/* ]]> */
Dec 052020
 
மேஷம்:

பொது: சூரியன், குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவது நல்லது. ஜன்ம ராசியை 5-ல் உள்ள குரு பார்ப்பதால் உடல் நலம் கவனிப்பின்பேரில் சீராகவே இருந்துவரும். அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் குறைவிராது. சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: குரு, சுக்கிர பலத்தால் பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும்.

நிலபுலங்கள்: 7-ஆம் தேதி முதல் சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைக்கும். புதிய சொத்துக்களும் பொருட்களும் கூட சேரும்.

தொழில்: அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான போக்கு நிலவிவரும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களது எண்ணம் நிறைவேறும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
மாதர்களுக்கு: 
மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உல்லாசப் பயணம் மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்:

பொது: செவ்வாய், புதன், சுக்கிரன், கேது ஆகியோரது நிலை சிறப்பாக உள்ளது. 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவது நல்லது. உடல் நலம் சீராக இருந்துவரும். செல்வாக்கு உயரும். கற்பனை வளம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். துர்காம்பிகையை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பல வழிகளில் வருவாய் வந்து சேரும். பொருள் திரட்டும் ஆர்வம் கூடும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைத்துவரும். சர்ப்பேஸ்வரரை வழிபடவும்.

தொழில்: வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். இயந்திரப்பணியாளர்களுக்கும் இன் ஜினீயர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். எரிபொருட்கள், மின் சாதனங்கள், வெடிப்பொருட்கள், கட்டடப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும்.

மாதர்களுக்கு: எதிர்ப்புக்கள் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு: 7-ஆம் தேதி முதல் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

மிதுனம்:

பொது: புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவது நல்லது. ஜன்ம ராசியில் சூரியனும் 3-ல் குருவும், 5-ல் செவ்வாயும் உலவுவதால் உஷ்ணாதிக்கம் கூடும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ராசிநாதன் ராசியிலேயே இருப்பதால் அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் குறைவிராது. குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: 7-ஆம் தேதி முதல் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். மக்களால் பிரச்னைகள் சூழும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். என்றாலும் அதிக ஆதாயத்தை எதிர்பார்க்க இயலாது.

தொழில்: கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். திரவப்பொருட்களால் வருவாய் கிடைக்கும். பயணம் சார்ந்த தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புணர்ந்து காரியமாற்றுவது நல்லது. இயந்திரப்பணியாளர்கள் பாதுகாப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

மாதர்களுக்கு: முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். வசீகரச் சக்தி கூடும்.

மாணவர்களுக்கு: திறமைக்குரிய வளர்ச்சி காணலாம். குருப் பிரீதி செய்து கொள்வது நல்லது.

பொது: குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உடல் நலம் சீராகவே இருந்துவரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பார்கள். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவது நல்லது. நாகரை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: வாரப் பின்பகுதியில் பண வரவு கூடும். அதிர்ஷ்ட இனங்கள் லாபம் தரும். கொடுக்கல்-வாங்கலில் வளர்ச்சி காணலாம். குடும்ப நலம் திருப்தி தரும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புக் கூடிவரும். தந்தை நலனில் கவனம் தேவை.

நிலபுலங்கள்: சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். 7-ஆம் தேதி முதல் புதிய சொத்துக்கள் சேர வழிபிறக்கும்.

தொழில்: உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். புதிய பதவிகள் தேடிவரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வியாபாரிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கும் சங்கடங்களுக்கும் ஆளாகாமல் தப்பலாம்.

மாதர்களுக்கு: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். மதிப்பு உயரும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சனிப் பிரீதி செய்வது நல்லது.

சிம்மம்:

பொது: சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதும் நல்லது. உடல் நலம் சீராகவே இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேறுவீர்கள். நாகர் வழிபாடு நலம் தரும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: புதன் 11-ல் இருப்பதால் வார முன்பகுதியில் பண வரவு திருப்தி தரும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று கூடும். குடும்பத்தில் குதூகலம் கூடும். தந்தையால் நலம் உண்டாகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

நிலபுலங்கள்: செவ்வாய் 3-ல் இருப்பதால் சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். 4-ல் வக்கிர சனி இருப்பதால் சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது.

தொழில்: அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெற்றிகள் குவியும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.

மாதர்களுக்கு: உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: வார முன்பகுதி சிறப்பாக அமையும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிடைக்கும்.

பொது: சூரியன், புதன், சனி, கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். பிறரால் புகழப்படுவீர்கள். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் கைகூடும். வாரப்பின்பகுதியில் பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. துர்கையை வழிபடவும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: வார முன்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சச்சரவுகள் கூடும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். மக்களால் செலவுகள் கூடும். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் சூழும்.

நிலபுலங்கள்: சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் விழிப்புத் தேவை. சட்ட ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

மாதர்களுக்கு: 7-ஆம் தேதி முதல் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். பொருள் வரவு அதிகரிக்கும். முக்கியமான எண்ணம் நிறைவேறும்.

மாணவர்களுக்கு: புத பலத்தால் அனுகூலமான போக்கு தென்படும். விளையாட்டு விநோதங்களில் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் ஈடுபடவும்.

துலாம்:

பொது: குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருக்கிறது. புதன் 9-ல் இருந்தாலும் நலம் புரிவார். 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உடல் ஆரோக்கியம் சீராகவே இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. குரு பலம் இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகள் நிறைவேறும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் வாரப் பின்பகுதியில் அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தந்தை நலம் சீராகும். மக்களால் அனுகூலம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரால் அளவோடு நலம் உண்டாகும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் மூலம் ஓரளவு வருவாய் கிடைத்துவரும்.
தொழில்: 
கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். ஆன்மிகவாதிகள், உத்தியோகஸ்தர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. விளையாட்டு விநோதங்களில் எச்சரிக்கை தேவை.

மாதர்களுக்கு: தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். மதிப்பு உயரும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான போக்கு தென்படும். விருப்பமான துறையில் மேற்படிப்புப் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:

பொது: புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவது நல்லது. ராசிநாதன் 12-லும், ஜன்ம ராசியில் சனியும் இருப்பதால் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். எடுத்த காரியத்தை முடிக்க அரும்பாடுபட வேண்டிவரும். மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும். சுப்பிரமணியரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி காணலாம். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மக்கள் நலனில் கவனம் தேவை. தந்தையால் மனவருத்தம் உண்டாகும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

தொழில்: எத்தொழிலிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. புதிய துறைகளில் பிரவேசிக்க இந்த நேரம் சிறப்பானதாகாது. உழைப்புக்குப் பின்வாங்கலாகாது. வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். போக்குவரத்து இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

மாதர்களுக்கு: 7-ஆம் தேதி முதல் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

மாணவர்களுக்கு: விளையாட்டு விநோதங்களைத் தவிர்த்துப் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் ஓரளவு வளர்ச்சி காணலாம்.


தனுசு:

பொது: செவ்வாய், குரு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருக்கிறது. 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது நல்லது. முதுகு, மார்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் குறைவிராது. சுப காரியங்கள் நிகழும். வாரப் பின்பகுதியில் தெய்வப்பணிகள் நிறைவேறும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். தர்ம சிந்தனை உருவாகும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். 7-ஆம் தேதி முதல் கணவன் மனைவி உறவு நிலை சீர்பெறும்.

நிலபுலங்கள்: சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

தொழில்: நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது எண்ணம் ஈடேறும்.

மாதர்களுக்கு: 7-ஆம் தேதி முதல் பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும்.

மாணவர்களுக்கு: குரு பலத்தால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி காணலாம்.

மகரம்:

பொது: சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. அடிவயிறு, நரம்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடு முளைக்கும். குரு, சுக்கிரன், ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து கொள்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பணப் பிரச்னை இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். என்றாலும் சமாளிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தந்தையால் நலம் உண்டாகும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சங்கடம் ஏற்படும்.

நிலபுலங்கள்: செவ்வாய் பலம் காரணமாக சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும்.

தொழில்: அரசாங்கப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவிகள் கிடைக்கும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், கட்டடப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

மாதர்களுக்கு: எதிர்ப்புக்கள் கூடும்,. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு: புத பலத்தால் வளர்ச்சி காண வழிபிறக்கும். குருப் பிரீதி செய்து கொள்ளவும். ஆசிரியர்களிடம் பணிவு தேவை.

கும்பம்:

பொது: குரு, சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது குறை. ஜன்ம ராசியைக் குரு பார்ப்பதாலும், சனி வலுத்திருப்பதாலும் உடல் நலம் சீராக இருந்துவரும். மதிப்பு உயரும். சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும். நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும். 7-ஆம் தேதி முதல் சொத்துப் பிரச்னை ஏற்படும்.

தொழில்: கலைஞர்களது நிலை உயரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். தொழிலாளர்களும் விவசாயிகளும், பொதுநலப்பணியாளர்களும் அனுகூலமான போக்கைக் காண்பார்கள். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் நற்பெயர் கிடைக்கும்.

மாதர்களுக்கு: 6-ஆம் தேதிக்குள் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். 7-ஆம் தேதி முதல் சங்கடங்கள் சூழும். எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

மாணவர்களுக்கு: புத்திசாலித்தனம் பளிச்சிடும். வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.

மீனம்:

பொது: புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது நிலை சிறப்பாக உள்ளது. 7-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவது நல்லது. குரு 6-லும், செவ்வாய் 8-லும் உலவுவதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிவ வழிபாடு நலம் தரும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு சாதாரணமாகவே காணப்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் சங்கடம் ஏற்படும்.

நிலபுலங்கள்: புத பலத்தால் சொத்துக்கள் சேரும். செவ்வாய் 8-ல் இருப்பதால் சொத்துப் பிரச்னைகளும் ஏற்படும். செவ்வாய்க்குப் பிரீதி செய்து கொள்வது நல்லது.

தொழில்: வியாபார அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். எழுத்து, பத்திரிகை, கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகள் ஆக்கம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு வருவாய் கூடும். இயந்திரப்பணியாளர்களும் இன் ஜினீயர்களும் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் சூழும். பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது.

மாதர்களுக்கு: மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உற்சாகமாக நடைபோடுவீர்கள்.

மாணவர்களுக்கு: பள்ளி மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். கல்லூரிகளில் உயர் படிப்புப் படிப்பவர்கள் படிப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். 6-ல் உள்ள குருவுக்கு நெய் தீபமேற்றி வழிபடவும்.


8888888888888888888888

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>