/* ]]> */
Aug 022021
 

ரொக்கமாகப் பணத்தை பயன்படுத்துவது சிறந்தது

ரொக்கமாகப் பணத்தை பயன்படுத்துவது சிறந்தது

  • ரொக்கமாகப் பணத்தை பயன்படுத்துவது சிறந்தது: உண்மையல்ல. இன்று பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் வழியில் கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலமாக வாங்க முடியும். இதனால் நுகர்வோருக்கு நிறைய சலுகைகளும் கிடைக்கும். ரொக்கமாகப் பணத்தைக் பையில் வைத்துக்கொண்டு  வெளியில் சுற்றுவதில் பாதுகாப்பு கேள்விக்குறி. டிஜிடல் வழிப் பணப் பறிமாற்றம் முழுக்கப் பதிவு செய்யப்படுவதால், மோசடிகளை எளிதாக செய்ய முடியாது. ரொக்கத்தைக் கையாள்வதை விட அட்டைகளைப் பயன்படுத்துவதே எளிமையானதும் பாதுகாப்பானதும் கூட.
  • வாடகை அறையில் இருப்பதைவிட வீடு வாங்குவது சிறந்தது:-உண்மை. பொய் என இதை தீர்மானமாகக் கூற முடியாது. இளைஞராக ஒருவர் கனவு வேலையைத் தேடிக் கொண்டிருக்கும்போது தனது சேமிப்பை வீட்டில் முடக்குவது தவறு. அச் சூழலில் அவருக்கு வாடகை அறையே சிறப்பானது. வீடு என்பது சொத்து என்றாலும், அதன் பராமரிப்பு செலவுகள் ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டே செல்லும். எனவே ஒருவர் தன் தொழில், திருமணம், சேமிப்பு மற்றும் எதிர்காலத்தை உறுதி செய்துகொண்டுதான் வீட்டை வாங்க வேண்டும்.
  • இரவு 7 மணிக்குப் பிறகு சாப்பிடக்கூடாது:  உண்மையல்ல. பசி எடுத்த பிறகு எப்போது சாப்பிட்டாலும் நல்லதுதான். ஆனால் இரவில் நெடு நேரம் விழித்திருக்கும்போது அதிக கலோரி கொண்ட கொழுப்பு கொண்ட உணவுகளை ஒருவர் சாப்பிட அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஒருவரின் உடல் எடை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான, எளிதில் செரிக்கும் உணவை பகுதி பகுதியாகப் பிரித்து சாப்பிடுவது இதற்கு நல்ல தீர்வாக அமையும். கடிகாரத்தைப் பார்க்காமல், பசிக்கிறதா என்று கவனித்து சாப்பிட்டால் போதுமானது.
  •  சோடாவைவிட எனர்ஜி பானங்களே சிறந்தவை: உண்மையல்ல. இரண்டுமே உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவைதான். எனர்ஜி பானங்களில் பகுதிப் பொருள்களாக மூலிகைகள், அமினோ அமிலங்கள் செயற்கை சர்க்கரை உள்ளன. சோடா மற்றும் எனர்ஜி பானங்கள் இரண்டிலுமுள்ள சர்க்கரை உடலுக்கு ஆபத்தானவை. இவற்றில் கரைக்கப்பட்டுள்ள கார்பன் டை ஆக்ஸைடு வாயுவும், பாஸ்பாரிக் அமிலம் போறவையும் உடலுக்கு நன்மை செய்யாதவை. இதைக் குடிப்பவர்களுக்கு உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு நோய் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

****************************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>