/* ]]> */
Feb 102018
 

வார ராசி பலன்- 11.2.18 முதல் 17.2.18வரை:

Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்
Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்

மேஷம்:
இந்த வாரம் மனதில் குழப்பம் ஆட்கொள்வதால், முடிவு எதுவும் எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். எதிபார்த்த இடத்திலிருந்தும் எதிர்பாராத இடத்திலிருந்தும் பணம் வரும். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்வார்கள். வேலைகள் போட்டி, எதிர்ப்புகள் இன்றி சுலபமாக முடிப்பீர்கள். எனவே பொழுதுபோக்குகள் விழாக்களில் கலந்துகொள்ளுதல் உறவினர்களுடன் மகிழ்ந்திருத்தல் என்று சந்தோஷமாகப் பொழுது கழியும். நெடுநாட்களாக தடைப்பட்டிருந்த நிலம் கிரயமாகும். தரகுத் தொழில் ஏற்றம் பெறும். பிள்ளைகளால் கவலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் இழுத்தடிக்கும். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அலைச்சல்களுக்கு உட்படுவர். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். மருத்துவ செலவு ஏற்படுவதோடு நிவாரணமும் கிடைக்காது. வீண் செலவுகலைக் குறைத்து நல்ல காரியங்களுக்காக செலவு செய்ய முற்படுவீர்கள். மனதில் உற்சாகம் பெருகும்.
ரிஷபம்:
இந்த வாரம் உங்களுக்கு அலைச்சல் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன் கிடைக்கும், உங்களிடம் கடன் வாங்கியிருக்கும் கடன்களும் திரும்பக் கிட்டைக்கும், மேலும் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டு எதிலும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். ஆரோக்கியம் படுத்தும். வேலை நிமித்தம் அலைய நேரும். கணவன் –மனைவி அந்நியோன்னியம் பாதிக்கப்படும். வாழ்க்கைத் துணை உடல்நிலை பாதிக்கப்படலாம். கூட்டுத்தொழிலில் விட்டுக்கொடுத்து செல்ல நேரும். வாகனங்களும் வீட்டு உபயோகப் பொருள்களும் வாங்குவீர்கள். திடீர் செலவுகள் ஏற்பட்டு நிதிநிலையை மோசமாக்கும். உறவினர்- நண்பர் வழியில் பிரச்சினை வரும். பல நாட்களாக முடிவடையாத காரியங்கள் முடிவடையும். பெண்கள் சந்தோஷமடைவர். தொழில் ரீதியான அலைச்சல் ஏற்படும். பண வரவு உண்டு. ஊக்கம், உற்சாகம் கூடும். கூட்டுத் தொழில் லாபம் கொடுக்கும்
மிதுனம்:
. இந்த வாரம் உங்கள் மனம் குழப்பமின்றி தெளிவாக இருக்கும், நினைத்த காரியங்களை நினைத்தவன்ணம் முடிபபீர்கள். பணம் வரும் . இனிமையான அனுபவங்களை மேற்கொள்ளலாம். அனாவசிய அலைச்சல்களைத் தவிர்க்க முடியாது. உடன் பணி செய்பவர்கள் தாங்கள் ஓ.பி. அடிக்க உங்களை தந்திரமாக வேலை வாங்கிவிடுவர். அதனால், உங்களுக்கு வேலைப்பளு கூடும். குடும்ப விவகாரங்களால், நிம்மதி கெடும். உங்களுக்கு அரசு தொடர்பான வேலைகள் கிடுகிடுவென் நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து பாராட்டு கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி அன்பு வளரும். சகோதரர்- பங்காளிகள் உறவு சிறக்கும். போலீஸ், மற்றும் எஞ்சினியரிங் துறை சார்ந்தவர்கள் பயனடைவர். நிலம், பூமி தொடர்பான விஷயங்களும் சாதகமாக அமையும். மனதில் குழப்பங்கள் உருவாகி தடுமாற்றங்கள் மற்றும் மறதியால் அவதியுற நேரும். பிள்ளைகள் தொல்லை தருவார்கள். எதிர்பாராத பண வரவுகளைப் பெறலாம்
கடகம்:
குழந்தைகளின் விருப்பத்திற்காக பண்த்தைச் செலவு செய்வீர்கள். முக்கியமான சில வேலைகளை செய்ய முடியாமல் விட்டு விடுவீர்கள். ஏற்கெனவே தள்ளிப்போடப்பட்டிருந்த வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பம்பரமாகச் சுழன்று வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் காணலாம். பொருட்களை சகாய விலைக்கு வாங்கலாம். இன்டஹ் வாரம் உங்களால் தெளிவான முடிவெடுக்க முடியாது. பிள்ளைகள் தொல்லை கொடுப்பார்கள். யாரிடமும் எரிந்து விழுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளாலும் மற்றவர்களின் செயல்களாலும் எரிச்சலடைந்து சத்தம் போடுபவீர்கள். உறவினர்களால், தொல்லை தவிர சகாயம் இருக்காது. பெண்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேற்பாடு தோன்றும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வீண் அலைச்சல் இருக்கும். ஆனால் எந்த ஆதாயமும் இருக்காது. மறதியால் அவதியுண்டு. உடல் வேதனைகள் படுத்துவதால் உற்சாகம் குறையும்.
சிம்மம்:
உறவினர்கள் தங்கள் இல்லத் திருமணங்களுக்கு உங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள்.குடும்பத்தின் தேவைகளுக்கு தாராளமாக செலவு செய்வீர்கள்.வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்லவும். பிள்ளகளின் குறைகளைக் களைய இதமான அணுகுமுறையைப் பினபற்றவும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.சொத்துகள் வாங்குவதற்கு இது உகந்த நேரம். இல்லறத்துணை உங்கள் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் காட்டுவார். வியாபாரத்தில் உறபத்தியும் விற்பனையும் அதிகரிப்பதால், மிகுந்த லாபம் ஈட்டுவீரக்ள். . அலுவலக வேலையில் நிறைய வேலைக்கான வாய்ப்புகள் கிட்டும்.

கன்னி:

இந்த வாரம் விருப்பமில்லாமல் சில செலவுகள் செய்யலாம். புண்ணிய காரியங்களை நிறைவேற்றுவீர்கள். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். வரவே வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். அரசு தொடர்பான தொடர்பான விஷயங்கள் முடியும். தந்தை வழியில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். பணியிலுள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பொழுதுபோக்கு மற்றும் பிரயாணங்களில் மகிழ்ச்சியடைவீர்கள். சகோதரர்கள், பங்காளிகள் நிலம், பூமி தொடபர்பான விஷயங்கள், போலீஸ் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் கிடைக்கும். தொழில் புரிவோருக்கு அலைச்சல் இருக்கும் ; ஆனால், ஆதாயம் இருக்காது. தேவையான பணம் நிறைய வரும். வரும். பயணங்கள் அதிகரிக்கும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளைக்கூட முடிக்க முடியாது. ஊக்கம் ,உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்:
இந்த வாரம் பணவரவு, பொருள் வரவு வரும். ஆடை ஆபரணங்கள் சேரும். பிரச்சினைகள் விலகும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். வெளியில் செல்வீர்கள். சந்தோஷம் தரும் செய்தியைக் கேட்கலாம். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். விடுபட்ட பணிகள் முடிவுக்கு வரும் சகோதரனுக்கு கேட்ட உதவியைச் செய்வீர்கள். போலீஸ் தொடர்பான முயற்சிகளில் அனுகூலம் உண்டு. உறவுப் பெண்கள் உதவுவார்கள். மாமன் மைத்துனர்களும் ஆதரவு காட்டுவார்கள். இருப்பினும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் பிரச்சினை தோன்றும். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை சச்சரவு உண்டாகும். அலைச்சல் உண்டு. பண வரவுக்குப் பஞ்சமில்லை.
விருச்சிகம்:
இந்த வாரம் எல்லா வேலைகளையும் எப்பாடு பட்டாவது செய்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலருக்கு கடன் உதவி செய்வீர்கள். கணவன்- மனைவிக்கிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். அடமானம் வைத்த நகைகளை மீட்பீர்கள். சிலர் உங்களுக்கு உதவி செய்யலாம். பணப்புழக்கம் இன்னும் மற்றும் பல சந்தோஷங்கள் வரும். குடும்பத் தேவைக்கேற்ற பண வரவு இருக்கும். அலைச்சல், காரியத் தடை இருக்கும் அரசியல்வாதிகள் ஆதாயமில்லாத அலைச்சல் திரிச்சலில் மாட்டிக்கொண்டு விழிப்பர். தகப்பனாருடன் வாக்குவாதங்கள் இருக்கும். தேக ஆரோக்கியமும் படுத்தும். வேலைப்பளுவால் போராட்டமாக இருக்கும். எந்த வேலையையும் சுணக்கமின்றி முடித்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். வார இறுதியில் செலவும் அலைச்சலும் மிகும். சிலருடன் வாக்குவாதம் ஏற்படும். பணம் ,சந்தோஷம் வரும்.
தனுசு:
இந்த வாரம் ஒரு விஷயத்தில் சாதகமான பலன்களையும் மற்ற விஷயங்களில் எதிர்மறையான பலன்களையும் எதிர்பார்க்கலாம். எதிர்பாராத ஒருவரை சந்திப்பீர்கள். சிலருக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண வரவுகளைப் பெறலாம். வேலைப்பளு மிகுந்து காணப்படும். கணவன்- மனைவிக்கிடையே பிணக்கு நீங்கி நல்லுறவு ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கலாம். மற்றவர்கள் உங்களைப் பாராட்டிப்பேச வேண்டும் என்று சில காரியங்களை செய்வீர்கள். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். விரய ஸ்தானத்தில் புதன் சூரியன் இருப்பதால், தந்தை, அரசியல்வாதிகள் மாமன் மைத்துனர் நண்பர்கள், உறவினர்கள் வழியில் செலவுகள், சிரமங்கள், தொல்லைகள் உண்டாகும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மின்சாதனப் பொருள்களில் செலவும் உண்டாகும். சகோதரர்கள்,பங்காளிகள், சகலைகள் ஓரளவுக்கு உதவியாக இருப்பார்கள். பணவரவு கிடைக்கும். ஆசைப்பட்ட பொருள்களை வாங்கலாம். செலவும் அலைச்சலும் ஏற்பட்டு மன அமைதி பாதிக்கப்படும்.
ஏற்படும்.
மகரம்:
இந்த வாரம் எதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிலர் அவசர முடிவெடுத்துவிட்டு அவதிப்படுவர். வாஅர்த்தின் மத்தியில் நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பரைச் சந்திப்பார்கள். சில மனக்கோட்டைகள் சிதைந்துபோகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சுப காரியங்களில் பங்கேற்பார்கள். சூரியன், சுக்கிரன், புதன் சாதகமான நிலையில் உள்ளதால், பயணங்கள், பொழுதுபோக்குகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அரசு தொடர்பான இழுபறிகள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளை நம்பி இறங்கிய காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். மாமன் மைத்துனர்கள் ,நண்பர்களால் உதவி கிட்டும். மருத்துவ செலவு வீண்போகாமல், வியாதிக்கு நிவாரணமாக அமையும். சகோதரர்களால் பிரச்சினை தோன்றும். நிலம், பூமி தொடர்பான காரியங்களிலும் கவனம் அவசியம். போலீஸ் தொடர்பான பிரச்சினை தோன்றும். கடன் விவகாரமும் தொல்லைப்படுத்தும். காரிய வெற்றி உண்டு. நல்ல செய்தி வரும். வார இறுதியில் பண வரவு உண்டாகும். கடன் வசூலாகும்.

கும்பம்:

இந்த வாரம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் நகைகளையும் ஆடைகளையும் வாங்குவீர்கள். பழகிய சிலர் மூலம் ப்ண வரவைப் பெறுவீர்கள். வார மத்தியில் மந்தமும் காரியத் தடையும் ஏற்படும். உங்கள் மதிப்பு மரியாதை பாதிக்கப்படும். அலைச்சல் உண்டு. கணவன்- மனைவி உறவு பலவீனப்படும். கோபம் கொள்ளாமல் பொறுமை காப்பது அவசியம். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்வீர்கள். சகோதரர்கள் எதிபர்பார்த்தபடி உதவ மாட்டார்கள். பணிபுரிவோர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவார்கள். மாமன் மைத்துனர், உறவினர்கள், நல்லவிதமாக காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். தரகர்கள் பிரகாசிப்பர். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவர், விருந்து.உபசரிப்பு போன்றவற்றால் மகிழ்ச்சியடைவர். வார இறுதியில் எதிலும். வெற்றி உண்டு. பணமும் வரும்.

மீனம்:

இந்த வாரம் 20-ம் தேதி எதிர்பாராத பண வரவு இருக்கும். உறவினர் கேட்ட உதவிகளைச் செய்து தருவார்கள். அவர்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வீர்கள். பிறருக்காக ஜாமீன் கொடுப்பீர்கள். புதிய திட்டங்களுக்கு அடித்தளமிடுவீர்கள். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்க்ள் உதவுவார்கள். போலீஸ் துறயில் பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். கடன் கட்டுக்குள் வரும். ஆனால் செலவுகள் கட்டுக்கடங்காமல் எவ்வளவு பணம் வந்தாலும் கையில் தங்காது. தந்தையின் உடல்நல்ம் கவனிக்கப்படவேண்டும். பெண்கள் விஷயத்தில் ஒதுங்கியிருங்கள். பணிபுரியும் பெண்களுக்கு சிரமங்கள் வரும். மாமன் மைத்துனர் வழியில் அன்புத் தொல்லைகளை சந்திக்க நேரும். அரசியல்வாதிகளூக்கு அலைச்சல் இருக்குமேயன்றி, பிரயோஜனம் இருக்காது. வார இறுதியில் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது அவசியம். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>