/* ]]> */
Sep 112021
 

வார பலன்  12.9.2021 முதல் 18.9.2021 வரை :

Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்
Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன்

மேஷம் :
இந்த வாரம்  திட்டமிட்டபடி பணி புரிந்து சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். வசீகரமாகப் பேசி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். வீடு வாகனத்தில் அதிக பயன் கருதி, அபிவிருத்திப் பணியை மேற்கொள்வீர்கள். புத்திரர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ,எதிரிகளால் இருந்துவந்த தொல்லை நீங்கும். நண்பர்களுக்கு கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். பணப் பரிவர்த்தனை சீராகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை சரிவர பின்பற்றுவர். பெண்கள் குடும்ப நலன் கருதி கணவருடன் ஒத்துழைப்பர். மாணவர்கள் கூடுதல் முயற்சியினால், படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
ரிஷபம்:
இந்த வாரம்  அளப்பறிய நற்பலன்களை வழங்குகின்றனர். வாழ்வில் கூடுதல் பயன் பெற கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி நன்மை பெறுவீர்கள். அதிக விலை மதிப்புள்ள பொருட்களை உரிய கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். சகோதரர்கள் கேட்கிற உதவிகளைச் செய்வதால் குடும்ப ஒற்றுமை பெருகும். வாகன பராமரிப்பு செய்வதால் பயணம் எளிதாகும்.நண்ப ர்களிடம் கருத்து வேறுபாடு காரணமாக படிப்பில் கவனமின்றி சோர்வுடன் காணப்படுவர். உங்களுடைய ஊக்கம் அவர்களை நல்வழிப்படுத்தும். பணக் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணை உங்கள் கௌரவம் பாதுகாக்கும் வகையில் உதவுவார். தொழில் வியாபாரத்தில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து அதிக பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி உயர்வு, சலுகைப் பயன் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாராள பண வசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் விளையாட்டுகளில் சாகசம் செய்வது கூடாது.
மிதுனம்:
இந்த வாரம் கிரகங்களின் அமர்வு சாதகமற்ற நிலையில் உள்ளது. வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை உங்கள் மன உறுதியால் சரி செய்வீர்கள். உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிற உறவினர், நண்பர்களை மதித்து நடப்பீர்கள். வீடு .வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும். புத்திரர் விரும்பிய பொருட்களை உங்கள் பண வசதிக்கேற்ப வாங்கித் தருவீர்கள். சீரான ஓய்வு, உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணை வீட்டுச் செலவில் சிக்கனம் கடைப் பிடிப்பார். தொழிலில் உருவாகிற இடையூறை சரி செய்வதால், உற்பத்தி, விற்பனை இலக்கு நிறைவேறும்.. பணியாளர் குடும்ப நலன் கருதி ஒவர்டைம் செய்ய ஒத்துக்கொள்வர். பெண்கள் சேமிப்பு பணத்தை அத்தியாவசிய செலவுகளுக்குப் பயன்படுத்துவர். மாணவர்கள் வெளியே சுற்றுவதைத் தவிர்த்தால், படிப்பில் ஜொலிக்கலாம்.

கடகம் :
உங்கள் ராசியில் உள்ள சில கிரகங்கள் நற்பலன் தருகிறார்கள். ஆடம்பர செயல்களால் தகுதிக்கு மீறிய பணச் செலவு ஏற்படலாம். அக்கம்பக்கத்தவருடன் நட்புறவை பாதுகாபப்தில் கூடுதல் அக்கறையும் சகிப்புத்தன்மையும் தேவை. வாகனத்தில் பயன்பாட்டு வசதி குறைந்த அளவில் கிடைக்கும். புத்திரர் உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இல்லறத்துணை உங்கள் மனக்கவலையை மாற்ற உறவினர் உதவியைக் கேட்டுப் பெறுவார்கள். தொழிலில் விற்பனை உற்பத்தி இலக்கை அடைய தாமதமாகும்.பணியாளர்கள் அக்கறையுடன் பணி புரிந்தால் மட்டுமே பணிகளில் உண்டாகும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் செலவை மட்டுப்படுத்தி சிக்கனம் கடைப்பிடிப்பர். மாணவரக்ள் பெற்றோரின் தேவை உணர்ந்து செல்வைக் குறைத்துக்கொள்வது நல்லது.

சிம்மம்:
இந்த வாரம் அத்தனை கிரகங்களும் உங்களுக்கு நற்பலன் வழங்கும்படியே அமைந்துள்ளன, .இதனால், நிறைவேறாது என்று நினைத்த காரியங்கள்கூட எதிர்பாராத வகையில் நிறைவேறி மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். பண வசதி திருதிகரமாக இருக்கும். இயன்ற அளவில் தான தர்மம் செய்து புகழும் , நற்பெயரும் பெறுவீர்கள். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் மிகுந்த அன்புடன் நடந்துகொள்வர். உடல்நலம் பலம் பெறும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் உற்பத்தியை அதிகரிக்க ஒரு புதிய உபகரணம் வாங்குவீர்கள். பணியாளர்கள் பணித் திறன் வளர்த்து மேலிடத்தின் ஆதரவைப் பெறுவர். குடும்பப் பெண்கள் வேண்டிய ஆடை அணிகலன் வாங்கி மகிழ்வர். தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்று ஆசிரியர் பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.

கன்னி:
இந்த வாரம்  கிரகங்களின் அமர்வு எதிர்மறைப் பலன்களைத் தரும் நிலையில் உள்ளது . இதனால் ஒவ்வொரு செயலிலும் உங்களுக்கு முன்யோசனைக் குணம் அவசியமாகிறது. அரசு தொடர்பான காரியங்கள் சுலபமாக நிறைவேறும். வாகனப் பயணத்தில் மிதவேகம் அவசியம். புத்திரர் அன்புடன் நடந்துகொள்வர். சொத்தின் பேரில் பணக் கடன் பெறுபவர் நம்பகமானவரிடம் வாங்குவது நல்லது. இல்லறத்துணை சேமிப்புப் பணத்தைத் தந்து உத்வுவார். தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்துவிட்டுக் கஷடப்படவேண்டாம். அதிக உழைப்பைத் தந்தாலே போதும். உத்தியோகஸ்தர் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, உற்பத்தி இலக்கைப் பூர்த்தி செய்வது நல்லது. பெண்கள் கணவரின் நல்ல குணத்தைப் பாராட்டுவர். மாணவர்கள் கூடுதல் பயிற்சியால், தேர்ச்சி பெற்று விடலாம்.

துலாம்:
இந்த வாரம் கிரகங்களின் அமர்வு சாதகமற்ற பலனைத் தருகிறது. சுய லாபத்துக்காக சிலர் உங்களைப் புகழ்ந்து பேசுவர். நீங்கள் முன்யோசனையுடன் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நடந்துகொள்வதன் மூலம் சிரமத்தில் சிக்காமல் தப்பிக்கலாம். உடன்பிறந்தவர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவீர்கள். வீடு வாகன பராமரிப்பில் உரிய கவனம் வேண்டும். நிதானமான முறையில் புத்திரர்களை வழிநடத்துவது நல்லது. தேவைப்பட்டால் மட்டுமே வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவும். இல்லறத்துணையின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை அக்கறையுடன் பின்பற்றுதல் நல்லது. பெண்கள் கடனுக்கு அதிக விலை கொடுத்து அதிகம் தேவைப்படாத பொருட்களை வாங்கவேண்டாம். மாணவர்கள் உரிய பயிற்சியால், தேர்ச்சி பெறுவர்.

விருச்சிகம்:
இந்த வாரம் கிரகங்களின் அமைப்பு உங்களுக்கு அனுகூலமானது. . நற்பலன்களைக் கொடுக்கிறார்கள். உங்கள் பேச்சு சுயநலமாகவும், பிறரை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளன, நற்பெயரைப் பாதுகாப்பதில் தகுந்த கவனம் வேண்டும். பூர்வீக சொத்திலிருந்து வருகிற வருமானம் கூடுதல் செலவுக்குப் பயன்படும். எதிரியால் வரும் துன்பத்தை மாற்று உபாயத்தால் சரி செய்வது நல்லது. இல்லறத்துணை உங்கள் குடும்ப மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். பணியாளர்கள் சக பணியாளர்களின் உயர்வு தாழ்வு பற்றிப் பேச வேண்டாம். குடும்பப் பெண்கள் பிள்ளைகளிடம் கூடுதல் பாசத்துடன் நடந்துகொள்வர். மாணவர்கள் புதியவர்களை நண்பர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டாம்.

தனுசு:
இந்த வாரம் உங்கள் ராசிக்கு கிரகங்கள் நற்பலன்களை வாரி வழங்குகிறார்கள். பண வரவு அதிக அளவில் கிடைப்பதற்காக கிடைக்கிற புதிய வாய்ப்புகளைப் தவறாமல் பயன்படுத்துவீர்கள். முயற்சிக்கு உரிய பலனை முழுமையாக அனுபவிப்பீர்கள். நீங்கள் கஷ்ட நிலையில் இருந்தபோது உங்களை விட்டு விலகிய நணப்ர், உறவினர்கள் இப்போது உங்களைத் தேடி வருவார்கள். வீடு வாகனத்தில் திருப்தியான நிலை உண்டு. புத்திரரின் உடல்நலத்துக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். எதிரி உங்கள் வாழ்வின் உயர்வு கண்டு பயந்து விலகுவார். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து, குடும்பநலன் சிறக்க துணை நிற்பார். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து அதிக பணவரவு கிடைக்கும் . சேமிப்பும் உயரும். பெண்கள் உறவினர்களை உபசரித்து கணவரின் நன்மதிப்பைப் பெறுவர். மாணவர்கள் கவனமுடன் படித்து தேர்ச்சி பெறுவர்.

மகரம்:
இந்த வாரம் உங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூலமற்ற நிலையில் உள்ளனர். சமூகத்தில் பெற்ற நன்மதிப்பை பேணிக் காத்திடுவர். உங்களின் ஆலோசனையை மதித்து உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர். வீடு, வாகனம், நகைகள் வாங்க பணவசதி கைகொடுக்கும். புத்திரர்களுக்கு உங்கள் பாராட்டு எதிர்மறையாக வேலை செய்யும். இல்லறத்துணை உங்கள் கருத்துக்கு மாறுபட்டு எதிர்வாதம் புரிவர். நீங்கள் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே கருத்து வேறுபாடுகள் பெருமளவில் நாசம் ஏற்படாமல் தப்பிக்கலாம். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பத்தைப் புரிந்து செயல்படுத்த வேண்டும். குடும்பப் பெண்கள் அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே முன்னுரிமை தருவது நல்லது. மாணவரகள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

கும்பம்:
இந்த வாரம் உங்கள்  மனதில் ஆன்மீக சிந்தனையும் பிறருக்கு உதவுகிற மனப்பாங்கும் வரும். நட்புக்கு இலக்கணமாக  நடந்துகொள்வீர்கள். மனதில் இருந்த பயம் நீங்கும். பணவசதிக்கேற்ப பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தருவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்கள் இல்லறத்துணை தன் மனக்கஷ்டத்தை உங்களிடம் சொல்லி ஆறுதல் பெறுவார். தொழில் வியாபாரத்தில் பிள்ளைகளை ஈடுபடுத்த நினைப்பீர்கள். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் நற்பேயர் வாங்க கூடுதல் செலவு செய்வர். பெண்கள் கணவருக்குத் தெரியாமல் எந்த பண விவகாரத்திலும் ஈடுபடவேண்டாம். மாணவர்கள் முறையான பயிற்சியால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
மீனம்:
உங்கள் ராசிக்கு  கிரகங்களின் அமர்வு சாதகமற்ற பலன் தரும் வகையில் கிரக நிலைகள் உள்ளன. உங்கள் நேரத்தை வீணாக்கி வெட்டிப் பேச்சு பேசுபவர்களிடமிருந்து விலகுவது நல்லது.பெரியோர்களை சந்தித்தலும் ஆலய தரிசனமும் நல்லது. மனதில் புத்துணர்ச்சி பெருகும். சகோதரர்களுக்கான சுபநிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். பூர்வீக சொத்தில் திருப்திகர பண வரவு கிடைக்கும். பொறாமை குணம் உள்ளவர்களால் சிரமம் ஏற்படும் ஆனால், உங்கள் சாதுர்யத்தால் அதனைச் சரி செய்வீர்கள். இல்லறத்துணை மற்றும் மகள் வாழ்வில் மேன்மை பெற உங்களுக்கு பெரும் துணையாக நிற்பார்கள். அதிகாரிகள் சிறப்பாக பணி புரிந்து நிர்வாகத்திடம் பாராட்டு பெறுவர். பெண்கள் குடும்ப உதவிக்கு பெரும் பங்காற்றுவார்கள். மாணவரகள் நன்றாகப் படித்து பெற்றோரிடம் விரும்பிய பரிசுப் பொருள பெறுவர்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>