர்.

மகரம்:

தொழிலை விரிவுபடுத்த அபிவிருத்திப் பணிக்கான நிதி உதவிக்கு ஏற்பாடு மேற்கொள்வீர்கள். குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவது அவசியம். சீரான ஓய்வு, உடல்நலம் காக்க உதவும். உங்களின் நடை உடை பாவனைகளில் புதிய பரிமளிப்பு உருவாகும். சமூக நிகழ்வுகளின் போக்கு உணர்ந்து செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்துகொள்வர். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியம் சிறந்து, குடும்ப நலன் பேணுவார். மாணவர்கள் ஒவ்வாத உணவுவகை உண்ணவேண்டாம்.

கும்பம்:

தொழில் வளர்ச்சிக்காக நவீன உபகரணங்கள் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சிறப்பான செயல்களால், நன்மதிப்பு பெறுவர். நிம்மதியான வாழ்க்கைமுறை பெறுவீர்கள். மனதில் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் அனைத்து நற்பலன்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்க பண வசதி துணை நிற்கும். புத்திரரின் வார்த்தைகளில்  ஆன்மீகம் சம்பந்தப்பட்டிருக்கும். இல்லறத்துணை உங்கள் நல்ல குணத்தைப் பாராட்டுவார். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்புக்குத் தேவையான பண வசதியை திருப்திகரமான முறையில் பெறுவர்.

மீனம்:

இல்லறத்துணை உங்கள் வாழ்வின் சிரமம் குறைய இயன்ற அளவு துணை நிற்பார். தொழில், வியாபாரத்தில் உருவாகும் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வதால், உற்பத்தி, விற்பனை சீராகும். கிரகங்கள் பாதகமாக இருப்பதால், நீதி, நேர்மை குணங்களை அதிகமாக பின்பற்ற வேண்டும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்கவேண்டாம். அறிமுகமில்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தரக்கூடாது. பிள்ளைகளின் நற்செயல் மனதிற்கு ஆறுதல் தரும். பூர்வீக சொத்தில் அளவான் பண வரவு கிடைக்கும். பெண்கள் சிகக்ன பணச் செலவில் குடும்பத் தேவை நிறைவேற்றுவர். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

*************************************

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>