/* ]]> */
Jun 032017
 

4.6.17 முதல் 10.6.17  வரையான  வார ராசி பலன்:

Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்
Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்

மேஷம் :
இல்லறத்துணையின் எதார்த்த குணம் உணர்ந்து நடந்துகொள்வீர்கள். புத்திரரின் மனவருத்தம் சரி செய்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெற சத்தான உணவு உண்பீர்கள். வீடு வாகன பயன்பாட்டு வசதி சராசரி அளவில் இருக்கும். கடந்த நாட்களில் விடுபட்ட நன்மைகளை புதிய முயற்சியினால் பெறுவீர்கள். பேசுவதில் நிதானமும் சமயோசிதமும் பின்பற்றவேண்டும். சுய கௌரவம் பேணுவதிலும் பணவரவு பெறுவதிலும் சம மனநிலை கொள்வீர்கள். கூடுதல் உழைப்பினால், தொழிலில் உற்பத்தி விற்பனை மேம்படும். பணியாளர்களுக்கு வேலையில் அதிக ஈடுபாடு நன்மை பெற உதவும். பெண்கள் குடும்ப நலன் சிறக்க முக்கிய கவனம் கொள்வர். மாணவர்கள் பயிற்சிமுறை தவறாமல் பின்பற்றி , திட்டமிட்ட தேர்ச்சிவிகிதம் பெறுவர்.
ரிஷபம்:
விபரீத ராஜயோக பலன் உண்டாகி, பூர்வீக சொத்தில் அதிக பண வரவும், புதிய சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். வீட்டுத்தேவை பூர்த்தியாகி, குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். நண்பர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நீங்கள் தோடங்கிய செயல் எல்லாம் பொன்னாக துலங்கும். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு பாசம், மனதை மகிழ்விக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம், உபரி லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு, , பிற சலுகை பெறுவர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெற உறுதுணை புரிவர். மாணவர்கள் தேர்ச்சிவிகிதம் அதிகரித்து நற்பெயர் , பாராட்டு பெறுவர்.
மிதுனம் :
இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் உதவிகரமாக நடந்துகொள்வர். தொழிலில் அளவான மூலதனம் , கூடுதல் உழைப்பு என்ற நடைமுறையைப் பின்பற்றுவீர்கள். பணியாளர் நிலுவைப்பணி நிறைவேற்றுவதில் கவனம் கொள்வர். மனதில் உருவாகும் தாழ்மை உணர்வுகளை விலக்குவதால், பணி சிறந்து நல்ல பலனைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது, ஒற்றுமை பலம் பெற உதவும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரரின் செயல்பாடு மன வருத்தம் தரும். எதிர் மனப்பாங்கு உள்ளவரிடமிருந்து விலகுவது நல்லது. குடும்பப் பெண்கள் செலவுகளில் சிக்கனம் கடைப்பிடிப்பர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.
கடகம்:
இல்லறத்துணையின் மனக் குறையை சரி செய்வதால், அன்பு பாசம் சீரான அளவில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் பண வரவில் ஒரு பகுதியை இறைவழிபாட்டுக்கும், அறப்பணிக்கும் செலவிடுவீர்கள். உங்கள் முயற்சிகள் சிறப்பாக நிறைவேறும். பேசும் வார்த்தையில் நம்பிக்கையின் வெளிப்பாடு தெரியும். அக்கம்பக்கத்தவ்ர் அதிக அன்பு பாராட்டுவர். புத்திரரின் செயல்திறன் வளர்த்து படிப்பு வேலையில் முன்னேற்றம் காண்பர். நோய் தொந்தரவு குறைந்து அரோக்கிய உடல்நலம் பெறுவீர்கள். பணியாளரகளுக்கு சலுகைப்பயன் பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் கணவரின் சம்மதமின்றி, உறவினர்களுக்கு பண உதவி செய்யவேண்டாம். மாணவர்கள் புதியவரை நண்பராக ஏற்பதில் தகுந்த கவனம் வேண்டும்.
சிம்மம்:
இல்லறத்துணையின் கவனக் குறைவான செயல்களைப் பொறுத்துக்கொள்வீர்கள். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானத்தின் பெரும்பகுதி குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். எதிரியினால் வரும் தொந்தரவை சரி செய்ய சில மாற்று ஏற்பாடு தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய புதிய யுக்திகளைப் பின்பற்றுவீர்கள். பணியாளர்கள் சக பணியாளர்களின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். மனதில் தைரியமும் செயல்களில் புதிய வேகமும் இருக்கும். எவரிடமும் சகஜமாக பழகுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திரர் கல்வி நல் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவர். குடும்பப் பெண்கள் கணவரின் வாழ்வியல் நடைமுறை சிறக்க உதவுவதால், ஒற்றுமை வளரும். மாணவர்கள் அதிக விலை உள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.
கன்னி:
இல்லறத்துணையின் ஆலோசனை புதிய வழிகாட்டுதலை உருவாக்கும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுவகை உண்ணவேண்டாம். பணவரவு அதிகம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். ஒருமுகத்தன்மையுடன் பணிபுரிந்து அதிக நன்மை அடைவீர்கள். இளைய சகோதரர் வகையில் சிறு மனக்கிலேசம் ஏற்படலாம். வாகனப் பராமரிப்புப் பணி கூடுதல் பணச்செலவை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் நிதானம் பின்பற்ற வேண்டும். பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்கள் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறும் வகையில் நடந்துகொள்வர்.
துலாம் :
இல்லறத்துணையின் அன்பு பாசம் பரிபூர்ணமாகக் கிடைக்கும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து சில புத்திமதிகளைச் சொல்வீர்கள். உடல்நலம் சீராக சிறுஅளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மன உறுதியுடன் நற்செயல்களை நிறைவேற்றுவீர்கள். அவமரியாதையுடன் உங்களைப் பேசியவர் தன் குறை உணர்ந்து அன்பு பாராட்டுவர். தாய்வழி உறவினர் தேவையான உதவி வழங்குவர். தொழில், வியாபாரம் நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். ஆதாய பண வரவு கிடைக்கும். பணியாளர் சலுகைப் பயன் பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் செலவுகளில் சிக்கனம் மேற்கொண்டு பண சேமிப்பை அதிகரிப்பர். மாணவர்கள் விரும்பிய பொருள் பெற்றோரிடம் கேட்டுப் பெறுவர்.
விருச்சிகம்:
இல்லறத்துணை உங்களின் நல்ல குணம் உணர்ந்து பாராட்டுவார். பூர்வ சொத்தில் உபரி பண வரவு கிடைக்கும். வெளியூர்ப் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். எவரிடமும் நிதானித்துப் பேசுவதால் மட்டுமே, சிரமம் தவிர்ப்பதோடு, அவப் பெயரிலிருந்தும் தப்பலாம். சொந்தப் பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவதால், உரிய நன்மையும் மன அமைதியும் எளிதாகப் பெறலாம். குடும்பப் பெண்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் பணிகளை மேற்கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதைத் தவிர்ப்பதால், படிப்பில் கவனம் வளரும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சமயோசிதமாக சரி செய்வீர்கள். பணியாளர் நிலுவைப்பணி நிறைவேற்றி நன்மதிப்பு பெறுவர்.
தனுசு:
இல்லறத்துணை உங்கள் அருமை பெருமை நிறைந்த பணிகளை பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். இனிய வார்த்தை பேசி, நண்பரிடம் மதிப்பு மரியாதை பெறுவீர்கள். அலைச்சல் பயணம் தவிர்ப்பதால், பணி திட்டமிட்டபடி நிறைவேறும். குடும்பத் தேவைக்கான பணச் செலவு அதிகரிக்கும். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவேண்டும். புத்திரர் உடல்நல ஆரோக்கியம் பலம் பெற ஊட்டச் சத்து நிறைந்த உணவு தருவீர்கள். எதிரியால் இருந்துவந்த தொந்தரவு விலகும். தொழில் நுட்ப பணியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வர். பெண்கள் விதவிதமான உணவு சமைத்து , உறவினர்களை உபசரிப்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து தர தேர்ச்சியில் முன்னேற்றம் காண்பர்.
மகரம்:
இல்லறத்துணை உதவிகரமாக இருப்பார். பிள்ளைகள் உங்கள் பேச்சைத் தட்டமாட்டார்கள். பேச்சு , செயலில் நிதான குணம் பின்பற்ற வேண்டும். செலவுகளில் சிக்கனம் மேற்கொள்வதால், பணக்கடன் பெறுகிற சூழ்நிலையைத் தவிர்க்கலாம். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு வாகனத்தில் இடம் தரவேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி வராமல் தடுக்க விழிப்புணர்வுடன் பணிபுரிய வேண்டும். பணியாளர்கள் நிர்வகத்தின் சட்டதிட்டங்களை தவறாமல் மதித்து நடக்கவேண்டும்.பெண்கள் குடும்ப நலம் சிறக்க கணவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

கும்பம்:

இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். புத்திரர்களின் படிப்பு செயல்திறன் திருப்திகர வளர்ச்சி பெறும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். வழக்கு விவகாரத்தில் சாதகமற்ற தீர்ப்பு வரும். தொசில், வியாபரம் செழித்து பணவரவு கூடும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயரும் சலுகைப் பயனும் பெறுவார்கள். மனதில் ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கும். தன்னைச் சார்ந்தவர்களின் நலன் சிறக்க தேவையான உதவி ஆலோசனை வழங்குவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.பெண்கள் குடும்ப பணவசதிக்கேற்ப அணிகலன் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வர்.
.மீனம்:
இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வார். புத்திரரின் நற்செயல் மகிழ்வைத் தரும். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு. பணியாளர்கள் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறுகிற முயற்சி கைகூடும். அதிக செல்வ வளம் பெறமுடியும். வாழ்வு சுபிட்சமாக அமைந்து, மனதில் நம்பிக்கை உணர்வை வலுப்படுத்தும். வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரரின் திறமைகள் மேம்படும். எதிர்மறை குணம் உள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். வாகன பயணம் இனிதாக அமையும். தொழிலில் அபிவிருத்திப் பணி புரிவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான இடம் பெறுவர்.
.^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
********************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>