/* ]]> */
Sep 132020
 
வார பலன் -13.. 9.2020  முதல் 19.9.2020 வரை:

VAARA RAASI PALAN

மேஷம்

உங்கள் ராசிக்கு கிரகங்கள், அனுகூலமாக உள்ளனர். குடும்ப உறுப்பினர் சில விஷயங்களில் உங்களிடம், கருத்து வேறுபாடு கொள்ளலாம். நிதானம், தியாக குணம் பின்பற்றுவதால் ஒற்றுமை சீராகும். உறவினர்களின் கூடுதல் அன்பு, உதவி மனதில் நெகிழ்ச்சி தரும். வாகனப் பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரரின் கவனக்குறைவை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவர். இல்லறத்துணை உதவிகரமாக நடந்து கொள்வார். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும். பணியாளர் தேவையற்ற வகையில் பணக்கடன் பெற வேண்டாம். பெண்கள் குடும்பத்தேவையை நிறைவேற்றுவதில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள் நண்பருடன் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு இந்த வாரம் கிரகங்கள் அனுகூல பலன் தருவர். பழகுபவர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதை பெறுகிற வகையில் செயல்படுவீர்கள். விலகிச் சென்றவரும் விரும்பி அன்பு பாராட்டுவர். வீட்டுத்தேவையை நிறைவேற்ற தாராள பணவசதி இருக்கும். புத்திரரின் எதிர்கால வாழ்வு சிறக்க, சில திட்டம் உருவாக்குவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளர, புதியவர்களின் வருகை துணை நிற்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவர் மாணவர்கள் ஞாபகத்திறனை வளர்த்து, படிப்பில் வியத்தகு தேர்ச்சி விகிதம் பெறுவர்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு சில கிரகங்கள்நற்பலன் தருகின்றனர். வாக்கு ஸ்தானம் பலமடைந்துள்ளது. பேசும் வார்த்தை வசீகரம் மற்றும் இனியதாக அமையும். அவமானப்படுத்த முயற்சிப்பவர்களிடம் சமயோசிதமாக விலகுவீர்கள். உடன் பிறந்தவர் ஓரளவு உதவுவர். வாகனத்தில் பராமரிப்பு பயணமுறையை எளிதாக்கும். புத்திரரை விஷப்பிராணிகளிடம் விலகி பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள். பணக்கடன் மனதில் சஞ்சலத்தை உருவாக்கும். இல்லறத்துணை உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவார். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பை விரும்பி ஏற்றுக் கொள்வர். பெண்கள் தாய்வீட்டு உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவர். மாணவர்கள் புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.
கடகம்
உங்கள் ராசியில் கிரகங்கள் நல்ல  அமர்வு பெற்று, நற்பலன் தருகின்றனர். முக்கியமான சில செயல்கள் நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். சமூகத்தில் பெற்ற மதிப்பு, மரியாதையை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் கண்காணித்து நல்வழி நடத்துவது அவசியம். வழக்கு விவகாரத்தில் சமரசத் தீர்வு கிடைக்க, சிலர் உதவுவர். இல்லறத்துணை குடும்ப ஒற்றுமை சிறக்க பாடுபடுவார். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்கிற நடைமுறை சிரமம் தவிர்க்க உதவும். பெண்கள் சேமிப்பு பணத்தில் வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவர். மாணவர்கள் சக மாணவரின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சிம்மம்உங்கள் ராசிக்கு சியல் கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களின் எதிர்மறை அமர்வினால் மனதில் குழப்பம், செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். விவகாரமாக பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. அதிக பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். உடன்பிறந்தவர் உங்களின் கஷ்டம் தீர உதவுவார். வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். கடன், பிணி தொந்தரவு குறையும். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை சீராகும். குடும்ப பெண்கள், கணவர் வழி உறவினர் களிடம்  நல்அன்பு பாராட்டி நற்பெயர் பெறுவீர்கள். மாணவர்கள், புதிய பயிற்சியினால் பாடங்களை மனதில் எளிதாக பதிய வைப்பர்.

கன்னி
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சியல் கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். உடல்நல ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் வளரும். பழகுபவர்களிடம் எதிர்மறை கருத்து பேசுவதால் அவப்பெயர் வரலாம். கவனம் தேவை. புத்திரர் ஆர்வ மிகுதியால் செயல்களில் குளறுபடி எதிர்கொள்வர். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். இல்லறத்துணை அறிவுத்திறனில் மேம்பட்டு நல்ல ஆலோசகராக விளங்குவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், உபரி பணவரவும் பெறுவீர்கள். பணியாளர், திறம்பட பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண் கள், வசதிக்கேற்ப ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள், நன்றாக படித்து பெற்றோரிடம் பாராட்டு, பரிசு பெறுவர்.
துலாம்
உங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். நியாய குணத்துடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி எதிர்பாராத அளவில் வெற்றி தரும். பேசும் வார்த்தையில் நிதானம் நிறைந்திருக்கும். ஆன்மிக அருள் பெற்றவர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். புத்திரர் மனதில் புதிய சிந்தனை வளர்த்துக் கொள்வர். எதிரி  உருவாக்குகின்ற கெடு செயல் பலமிழக்கும். இல்லறத்துணையின் கருத்துக்கு உரிய முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரம் செழித்து பணவரவு திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு சிறு அளவில் சலுகை கிடைக்கும். பெண்கள் கணவர் பற்றி பிறர் சொல்லும் கருத்தின் உண்மையை உணர்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் புதிய அணுகுமுறையுடன் ஈடுபடுவர்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு கிரகனக்ள் அனுகூலமான பலன்களை தருவர். புதிய திட்டம் செயல்படுத்தி நன்மையும், பணவரவும் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் மனக்குறையை மாற்றும் அளவில் ஆறுதலாக பேசுவீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரரின் சந்தேகங்களை உரிய விளக்கத்துடன் சரி செய்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் உபரி பணவரவு கிடைத்து சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பு திருப்திகர பணவரவு பெறுவர். பெண்கள், உறவினர் குடும்பத்தில் ஒற்றுமை வளர ஆலோசனை சொல்வீர்கள். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவது தவிர்ப்பதால், படிப்பில் கவனம் வளரும்.

தனுசுஉங்கள் ராசிக்கு கிரகனக்ள் அனுகூலமாக உள்ளனர். இதனால், பேச்சாற்றல், செயல்திறனில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி, முழு அளவில் கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், பயணம் எளிதாகும். புத்திரர் மனதில் இருந்த கஷ்டம் விலகி, புத்துணர்வுடன் செயல்படுவர். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவார். இல்லறத்துணை உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்க, புதிய வியூகம் உருவாக்குவீர்கள். பணியாளர், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வர். பெண்கள், கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், படிப்பு, நன்னடத்தையில் முன்னேற்றம் காண்பர்.

மகரம்
உங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். மனதில் மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். ஆர்வம் மிகுந்த வார்த்தை தவறுதலாக அமைந்து, பிறர் மனம் வருந்த நேரலாம். கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தரவேண்டாம். புத்திரரின் சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாகும். இல்லறத்துணையுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினரிடம் கருத்து வேறுபாடு வராமல் தவிர்க்கவும். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபடக்கூடாது.
கும்பம்
உங்கள் ராசிக்கு ஓரிரு க்ரகனகள் மட்டுமே நற்பலன் தருகின்றனர். உடல்நல ஆரோக்கியம் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். தாமதமாகிய பணி புதிய முயற்சியால் நிறைவேறும். ஆன்மிக கருத்துகளை மறுத்து பேசுபவரிடம் விலகுவது நல்லது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்வதால், பயன்பாட்டுவசதி சீராக கிடைக்கும். புத்திரரின் தேவை நிறைவேற தாமதம் ஆவதால் வருத்தம் அடைவர். இல்லறத்துணை தன்னால் இயன்ற உதவியை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்தி, நன்மை பெறுவீர்கள். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள், செயல்களில் குளறுபடி எதிர்கொள்வர். கவனம் தேவை. மாணவர்கள், அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பயன்படுத்தவும்.
மீனம்
உங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். மனதில் புத்துணர்வு, செயல்களில் சமயோசித குணம் நிறைந்திருக்கும். பயனற்ற விவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். சகோதரியின் கூடுதல் அன்பு, பாசம் கிடைக்கும். வீட்டில் மங்கலம் நிறைந்திருக்கச்கும். புத்திரர் அறிவாற்றலுடன் நடந்து கொள்வர். வழக்கு விவகாரத்தில் சுமுகநிலை ஏற்படும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம், செயல்களை பாராட்டுவார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, தேவையான அரசு உதவி பெறலாம். பணியாளர் ஆர்வமுடன் பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள், பிரார்த்தனை நிறைவேற்றி, இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். மாணவர்கள், படிப்பில் உருவான சந்தேகம் நீங்கி, கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் ஜாதகப்படி விரிவான பலன் திரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற முகவரியைத் தொடர்புகொள்ளவும். ] நன்றி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>