/* ]]> */
Jul 202019
 

வார ராசி பலன் 21.7. 19 முதல்  27.7. 19 வரை :

VAARA RAASI PALAN
மேஷம்:
இப்போது வாழ்வில் முன்னேறும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இதற்கு நீங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியமே காரணம். மனதில் உருவாகிற நல்ல சிந்தனைகளை செயல்வடிவமாக்கி வெற்றியடைவீர்கள். இறைவன் அருள், துணை நிற்கும். வீடு வாகன வசதி திருப்திகரமாக இருக்கும். அரசின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால், சிரமங்களைத் தவிர்க்கலாம். இல்லறத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் சராசரி உற்பத்தியும் விறபனையும் இருக்கும் . நிர்வாகத்தின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நல்லது . பெண்கள் பிள்ளைகளின் நலன் சிறக்க அதிகமாக உழைக்கவேண்டியிருக்கும். மாணவர்கள் உடல்நலத்தைக் கவனத்தில்கொள்வது நல்லது. கெட்ட சகவாசங்களாலோ, கெட்ட பழக்க வழக்கங்களாலோ, உடம்பைக் கெடுத்துக்கொண்டால், படிப்பு பாதிக்கப்ப்படும்.
ரிஷப்ம்:
இந்த வாரம் அளப்பரிய நற்பலன்கள் கிடைக்கப்போகின்றன.குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாக இருக்கும். புதிய வீடு வாகனம் வாங்குகிற திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் மனக்குறைவை சரிசெய்வீர்கள். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத் துணை கருத்து வேற்றுமையுடன் நடந்துகொள்வார். தொழில் வியாபாரத்தில் அவிவிருத்திப்பணி புரிவீர்கள். பணியாளர் சிறப்பாகப் பணி புரிந்து சம்பள உயர்வு, மற்றும் சலுகைப் பயன் பெறுவார்கள். . திறமையுடன் செயல்பட்டு பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். இனிய எண்ணங்களால் மனமகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெண்கள் உறவினர்களை நன்கு உபசரித்து, குடும்பத்திற்கு நன்மதிப்பு உருவாக்குவார்கள். மாணவர்கள் நன்கு படித்து பெற்றோரிடம் விரும்பிய பரிசுப் பொருள் பெறுவார்கள்.
மிதுனம்:
இந்த வாரம் பிள்ளைகளின் கல்வித் திறன் வளர தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பீர்கள். சமூகத்தில் பெற்ற நற்பெயரைப் பாதுகாத்துக்கொள்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புபணி அவசியமாகிவிடும் என்பதால், அந்த விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். வாக்குவாதம் , கலகம் நடக்கும் இடங்களில் நின்று வேடிக்கை பார்கக்வேண்டாம். உங்கள் ஆரோக்கியம் சற்று தொல்லை தரும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இல்லறத்துணை உங்கள் பொறுப்பான செயல்களை மனமாரப் பாராட்டுவார். வியாபாரத்தில் பண வரவு சராசரியாக இருக்கும். பணிபுரியும் பெண்கள் பணி சிறக்க கூடுதல் தொழில் நுட்பம் அறிந்துகொள்வர். மாணவர்கள் சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்களை காரசாரமாகப் பேச வேண்டாம். அப்படிப் பேச நேர்ந்தாலும் உங்கள் கருத்துக்களை வலியுறுத்துவதோ, காரசாரமாகப் பேசுவதோ வேண்டாம். கருத்து மோதலில் தொடங்கி பெரும் பிரச்சினையாகிவிடும்.
கடகம்:
இந்த வாரம் உங்கள் உடல் நலம் காக்க சீரான ஓய்வு அவசியம். இல்லறத்துணைவரின் உறவினர்கள் உங்கள்மீது அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்வீர்கள் அதனால், தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். லாப விகிதம் கூடும். சராசரி பண வரவு இருக்கும்.வீடு வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும் என்பதால், அதன்மூலம் உங்கள உழைப்பு அதிகரிக்கும். வாக்குவாதம், கலகம் நடக்கும் இடங்களில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம். இளைய சகோதரர் ஓரளவு உதவுவார். வீட்டை நம்பகத்தன்மை இல்லாதவருக்கு வாடகைக்கு விடுவதோ, வாகனத்தில் அறியாதவர்களுக்கு லிஃப்ட் தருவதோ கூடாது. மனதில் இனம் புரியாத வருத்தம் ஏற்படும். அன்புக்கு உரியவர்களிடம் ஆலோசனை பெறுவதால் நன்மை உண்டாகும். உங்கள் நடை, உடை, செயலில் சில மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். விலை உயர்ந்த பொருளை பிள்ளைகளின் பயன்பாட்டுக்கு விட்டால், அவர்களால் அதைப் பாதுகாகக் இயலாமல் போய், பொருள் நஷ்டம் ஏற்படும். பணியாளர்கள் அதிக பொறுப்புடன் நடந்துகொள்வதால், ஒழுங்கு நடவடிக்கை வராமல் தப்பிக்கலாம். பெண்கள் சிகக்னமாக செலவு செய்து குடும்பநலன் பாதுகாப்பர். மாணவர்கள் முறையான பயிற்சியினால் மட்டுமே, கூடுதல் தர தேர்ச்சி பெறமுடியும்.

சிம்மம்:
வீடு, வாகனத்தில் முறையான பயன்பாட்டு வசதி கிடைக்கும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்துவீர். உடல் ஆரோக்கியம் மேம்படும் .புதிய பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்வீர்கள். மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டு, பணியில் கூடுதல் வெற்றி பெறுவீர்கள். வீடு வாகனத்தில் முறையான பயன்பாட்டு வசதி கிடைக்கும். பிள்ளைகள் தங்களின் தகுதி திறமையை மேம்படுத்திக்கொண்டு, கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெறுவார்கள். இல்லறத்துணை உங்கள் மீது கூடுதல் அன்பைப் பொழிவார். அந்த அன்பு உங்களை உற்சாகப்படுத்துவதால், புதிய சாதனைகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரித்து, அதிக லாபம் ஈட்டுவீர்கள். பணியாளர்கள் பணி இலக்கை எள்தாக நிறைவேற்றுவர். பெண்கள் விதம் விதமான உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் கவர்ந்து, குடுபத்துக்கு நற்பெயர் ஈட்டுவர். மாணவர்கள் படிப்பில் ஜொலித்து ஆசிரியர் பெற்றோரின் பாராட்டைப் பெறுவர்.
கன்னி:
வீடு வாகனத்தில் பராமரிப்புப் பணியின் தேவை உண்டாகும். இல்லறத்துணை சேமிப்புப் பணத்தை குடும்பச் செலவுக்குத் தருவார். தாமதம் ஏற்படுத்திய பணிகளை புதிய முயற்சியுடன் செயல்படுத்துவது நல்லது. பேச்சும் செயலும் ஆரவாரமின்றி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இளைய சகோதரருடன் மனக் கிலேசம் வராத அளவிற்கு நடந்துகொள்ளவேண்டும். பிள்ளைகளின் குறைகளை இதமான அணுகுமுறையால் சரி செய்வீர்கள். உடல்நலம் பேண, நேரத்துக்கு உணவும் சீரான ஓய்வும் தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் போட்டியை சமாளிகக் மாற்று உபாயங்களைப் பின்பற்றுவீர்கல். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களை ஊகக்ப்படுத்துவதால், உற்பத்தி, விற்பனை குறித்த காலத்தில் நிறைவேறும். குடும்பப் பெண்கள் பணவசதிக்கேற்ப ஆடை அணிகல்ன்கள் வாங்குவர்.மாணவர்கள் அதிக முயற்சியுடன் படித்தால் மட்டுமே சராசரி தேர்ச்சி விகிதம் கிடைக்கும்.

துலாம்:
இந்த வாரம் பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தரக்கேட்டு தொல்லை செய்வர். குடும்பத்தின் அவசிய செலவுகளுக்கு சேமிப்புப் பணம் பயன்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் மாறி தைரியம் வளரும். நண்பர், உறவினரின் சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் மட்டுமே, நற்பேயரைப் பாதுகாகக் இயலும். இல்லறத்துணை குடும்பப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் அதிக நன்மை பெற புதிய முயற்சியை மன உறுதியுடன் செயல்படுத்துவீர். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு. பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி சலுகைப் பயன் பெறுவார்கள். . பெண்கள் குடும்பப் பணிகளை அக்கறையுடன் கவனித்து, கணவருக்கு உதவியாக இருப்பார்கள். மாணவர்கள் நண்பர்களின் துணையோடு படிப்பில் நல்ல தேர்ச்சி விகிதம் காண்பார்.

விருச்சிகம்:
இந்த வாரம், பிள்ளைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரி, தனக்கே ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து மீளமுடியாமல், உங்களுக்கு தொல்லை தருவதை நிறுத்திவிடுவார். போட்டி பந்தயங்க்ளில் ஈடுபடக்கூடாது. உங்கள் தன்மான உணர்வுக்குப் பங்கம் வரும். திட்டமிட்ட பணிகளைப் பொறுப்புடன் மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றுவீர்கள். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். இல்லறத் துணைக்கு உங்கள் மீது நம்பிக்கை தளரும். அதைச் சரி செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உழைப்பை அதிகப்படுத்தி மூலதனத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. இதன்மூலம் தேவையற்ற பணக்கடன் பெறுவதைத் தவிர்க்கலாம். இயந்திரத் தொழிற்சாலைப் பணியாளர்கள் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவர். ஒரு சிலருக்கு ஆபத்து நேரும் சூழலும் உள்ளது. தகுந்த பாதுகாப்பு முறைகளால் தப்பிக்கலாம். குடும்பப் பெண்கள் உறவினர் குடும்ப விவகாரம் குறித்துப் பேச வேண்டாம். மாணவர்கள் தேவையான முயற்சி எடுத்து தேர்ச்சி பெறுவர்.
தனுசு:
இந்த வாரம் உங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைய உதவி செய்யப்போகும் ஒரு முக்கிய மனிதரைச் சந்திப்பீர்கள். இல்லறத் துணையுடன், உறவினர், நண்பர் வீட்டு விசேஷ விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.. கடந்த நாட்களில் உங்களைத் தவறாக விமர்சித்தவர்கள் இப்போது மனதார பாராட்டுவர். அக்கம்பக்கத்தவருடன் நல் அன்பு வளரும். பிள்ளைகள் சகவாச தோஷத்தினால் படிப்பில் பின்வாங்கும் நிலை உருவாகும். உங்கள் அன்பான வார்த்தைகளால் சரி செய்யலாம். வாகனத்தில் மிதவேகம் நல்லது. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அளவு குறையும். சேமிப்பு பணம் அவசிய செலவுக்கு உதவும். பணியாளர்கள் பணி இலக்கை கூடுதல் கால அவகாசத்தில் எட்டுவர். குடும்பப் பெண்கள் கணவரின் கூடுதல் அன்பும், தாராள பண வசதியும் கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர் கவனமுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.
மகரம்:
இந்த வாரம் மனதில் தற்காப்பு உணர்வும் பய உணர்வும் மேலோங்கும். நண்பர்களின் தைரியமும் ஆதரவும் கைகொடுக்கும். பெறவேண்டிய நற்பலன்கள் சரிவரக் கிடைக்கும். இளைய சகோதரர் எதிர்பார்த்த உதவியை வழங்குவீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி செய்து கூடுதல் பயன்பாட்டு வசதி பெறுவீர்கள். பிள்ளைகள் விரும்பிய பொருளை அதிக பணச் செலவில் வாங்கித் தருவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் குடும்ப நலன் பேணுவார். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கச் செய்ய எடுக்கும் முயற்சிகளை வெளியூர்ப் பயணம் சென்று முடிப்பீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு , சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்கள் குடும்ப எதிர்காலத் திட்டங்களுக்கு கணவருக்கு நல்ல ஆலோசனை சொல்வர். மாணவர்கள் நன்றாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவர்.
கும்பம்:
இந்த வாரம் வாழ்வில் முனன்ர் பெற்ற அனுபவங்களைப் பாடமாகக் கருதி செயல்படுவீர்கள். இதனால், பணம் மற்றும் கால விரயங்களைத் தவிர்க்கலாம். சமூகப் பணியில் ஈடுபடுவீர்கள். வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள். வீட்டிற்குத் தகுந்த பாதுகாப்பு அவசியம். நற்செயல்கள் இனிதாக நிறைவேறும் நேரம்தான் இது. எதிரிகளின் தொலலை பெருமளவு குறைந்துவிடும். இல்லறத்துணைக்கு உங்கள் கருத்தை விளக்கி அவர் ஏற்றுக்கொள்ளும் அளவில் புரிய வைப்பது நலல்து. தொழில் வியாபாரத்தில் ஏற்படுகிற இடையூறுகளை சரி செய்து ,உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தினர், நிர்வாகத்தின் எதிர்பார்பபை நிறைவேற்றுகிற அளவில் அதிக பொறுப்புணர்வுடன் பணிபுரிவது அவசியம். பெண்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்தால் மட்டுமே குடும்பத்தில் பிளவு வராமல் இருக்கும். மாணவர்கள் கடும் முயற்சி எடுத்துப் படித்தால் தேர்ச்சி கிடைக்கும்.
மீனம்:
இந்த வாரம் நண்பர்களிடம் ஆன்மீக கருத்துகளைப் பேசி உற்சாகம் பெறுவீர்கள். பிள்ளைகளுக்கு சிறிய மருத்துவ சிகிச்சை தேவைப்படும். சிலர் தங்கள் சுய லாபத்துக்காக உங்களைப் புகழ்ந்து பேசுவார்கள். அவர்களிடமிருந்து விலகி விட்டால், வரப்போகும் சிரமங்களைத் தவிர்க்கலாம். உடல்நலம் சற்று தொல்லை கொடுக்கும். தகுந்த நோய்த் தடுப்பு நட்வடிக்கைகளில் இறங்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்த நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். ஆரோகியத்தைக் காத்துக்கொள்வதால் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நணப்ர்களின் உதவியோடு புது முயற்சிகளில் ஈடுபட திட்டமிடுவீர்கள். விவகாரங்களில் சமரச தீர்ப்பு உருவாக காலதாமதமாகும்.இல்லறத் துண உங்கள் பேச்சில் நம்பிக்கை கொள்ளாமல் சந்தேகம் எழுப்புவார். அவர் அதிருப்தி கொள்வது உங்களுக்கு தேக்க நிலையை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் அதிக மூலதனம் தேவைப்படும். கூடுதல் உழைப்பின் மூலம் ஓரளவுக்குத்தான் சரி செய்ய முடியும். பணியாளர் குளறுபடி வராத அளவுக்கு பணியில் ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவது நல்லது. பெண்கள் தங்க நகைகளை இரவல் கொடுத்து கஷ்டப்படுவார்கள் . சிலர் இரவல் வாங்கிய நகையைத் தொலைத்துவிட்டு திண்டாடுவர். என்வே இந்த இரவல் விஷயத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் பெற்றோரின் நிலை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், தங்கள் ஜாதகத்துடன் ரூ. 950/- அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு moonramkonam@gmail.com] என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும். \
**********************************************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>