/* ]]> */
Nov 282010
 

விக்கிலீக்

விக்கிலீக் அமெரிக்க அரசுக்கு தீராத தலைவலியாக இருப்பது தெரிந்த விஷய்மதான். 2010ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி விக்கிலீக்ஸ் “இராக் போர்” பற்றிய 391,832 ரகசிய நோட்ஸ்களை வெளியிட்டு உலக நாடுகளையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்தது. அதே விக்கிலீக்ஸ் இப்போது அமெரிக்கா மீது இன்னொரு குண்டு போட தயாராகியுள்ளது… இந்த முறை விக்கிலீக் குறிவைத்திருப்பது அமெரிக்க தூதரகங்கள் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தங்கள் நாட்டிற்கு ( அமெரிக்காவுக்கு) அந்தந்த நாட்டைப் பற்றி அனுப்பிய ரகசிய தகவல்களை. இதில் அமெரிக்காவுக்கு என்னென்ன தர்மசங்கடம்?

WIKILEAKS

- நட்புறவு நாடுகளில் கூட அமெரிக்கா சில சீக்ரட் ஆபரேஷன்களை சில சமயம் செய்வதுண்டு. அவை இந்த விக்கிலீக் வெளியீட்டில் பகிரங்கமாக்கப்படலாம்…உலகெங்கும் அமைதிக்காக போராடுவது போல் ஒரு நிலையை எடுத்திருக்கும் அமெரிக்காவுக்கு இதைப் போன்ற தகவல்கள் ஒரு பின்னடைவுதான்.

- அமெரிக்க அம்பாசடர்கள் அந்தந்த நாடுகளின் தலைவர்களைப் பற்றிய தகவல்களை அனுப்புதுண்டு. அப்போது அவர்களைப் பற்றி தர்க்குறைவாக குறிப்பிடுவது சகஜம். உதாரணம்…அந்த பிரதம மந்திரி ஒரு மடையன்…… சரியான அவசரக்குடுக்கை… அவனுக்கு மூளையே இல்லை… மற்றும் அவர்கள் குடும்பத்தை தாக்கும் அவச்சொல்கள் எல்லாம் மிக சாதாரணமாக இந்த தகவல்களில் இடம்பெறுவது வழக்கம். இப்போது இவை வெளிவந்தால் நிச்சயம் அமெரிக்காவுக்கு தலைவலிதான்!

கடந்த முறை இராக் போர் பற்றிய தகவல்கள் ரிலீஸ் ஆனபோது அமெரிக்கா அதிர்ச்சியானது. அதுவும் அமெரிக்க ராணுவம் ஹெலிகாப்டர் பயன்படுத்தி இராக்கில் பள்ளி மாணவர்களுக்கு குண்டு வைத்தது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றன. அமெரிக்கா உலக நாடுகள் மத்தியில் தலை குனிந்தது. இப்போது அதைப் போலல்லாமல் அமெரிக்கா சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது . மற்ற நாடுகளுக்கு என்னென்ன தகவல்கள் வெளியாகலாம்… அவை எந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டன என்பதை எல்லாம் விளக்கி மற்ற நாடுகளை இந்த தகவல் அதிர்ச்சிக்கு பக்குவப்பட வைக்க இதை செய்கிறது அமெரிக்கா. ஏற்கனவே இங்கிலாந்துடன் ஒரு விரிவான பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது… துருக்கி, இஸ்ரேல், கனடா, டென்மார்க், நார்வே, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளிலும் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. சரி இதெல்லாம் நமக்கெதற்கு என்கிறீர்களா? அதில இந்தியாவும் அடக்கம். ஆமாம்…விக்கிலீக் வெளியிடப் போகும் தகவல்களில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்தும் தகவல்கள் லீக் ஆகப் போகின்றன. அதுவும் இந்த லீக் கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த சம்பவங்க்கள் பற்றியவை . கடந்த ஐந்து ஆண்டில்தான் இந்தியாவும் அமெரிக்காவும் அணு ஆலை ஒப்பந்தங்கள் பற்றி பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றன். இந்தியாவில் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததும் இந்த சமயம்தான். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் பல சென்ஸிடிவ் தகவல்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் பரிமாறப்பட்டிருக்கும். அவை அடுத்த 48 மணி நேறத்துக்குள் வெட்ட வெளிச்சமாகப் போகிறது… அமெரிக்கா இந்திவுடன் ஒரு விரிவான் பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது… என்ன அதிர்ச்சி கொடுக்கப் போகிறது விக்கிலீக்.. பார்ப்போம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>