/* ]]> */
Jul 212021
 

வயிற்றில் தோட்டா பாய்ந்தால், வாயில் ரத்தம் வரும்.

வயிற்றில் தோட்டா பாய்தல்

  • வயிற்றில் தோட்டா பாய்ந்தால், வாயில் ரத்தம் வரும்: இது உண்மையல்ல.திரப் படங்களில் வயிற்றில் குண்டடி பட்டவர்களுக்கு வாயில் ரத்தம் வருவது போல காட்டுவார்கள்.வயிற்ரில் சுட்டால், வாயில் ரத்தம் வர நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்க வேண்டும். வயிற்றில் தோட்டா பாயும்போது உள்ளுருப்புகளில்தான் ரத்த்க் கசிவு ஏற்படும். இதனால் ஒருவருக்கு வாயில் ரத்தம் வராது. இப்படி வயிற்றில் சுடப்பட்டு, வாயில் ரத்தம் வந்தால், அது ஹீமாடெம்சிஸ் (Haematemisis) என அழைக்கப்படுகிறது. நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருமலுடன் ஒருவருக்கு வாய் வழியாக ரத்தம் வந்தால், அதற்கு ஹீமோப்டியசிஸ் ( Hemaptysis) என்று பெயர். வயிற்றில் சுடப்பட்டவருக்கு வாயில் ரத்தம் வர வாய்ப்பு குறைவு.
  • உளவியல் நோயை எளிதாக மறைக்க முடியும். உண்மை. தமது மனதில் உள்ள எண்ணங்களைப் பிறரிடம் கூறாமல் ஒருவர் மறைக்க மூடியும். ஆனால் பொதுவான சூழல்களில் ஒருவர் நடந்துகொள்ளும் முறையைக் கொண்டு மனதை எளிதாக அறிய முடியும். குற்றச் செயல்களில் ஈடுபடும் மனிதர்களுக்கு அடிப்படையாக நான்கு குணங்கள் உண்டு. சுயநலம், பிறரது கஷ்டங்களை ரசிப்பது, மன அழுத்தம், பதற்றம் இல்லாமல் செயல்படுவது ஆகியவை. சிலரது பணி காரணமாக மக்களில் சிலருக்கு இந்தக் குணங்கள் இருக்கலாம். குறிப்பாக இராணுவ் வீரர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள். பிற்Aருக்கு தீங்கிழைப்பதை மகிழ்ச்சிக்காக செய்வது உளவியல் நோய் கொண்டவர்களின் முக்கிய அம்சம்.
  • இடது அல்லது வலது மூளையில் ஏதேனும் ஒன்று மட்டுமே மாணவர்களுக்குப் பயன்படுகிறது: உண்மையல்ல. நாம் தினசரி வாழ்க்கைக்கான செயல்கள் தொடங்கி பிற அனைத்து வேலைகள் வரை மூளையின் இரு பகுதிகளும் சமமாகவே செயல்படுகின்றன. லாஜிக்காக யோசிப்பவர்களுக்கு இடது மூளை அதிகம் பயன்படும். கலை தொடர்பான திறன் கொண்டவர்களுக்கு , வலது மூளை அதிகம் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். 2013ம் ஆண்டு 1000 பேரிடம் இது பற்றிய ஆய்வை உடா பல்கலைக் கழகம் நடத்தியபோது, இடது அல்லது வலது மூளையை மட்டுமே ஒருவர் பயன்படுத்துகிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை .
  • திரும்பத் திருமப் படிப்பதும், அடிக்கோடு இடுதலும் தேர்வுக்கு உதவும்: உண்மையல்ல. பாடங்களைப் புரிந்து கொள்ளாமல் திரும்பத் திரும்பப் படிப்பதும் அடிக்கோடிட்டு மனப்பாடம் செய்வதும் தேர்வில் நினைவு கொள்ள உதவாது. மேற்சொன்ன அணுகுமுறை , மாணவர்களுக்கு குறைந்த பயன்களையே கொடுக்கும் என, உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. தவறான தகவல்களை அடிக்கோடிட்டு வைத்து , திரும்பத் திரும்பப் படிப்பது மதிப்பெண்களைப் பெற உதவாது குறிப்பொய்ட்ட நேரத்தை நிர்ணயித்து, பாடங்களைப் படிப்பதோடு ,அதை மனதி;ல் அசை போட்டுப் பார்ப்பதும் சிறப்பான பயன்களைக் கொடுக்கும்.

**********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>