Nov 262018
வானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா?
இரவு வானத்தில் மேகம் இருந்தாலும், இருட்டில் தெரியாது. அப்படியிருக்க, அடர்ந்த மேகம் பரவியிருந்தால், வானில் இருக்கும் விண்மீன்கள் நமக்குத் தெரியாது அல்லவா?
அதாவது, வானில் விண்மீன்கள் தென்படவில்லையென்றால், அடர்ந்த மேகமூட்டம், அவற்றை மறைத்துள்ளது எனப் புரிந்துகொள்ளலாம். ஆழ்ந்த மேகமூட்டம் மழைக்கு அறிகுறி. எல்லா விண்மீன்களும் நன்றாகத் தெரிந்தால், மேகம் இல்லை என அறியலாம். மேகம் இல்லையென்றால், மழையும் பொழியாது. இதை வைத்தே, இரவில் விண்மீன்கள் தெரிந்தால், மழை பொழியாது என்றும் விண்மீன்கள் தெரியவில்லையென்றால், மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments