/* ]]> */
Nov 172017
 

19.11.17  முதல் 25.11.17 வரையிலான வார ராசி பலன்:

Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்
Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்

மேஷம்:
இல்லறத்துணை மனதில் மகிழ்ச்சியின்றி இருப்பார். புத்திரர் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, அவர்களுக்கு தைர்யம் கொடுப்பீர்கள். குடும்பச் செலவு சரிக்கட்ட கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். நண்பர்களுடன் உருவான சச்சரவு மறந்து, அன்பு பாசத்துடன் பழகுவீர்கள். வாழ்வில் கூடுதல் வளம் பெற , புதிய வாய்ப்பு உருவாகும். வாகன பயன்பாடு சீரான அளவில் இருக்கும். தொழிலில் வளர்ச்சி பெற உரிய கவனம் கொள்வீர்கள். பணியாளர், நிர்வாகத்தின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றவேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமையை கருத்தில் கொள்வது நற்பலன் தரும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து திட்டமிட்ட தேர்ச்சி விகிதம் பெறுவர்.
ரிஷபம்:
இல்லறத்துணை அன்பு பாசத்துடன் நடந்துகொள்வார்.புத்திரரின் விருப்பம் நிறைவேற்றுவதால், மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரியால் வருகிற தொந்தரவு நீர்த்துப்போகும். துவங்குகிற நற்செயல்கள் முழு அளவில் நிறைவேறும். உங்களின் மதிப்பு மரியாதை சமூகத்தில் கூடும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற சீர்திருத்தம் செய்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை எளிதில் வந்து சேரும். குடும்பப் பெண்கள் தன் பொறுப்புகளை மகிழ்வுடன் நிறைவேற்றுவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.
மிதுனம்:
இல்லறத்துணை உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவார். பிள்ளைகளின் நற்செயல் பெருமை தேடித் தரும்.உடன் பிறந்தோரின் உதவி ஓரளவு கிடைக்கும். எதிர் மனப்பாங்கு உள்ளவரிடமிருந்து விலகுவது கால விரயம் தவிர்க்க உதவும். உங்கள் மனதில் ஆன்மீக நம்பிக்கை வளரும். அதிர்ஷ்டகர பலன்கள் கிடைத்து மகிழ்ச்சி, உற்சாகம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய அதிகம் உழைப்பீர்கள். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் காண்பர். பெண்கள் குடும்ப நலன் சிறக்க கணவரிடம் நல்ல ஆலோசனை சொல்வர். மாணவர்கள் செயல்களில் நிதானம் பின்பற்றவேண்டும்.
கடகம்:
இல்லறத்துணையிடம் குடும்பத்தின் பழைய விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டாம். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து மனதில் நிம்மதி உருவாக்குவார். எதிரி இடம் மாறிப் போகிற நல்ல நிலை உருவாகும். பணவரவு அதிகம் கிடைக்க, வரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவீர்கள். அக்கம்பக்கத்தாருடன் நல் அன்பு வளரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கண்ணும் கருத்துமாக உழைப்பீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு தாமதமான சலுகை கிடைக்க புதிய வழி பிறக்கும். குடுமப் பெண்கள் கூடுதல் ஒற்றுமை மனதுடன் நடந்துகொள்வது நல்லது. மாணவர்கள் அதிக விலை உள்ள பொருள்களை  கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.
சிம்மம்:
இல்லறத்துணையின் கவனக் குறைவான செயல்களை பெருந்தன்மையுடன் பொறுத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளின் சேர்க்கை சகவாசம் அறிந்து நல்வழி நடத்துவீர்கள். புதிய சிந்தனையும் தைர்யமும் உருவாகும். சமயோசித செயலால் வெற்றி இலக்கை எளிதில் அடைவீர்கள். உறவினர்களின் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி திட்டமிட்டபடி நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் நகை இரவல் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. மாணவர்கள் புதியவர்களை நண்பர்களாக ஏற்பதில் தகுந்த கவனம் வேண்டும்.
கன்னி:
இல்லறத்துணையின் யோகம் உங்கள் வாழ்வில் கூடுதல் வளத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்வதால், நற்பலன் நிகழும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவேண்டும். ஆடம்பர எண்ணங்களுடன் செயல்படுவதால், சேமிப்பு பணம் குறைவதும், பணக்கடன் பெறுகிற சூழ்நிலையும் உருவாகும். கவனம் தேவை. புதியவர்களிடம் பேசுவதில் நிதானம் பின்பற்றவேண்டும். வீடு வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு அவசியம். பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள் ஒவ்வாத உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்:
இல்லறத்துணையின் கூடுதல் அன்பு பாசத்தில் மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகள் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் காண்பர்.எதிரி வியந்து பார்க்கிற நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதில் பூர்த்தியாகும். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள், பணவரவிற்கேற்ப ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் ச்றப்பான தேர்ச்சி அடைவர். உங்கள்மீது அன்பு கொண்டவர்கள் உங்களைப் பாராட்டுவர். வீடு வாகனத்தில் திருப்திகர பயன்பாட்டு வசதி கிடைக்கும்.
விருச்சிகம்:
இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் குடும்ப நலம் காத்திடுவார். பிள்ளைகளின் செயல்களை கண்காணித்து நன்மை பெற உதவுவீர்கள். ஆன்மீக வழிபாடு நிறைவேறும். உங்கள் பேச்சில் அலட்சியமும் விரக்தி மனப்பான்மையும் வெளிப்படும். நற்குணம் உள்ளவர்கள் உங்களுக்கு ஆலோசனை சொல்ல முற்படுவார். அவற்றை மதித்து நடப்பதால், நன்மை பெறலாம். பூர்வீக சொத்தில் எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். தொழில் வியாபாரத்தில் நிலவுகிற அனுகூலம் பாதுகாப்பது அவசியம். உத்தியோகஸ்தர் பணியாளர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவது நல்லது. பெண்கள் கணவரின் நல்ல குணத்தைப் பாராட்டி பெருமைப்படுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பாராட்டு பெறுவர்.
தனுசு:
இல்லறத்துணை உங்களின் கருத்துக்களை மதித்து செயல்படுவார். எதிரியால் வருகிற தொல்லை அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். இனிய வார்த்தை பேசி, புதியவர்களின் அன்பு, நட்பு பெறுவீர்கள். மனதில் தைரியம் , செயலில் பரிமளிப்புத்திறன் அதிகரிக்கும். சிலருக்கு வீடு வாகனம் புதிதாக வாங்குகிற முயற்சி நிறைவேறும். பூர்வீக சொத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். தொழில் வியாபாரத்தில் நடைமுறையில் சில மாற்றம் செய்து உற்பத்தி விறபனையில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியாளர்களுக்கு எளிய முயற்சியால் சலுகை கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெற உதவுவர். மாணவர்கள் ஆசிரியர் பெற்றோரின் வழிகாட்டுதல்படி நடந்துகொள்வர்.
மகரம் ;
இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் குடும்ப நலம் பேணுவார்.தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை , பண வரவு இருக்கும். பணியாளர்கள் உடல்நலம் கவனமுடன் பேணுவதால், பணியில் கூடுதல் ஈடுபாடு வளரும். செயல்களில் அக்கறையுடன் ஈடுபடுவதால் மட்டுமே எதிர்பார்த்த பலன் ஓரளவு கிடைக்கும். உறவினர்களின் அதிருப்தியைப் பெறாத அளவிற்கு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் பேசுவது நன்மை பெற உதவும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவேண்டும். தெய்வ அருள் வாழ்வில் கூடுதல் வளம் பெற உதவும். பெண்கள் குடும்பச் செலவில் சிகக்னம் பின்பற்றுவர். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
கும்பம்:
இல்லறத்துணை பரிசுப்பொருள் வாங்கித் தருவார். தொழிலில் குளறுபடி நிவர்த்தியாகிவளர்ச்சிப் பாதையில் நடைபோடுவீர்கள். பணியாளர்கள் அதிக வேலைவாய்ப்பு , உபரி பண வரவு பெறுவீர்கள். முன்னோர் செய்த நற்பலன் உங்கள் வாழ்வு வளம் பெற துணை நிற்கும். பணியில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். அக்கம்பக்கத்தவர் நல் அன்பு பாராட்டுவர். பிள்ளைகளின் சொல் உங்களுக்கு வேதவாக்குக்கு இணையாக இருக்கும். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவார். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் நண்பரின் உதவியால் நன்மை பெறுவர்.
மீனம்:
இல்லறத்துணை உங்கள் நல்ல குணங்களைப் பாராட்டுவார். புத்திரரின் அறிவு ஞாபகத்திறனில் வளர்ச்சி அடைவர். அரசு தொடர்பான உதவி பெற நல்யோகம் உண்டு. உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். தொல்லைகளிலிருந்து விடுபட்டு, புதிய முயற்சிகளைத் துவங்கி, வளமும் பண பலமும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர் சிறப்பாகப் பணி புரிந்து பாராட்டு வெகுமதி பெறுவர். இளைய சகோதரர் வகையில் ம்ங்கல நிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. பெண்கள் விதவிதமான உணவு சமைத்து குடும்ப உறுப்பினர்களின் விருப்பம் நிறைவேற்றுவர். மாணவர்கள் தகுதி, திறமையில் புதிய பரிமாணம் காண்பர்.
^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய முழு பலனைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், ரூ 950/- செலுத்தி, 'moonramkonam.com @gmail.com' என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும். ]
************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>