/* ]]> */
Sep 232018
 

23.9.18 முதல் 30/ 9.18  வரை – வார ராசி பலன்:

Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்
Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்

மேஷம்:
இந்த வாரம், உங்கள் சமூக அந்தஸ்துக்கு பங்கம் ஏற்படுத்துகிற வகையில் சிலர் செயல்படுவர். நீதி, நேர்மை குணம் தொடர்ந்து பின்பற்றுவதால் இடையூறுகளைத் தவிர்க்கலாம்.அளவான பண வரவில் குடும்பச் செலவுகளில் சிக்கனம் மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் நல் அன்பு பாராட்டுவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவது அவசியம். புத்திரரின் மனதில் நம்பிக்கை வளர தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். கூடுதல் உழைப்பினால், தொழிலில் உற்பத்தி, விற்பனையை சராசரி அளவுக்கு கொண்டு வருவீர்கள். பணியாளர்கள் குடும்பச் செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுகிற நிலை உணடு. பெண்கள் குடும்ப நலனில் கூடுதல் அக்கறை கொள்வர். மாணவர்கள் உரிய பயிற்சியினால் மட்டுமே கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர்.
ரிஷபம்:
உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் புதிய வாய்ப்புகள் வந்து உதவும். அனைவரிடமும் நல்வார்த்தை பேசி, அன்பு, நட்பை வளர்ப்பீர்கள். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றுவதால், திருடர் பயம் இல்லாமல், பணிகளை மேற்கொள்ளலாம். புத்திரர் விரும்பிய பொருளை தாராள பணச் செலவில் வாங்கித் தருவீர்கள். விருந்து விஷேஷங்களில் மகிழ்ச்சிகர மனதுடன் கலந்துகொள்வீர்கள். இல்லறத்துணையின் கருத்து , குடும்பத்திற்கு நலமும், வளமும் சேர்ப்பதாக அமையும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து, ஆதாய பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பு, சன்மானம் பெறுவர். குடும்பப் பெண்கள், பண வசதிக்கேற்ப தங்க நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் திருப்திகரமான தேர்ச்சி விகிதம் பெறுவர்.
மிதுனம்:
இந்த வாரம் உங்களுடன் நன்கு பழகியவர்கள்கூட , உங்கள் தற்பெருமைப் பேச்சு தாங்க முடியாமல், உங்களைவிட்டு விலகிச் செல்வர். இதனால் நீங்கள், உங்கள் பணிகளில் மட்டுமே ஈடுபடுவது எதிர்கால நன்மைகளை கூடுதல் அளவில் பெற இயலும். வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணத்தை சரி செயய் சில வாக்குறுதி வழங்குவீர்கள். எதிரிகளிடமிருந்து விலகுவதால், நேரமும் மன அமைதியும் பாதுகாக்கலாம். இல்லறத்துணையிடம் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணியாளரகள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் மாறாமல், பின்பற்ற வேண்டும். பெண்கள் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பணம் செலவு செய்வது நல்லது. மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
கடகம்:
மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே திட்டமிட்ட பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற இயலும். தொழிலில் வளர்ச்சியும் கூடுதல் பண வரவும் பெற , புதிய வாய்ப்பு உருவாகும். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகுதிக்கு மீறிய அளவில் எந்த ஒரு வாக்குறுதியும் தரக்கூடாது. தாயின் தேவையை நிறைவேற்றுவதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வளரும். உடல் நலத்துக்கு ஒவ்வாத உணவு வகைகளை தவிர்க்கவும். இல்லறத்துணை சுய கௌரவ எண்ணத்துடன் நடந்துகொள்வார். பணியாளர்களுடன் லட்சிய மனதுடன் பணிபுரிவதால் மட்டுமே எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய இயலும். பெண்கள் குடும்ப பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. மாணவர்கள் அக்கறையுடன் படித்து அதிக தேர்ச்சி விகிதம் பெறுவர்.
சிம்மம்:
இந்த வாரம் ,கிரக நிலவரம் ,உங்கள் பணிகளை எளிதாக நிறைவேற்றி, அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும். நண்பர்களிடம் நட்புறவு பலமாகும். அரசு வகையிலான உதவி கிடைக்க அனுகூலம் உண்டு. வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் உண்டாகும். செல்வ வளம் அதிகரித்து, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத் துணையின் உறவினர் உதவிகரமக நடந்துகொள்வர். தொழிலில் கூடுதல் பணச் செலவில் அபிவிருத்திப் பணி மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு, சலுகைப் பயன் கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க உரிய வழிவகை காண்பர். மாணவர்கள் நன்றாகப் படித்து கூடுதல் தேர்ச்சி விகிதம் காண்பர்.
கன்னி:
பொது இடங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவது, வேடிக்கை பார்ப்பது ஆகிய செயல்களை தவிர்ப்பதால், மன நிம்மதியைப் பாதுகாக்கலாம். உடன் பிறந்தவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணம் எளிதாக அமையும். பிள்ளைகளுக்கு அருமையான அறிவுரை வழங்குவீர்கள். உடல்நலத்திற்கு சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத்துணை குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார். தொழிலில் சில நடைமுறை மாற்றம் பின்பற்றுவதால், உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் நிதான அணுகுமுறையைப் பின்பற்றவும். பெண்கள் உறவினர்களை மனமுவந்து உபசரிப்பர். மாணவர்கள் படிப்பில் முன்னேற கூடுதல் பயிற்சி மேற்கொள்வர்.

துலாம்:
எந்த செயலையும் நிதானம், நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள். நற்பலன் அதிகரித்து, உபரி பண வரவைப் பெற்றுத் தரும். சமூகப் பணி புரிவதிலும் ஆர்வம் வளரும். உறவினர்களின் கருத்து முரண்பாடாக இருந்தாலும், பொறுத்துக்கொள்வது நலல்து. சிலருக்கு, வீடு மற்றும் பணியிடம் மாறுகிற சூழ்நிலை ஏற்படும். பூர்வ சொத்தில் அளவான பண வரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்துகொள்வீர்கள். இல்லறத்துணை அதிக அன்பு பாராட்டுவர். தொழிலில் வளர்ச்சி பெற சில மாற்றம் உருவாக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள், பணியாளர்களை ஊக்கப்படுத்துவதால், பணி இலக்கு, குறித்த காலத்தில் நிறைவேறும். பெண்கள் கணவரின் சீரான பண வசதி கிடைத்து ,சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் நண்பர்களின் உதவியால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

விருச்சிகம்:
திட்டமிட்ட பணி நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோசனை, உதவி பெற்று சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பொது இடங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்ப்பது நலல்து. வெளியூர்ப் பயணம் பயன் அறிந்து சென்று வரலாம். பிள்ளைகளின் சேர்க்கை, சகவாசம் அறிந்து, நல்வழியில் செயல்பட உதவுவீர்கள்.. உணவுப் பழக்கத்தில் உரிய கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் வரவு- செலவு விபரங்களை கவனமுடன் பின்பற்றவேண்டும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பப் பெருமை பாதுகாப்பதில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நண்பர்களுடன் படிப்பு தவிர பிற விஷயம் குறித்துப் பேச வேண்டாம்.
தனுசு:
இந்த வாரம் உங்கள் நடை, உடை பாவனைகளால் மற்றவர்களை வசீகரிப்பீர்கள்.உங்கள் எதிர்கால நலனுக்காக உங்கள் நண்பர்களும் உறவினர்களும் உதவி செய்வார்கள்.குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.இஷ்ட தெய்வத்துக்குரிய பூஜைகளை செய்வீர்கள்.மூதாதையர் சொத்தின் மூலம் வந்த வருமானம் உயரும்.ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைப் பாராட்டுவர்.வியாபாரத்தில் வளர்ச்சித் திட்டங்களைப் புகுத்துவீர்கள். உறப்த்தியும் விற்பனையும் பெருகும்.அரசியல்வாதிகள் கட்சியில் விரும்பிய பதவியை அடைவார்கள். பெண்கள் புகுந்த வீட்டு உறவினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்கள் படிப்பில் ஜொலித்து, ஆசிரியர் பெற்றோரின் பாராட்டுதல்களைப் பெறுவர்.

மகரம்:
சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும் வகையில் செயல்படுவீர்கள். வெகுநாள் தாமதமான சில பணிகள் புதிய முயற்சியினால், எளிதாக நிறைவேறும். குடும்பத்திற்கான பணச் செலவில் தாராள குணம் பின்பற்றுவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்ற வேண்டும். புத்திரர் த்குதி, திற்மை வளர்த்து பெருமை தேடித் தருவர். நெருப்பு, மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில், கூடுதல் கவனம் வேண்டும். இல்லறத்துணை சிறந்த ஆலோசனை கூறுவர். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் தேவை. பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள் , குடும்ப பண வசதிக்கேற்ப, வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்த்து, படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
கும்பம்:
உடல்நல ஆரோக்கியம் தகுந்த முறையில் பாதுகாத்து,பணிகளை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்வீர்கள். இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நின்று உதவும். வெளியூர்ப் பயணம், நன்மையும், இனிய அனுபவமும் பெற்றுத் தரும். புத்திரர் பெற்றோர் சொல்படி நடந்து மனதில் நிம்மதி உருவாக்குவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுவகை தவிர்ப்பது நல்லது. நிர்ப்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் கருத்துக்கு உரிய மதிப்பு தருவது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் உருவாகும் இடையூறை தாமதமின்றி சரிசெய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை முழு மனதுடன் பின்பற்றுவது அவசியம். பெண்கள் குடும்ப நலன் காக்க, தியாக மனதுடன் நடந்துகொள்வர். மாணவர்கள் படிப்பதற்கேற்ற சூழ்நிலை திருப்திகரமாக அமையும்.
மீனம்:
நடைமுறை வாழ்க்கையில் கிடைக்கிற சிறு அளவு நன்மையையும் பெரிதென மதிப்பீர்கள். பேச்சில் ஆன்மீக கருத்து நிறைந்திருக்கும். உறவினர்களிடம் பழகுவதில் இதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்வது நன்மை பெற உதவும். புத்திரரின் செயல் குறைகளை சரி செய்து வழி நடத்துவீர்கள். உடல்நலம் ஆரோக்கிய பலத்துடன் இருக்கும். இல்லறத்துணையின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை குறையாத அளவில் நடந்துகொள்ளவேண்டும். அதிக உழைப்பினால், தொழிலில் உற்பத்தி, விற்பனையை சராசரி அளவுக்கு கொண்டுவருவீர்கள் பணியாளரகளுக்கு பணி இலக்கு நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும். பெண்கள் தங்க நகை இரவல் கொடுகக் வாங்கக்கூடாது. மாணவர்கள் புதியவரக்ளை நணப்ர்களாக ஏறப்தில் மிகுந்த முன்னெச்சரிக்கை தேவை.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*******************************************************

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>