/* ]]> */
Oct 162019
 

வாயுத் தொல்லை வருவது ஏன்?

burp

பசிக் குறைவு, புளித்த ஏப்பம் நெஞ்செரிச்சல், அடிக்கடி வாயு வெளியேறுதல், வயிற்று உப்புசம், வயிறு எரிச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய உணவுப் பாதை பிரச்சினையை அலோபதி நருத்துவம் வாயுத் தொல்லை என்கிறது.  மனித உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப்பை, உணவுப் பாதை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். நமது தலை முதல் பாதம் வரை வாயு சுற்றிக்கொண்டு இருப்பதில்லை.

நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும் காற்று, தொண்டை மற்றும் சுவாசக் குழாய் வழியாக சுவாசப் பைக்கு செல்கிறது. இது ஒரு தனி வழி. இதற்கும் உணவுப் பாடஹிக்கும்னேரடித் தொடர்பு இல்லை. பொதுவாக நாம் ஒவ்வொருவரும் உணவை உண்ணும்போது, உணவுடன் சேர்த்து காற்றையும் விழுங்கிவிடுகிறோம். அதிலும் கிஉறிப்பாக அவசர அவசரமாக உண்ணூம்பொது, , காபி, தேனீர் மற்றும் காற்று அடைத்த மென்பானங்களை குடிக்கும்போதும் சூயிங்கம் மெல்லும்போதும் புகை பிடிக்கும்ப்தும், வெற்றிலை புகையிலை மற்றும் பான் மசாலா போடும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும்போதும் நம்மை அறியாமலேயே இவற்றுடன் காற்றையும் விழுங்கிவிடுகிறோம். வாயுத் தொல்லையின்போது காற்று 60% இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடும். மீதி 20% குடலுக்குள் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறாது. இந்த காற்று விழுங்கல் சாதாரணமாக இருந்தால் தொல்லை ஏதும் வருவதில்லை. அள்வுக்கு மீறினால், வாய்வுப் பிரச்சினையாக உருவாகும்.

குடலில் வாயு உருவாக இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது குடலில் உணவு செரிமானம் ஆகும்போது, அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் பல வேதி மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அப்போது, ஹைட்ரஜன், மீத்தேன், கரியமில வாயுபோன்ற வாயுக்கள் ஆசன வாய் வழியாக சத்தத்துடன் வெளியேறும். இந்த வாயுவில் துர்நாற்றம் இருப்பதில்லை.

அதற்கு மாறாக , குடலில் சில நொதிகல் குறையும்போது, புரத உணவு சரியாக செரிமானம் ஆகாது. சில சமயங்களில் அந்த பாக்டீரியாக்களின் ஆதிக்கம் குடலில் அதிகரித்துவிடும்.இந்த இரு நிலைகளால், அமோனியா ஹைட்ரஜன் சல்பைடு மெக்காப்டேன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகும். இவை ஆசனவாயின் வழியாக வெளியேறும்போதுதான் துர்நாற்றம் வீசும்.

*********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>