/* ]]> */
Dec 052016
 

ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்- காரணங்களும் தீர்வும்:

rhumatoid-arthritis

  •  ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்பது என்ன?

ஆட்டோ இம்யூன் பதிப்பால், நம்முடைய நோய் எதிர்ப்பு செல்கள், மூட்டுப் பகுதியில் உள்ள செல்களை அழிப்பது, ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்.

  • இந்நோய் வருவதற்கான காரணம்?

குறிப்பாக புகைப் பழக்கம் , வாயிலிருக்கும் சிலவகை பாக்டீரியா, வைரஸ் தொற்று, மரபியல் காரணங்கள் போன்றவை.

  • ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸின் அறிகுறிகள் என்ன?

தூங்கி எழுந்ததும் மூட்டுகளில் இறுக்கம், வலி இருக்கும், அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்ததும், வலிகள் குறைந்த உணர்வு ஏற்படும்.

  • இதன் பாதிப்புகள் என்ன?

இணைப்பு எலும்புகள் பாதிக்கப்பட்டு செயலிழக்கும். கண்கள். நுரையீரல், ரத்தக்குழாய் பாதிக்கும். சிறுநீரகம், இதய பாதிப்புகூட ஏற்படும்.

  • மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ளதா?

நோய் எதிர்ப்பு செல்கள் ஏற்படுத்தும் பிரச்னையால், ரத்தக்குழாய்கள், பாதிக்கப்படுகின்றன. இதனால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு வரக் கரணமாகின்றது.

  •  பரிசோதனைகள் என்ன?

ஈ.எஸ்.ஆர்.,- சி.ஆர்.பி போன்ற ரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். ஆர்.எப்., ஆன்டி சி.சி.பி., என்பது இதற்கென்றே உள்ள பிரத்யேக பரிசோதனை முறைகள்.

* என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

இரண்டு வகை சிகிச்சைகள் உள்ளன.மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்க, வலி நிவாரண மாத்திரைகள் கொடுக்கப்படும். குறைந்த அளவு ஸ்டிராய்டு மருந்துகள் , மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும்.இந்த மருந்துகள் நோயாளிக்கு பயன் தர மூன்று மாத கால அவகசம் தேவைப்படும். இப் பிரச்சினைக்கு நிரந்தர சிகிச்சைகள் ஏதும் கிடையாது.

  • வலி நிவாரணிகளால் பக்க விளைவுகள் ஏறப்டுமா?

மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ரத்த பரிசோதனை, கல்லீரல், சிறுநீரகங்களின் செயல்பாடு குறித்து அறிய பரிசோதனைகள் அவசியம். தேவையான மருத்துவ கண்காணிப்பில் இருந்தால், பக்க விளைவுகள் குறித்து பயப்படத் தேவையில்லை.

  • இந்நோயைக் குணப்படுத்த முடியுமா?

கட்டுப்படுத்தலாம். குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை செய்தால், குணமடைய வாய்ப்பு உண்டு.

  • புதிய மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளதா?

புதிய மருந்து தற்போது உள்ளது. வழக்கமான சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்றால், இந்த மருந்து கொடுக்கலாம். இதன் விலை சற்று கூடுதல் மட்டுமல்லாது, வீரியம் மிக்கது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>