/* ]]> */
Apr 292017
 

வார ராசி பலன் 30.4.17 முதல் 6.5.17 வரை-அனைத்து  ராசிகளுக்கும் :

Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்
Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்

மேஷம்:
பிறரது விவகாரங்களில் தலையிடாமல் , சொந்தப் பணிகளில் ஈடுபடுவது நல்லது. உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்காக அதிகமாக பணச் செய்யாமல், அளவாக செலவிடுவது நல்லது. பிள்ளைகளிடம் பிடிவாதப் போக்கு தெரியும். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியிருக்கும். பணியாளர்கள் அதியக் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியிருக்கும். பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால், சீரான தேர்ச்சி விகிதம் பெறலாம்.
ரிஷபம்:
இந்த வாரம் கிரகங்களின் அனுகூலத்தால், உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திட்டமிட்ட பணிகளை , எளிதாக நிறைவேற்றுவீர்கள். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க திட்டமிட்டு உதவுவீர்கள். எதிர்மறையாகக் கருதியவர்களில் சிலர் இப்போது மனதில் அன்பு எண்ணத்துடன் பழகுவர். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் குடும்பப் பணிகளை மேற்கொள்வர். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திபணி புரிவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களை ஊக்கப்படுத்தி , பணி இலக்கு நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, பண வசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து , கூடுதல் மதிப்பெண் பெறுவர்.

மிதுனம்:
மன உறுதியுடன் செயல்பட்டு , நேர்மையைக் கடைப்பிடிப்பீர்கள். பண வசதிக்கேற்ப செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுக்கான மங்கல நிகழ்ச்சி நடத்தும் யோகம் உண்டாகும். வாகன பயன்பாடு இனிதாக அமையும். பிள்ளைகளின் சேர்க்கை, சகவாசம் அறிந்து கண்டிப்பதில் நிதானத்தைப் பின்பற்ற வேண்டும். உடல்நலம் சீராக, காலத்தோடு உணவு உண்பதும், தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வதும் அவசியம். இல்லறத்துணை சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து மனதில் நிம்மதியை உருவாக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகைப் பயன் கிடைக்கும். மாணவர்கள் சக மாணவர்களின் உதவியால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
கடகம்:
முக்கியமான பணிகள் நிறைவேற, சமயோசித புத்தியும், சுறுசுறுப்பான செயல் மட்டுமே உதவும். சமூக நிகழ்வுகளை அறிவதில் இருந்த ஆர்வம் குறையும். அதிகமாக உங்களைப் புகழ்ந்து பேசுபவரிடம் கவனமாகப் பழகவும். வாகனப் பராமரிப்பு பணச் செலவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவை நிறைவேற்ற கொஞ்சம் பணக்கடன் பெறுகிற நிலை உருவாகும். சொத்து ஆவணங்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர் ,மதிப்பு மரியாதை தருவர். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சு வார்த்தையில் நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் தகுந்த அக்கறை கொள்வர். மாணவர்கள் உடல்நலத்துக்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம்.
சிம்மம்:
வாழ்வுக்குத் தேவையான நன்மைகளைப் பெற மன உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். புதிதாக வீடு வாகனம் வாங்கும் வகையில் உங்கள் அந்தஸ்து உயரும். பிள்ளைகள் அறிவுத் திறன் வளர்ந்து, பெருமை தரும் செயல்களில் ஈடுபடுவர். விவகார பேச்சுகளில் சமரச தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். புதியவர்களின் வரவினால், தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாகப் பணி புரிந்து , பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்ப எதிர்பார்ப்பு நிறைவேறுவதால், தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்கள் நன்றாகப் படித்து, ஆசிரியர் ,பெற்றோரிட ம் வாழ்த்து பெறுவர்.
கன்னி:
மனக் கவலையையும்., சோம்பல் குணத்தையும் அகற்றுவதால் மட்டுமே, பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நன்கு பழகியவர்களிடமும் கூட நிதானித்து பேசுவது நல்லது. வீடு வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது நல்லது. பிள்ளைகளின் விருப்பத்தை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது. இல்லறத்துணையின் ஆலோசனை உங்கள் மனதில் நம்பிக்கை ஒளியை உண்டாக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். தொழிற்சாலைப் பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்கள் ஒருமுகத் தன்மையுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும்.
துலாம்:
மனதில் நம்பிக்கையுடன் செயல்பட்டு, வாழ்வில் கூடுதல் வளம் பெற தேவையான பணிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சமூக ஆர்வம் வளரும். வாகன பயன்பாடு சரியான அளவில் இருக்கும். ப்ள்ளைகளின் மனக்குறையை சரி செய்வதால் குடும்ப ஒற்றுமை சீராகும். எதிரியால் உருவாகிற இடயூறு செயல் இழக்கும். இல்லறத்துணை அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். தொழிலில் சில மாற்றம் பின்பற்றி உரிய நன்மை பெறுவீர்கள். பணியாளர்கள் திறமைமிகு செயலால் நிர்வாகத்திடம் ந்ன்மதிப்பு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்ப பண வசதிக்கேற்ப வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் வெளியே சுற்றுவதைத் தவிர்த்து படிப்பில் கவனம் கொள்வர்.
விருச்சிகம்:
சாதகமற்ற கிரகங்களால் உங்கள் செயல்களில் குளறுபடை வராமல் தடுக்க முன்யோசனையுடன் ஈடுபடவேண்டும். ஆடம்பர செலவுகள் உருவாகி சேமிப்பு பணம் சிறிது கரையும். உடன்பிறந்தவர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்வீர் பூர்வீக சொத்திலிருந்து பெறுகிற பயன்கள் மனதிற்கு நம்பிக்கை தரும். பிள்ளைகளின் விருப்பம் ஓரளவு நிறைவேற்றுவிர்கள். குபாதுகாப்புக் குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.உடல்நல ஆரோக்கியம் சீராக , தகுந்த ஓய்வு , மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத்துணை டும்பப் பொறுப்புகளை உணர்ந்து ,உடஹ்விகரமாக செயல்படுவர். தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். தொழிற்சாஅலிப் பணியாளர், பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் கணவரின் வாழ்வியல் சூழ்நிலையைக் கனத்தில்கொண்டு குடும்பப் பணி மேற்கொள்வர். மாணவர்கள் பாதுகாப்புக் குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.
தனுசு:
மனதில் மகிழ்ச்சியும், செயல்களில் கூடுதல் நன்மையும் உருவாகும். வாழ்வில் அதிக நன்மை பெற புதியவர்களின் நட்பு, உதவி கிடைக்கும்.இனிய வார்த்தை பேசி, உங்கள் மீதான நன்மதிப்பை பாதுகாப்பீர்கள். வீடு வாகனம் புதிதாக வாங்குகிற திட்டம் சிலருக்கு நிறைவேறும். பிள்ளைகளின் சேர்க்கை சகவாசம் அறிந்து நல்வழி நடத்துவது அவசியம். கடந்த நாட்களில் எதிர்மறையாக இருந்த செயல்கள் இப்போது அனுகூலம் தருவதாக மாறும். இல்லறத்துணை உங்களின் நல்ல குணத்தைப் பாராட்டுவர். தொழிலில் அபிவிருத்திப் பணி , தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். அரசாங்க உதவி பெற அனுகூலம் உண்டு. பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு ,சன்மானம் கிடைக்கும். பெண்கள் புத்தாடை அணிகலன்கள் வாங்குவர்ர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.
மகரம்:
கடந்த வாரம் ஆர்வமுடன் செய்த செயல்களுக்கு பலன் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, செயல்படுவதால், வாழ்வியல் நடைமுறை சீராக அமையும். நண்பர்களிடம் சில விஷயங்கள் பற்றிப் பேசுவீர்கள். புதிய தீர்வு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி, நிம்மதி பெறுவீர்கள். உடல் நலம் சீராக, சத்து மிகுந்த உணவு உண்பதும், தேவையான ஓய்வு எடுப்பதும் அவசியம். இல்லறத்துணை கனிவான வார்த்தை பேசி , அன்பு பாராட்டுவர். தொழிலில் உள்ள அனுகூலத் தனமைகளை அக்கறையுடன் பாதுகாப்பீர்கள். பணியாளர்களுக்கு பண வரவைவிட செலவுகள் அதிகமாகும். பெண்கள் குடும்பச் செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் அதிக விலையுள்ள பொருள்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.
கும்பம்:
உங்களின் சிறு முயற்சியும் அதிக அளவிலான நன்மை பெற்றுத் தரும். அக்கம்பக்கத்த்வரிடம் இருந்த மனக் கிலேசம் விலகி, நல் அன்பு மலரும். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். வாகனப் பராமரிப்புச் செலவு அவசியம். பிள்ளைகளின் அறிவுத்திறன் மிகுந்த செயல்களைப் பார்த்து வியப்படைவீர்கள். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகைப் பயன் கிடைக்கும். எதிர்மறையாக செயல்பட்டவரும் இப்போது மறைமுகமாக உங்களிடம் உதவி பெற முயற்சிப்பர். இல்லறத்துணையின் கருத்துக்கு மதிப்பு தருவதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராகும். தொழில் வியாபாரம் நடைமுறை தாக்கம் உணர்ந்து கூடுதல் மூலதனம் செய்வீர். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகைப்பயன்கள் கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்ப வ்வகாரம் பற்றிப் பேசுவதில் கணவரின் மனநிலைக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. மாணவர்கள் புதிய நண்பர்களை உபசரித்து மகிழ்வதில் ஆர்வம் கொள்வர்.
மீனம்:
மனதில் உருவாகும் குழப்பமான சிந்தனைகளை உங்கள் நலம் விரும்பும் ஒருவரிடம் கூறி ஆலோசனை பெறுவது அவசியம். பணப் பரிவர்த்தனையில் சிக்கனம் , பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். நீண்ட தூர வாகனப் பயணம் தவிர்ப்பதால், உங்கள் உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்பேச்சு கேட்டு நடப்ப்ர். இல்லறத்துணை குடும்ப நலன் பாதுகாப்பதில் அக்கறை கொள்வர். தொழிலில் உருவாகிற இடையூறைச் சரி செய்வதால், உற்பத்தி விற்பனையில் சராசரி நிலையை அடையலாம். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே நிர்வாகத்திடம் எடுத்த நற்பெயரைக் காப்பாற்றி வைத்துக்கொள்ள முடியும். பெண்கள் சிறிசிறு செலவுகளுக்கு தங்கள் சேமிப்பைப் பயன்படுத்துவர். மாணவர்கள் நண்பர்களிடம் சுமுக நட்பு பாராட்டுவர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
**************************************************

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>