கிருஷ்ண உத்சவத்தின் நான்காம் நாளான இன்று, கேரளத்தின் பாரம்பரிய நடனமான கதகளி கேரள கலாமண்டலம் பங்கு பெற்ற ருக்மணி சுயம்வரம் நாட்டிய- நாடகம்அரங்கேரியது. முகத்தில் வர்ணங்கள் பூசி, அனைத்துவிதமான பாவங்களை முகத்தில் காட்டி காட்சிகளை விழக்கினர். இவர்கள் தங்கள் முகத்தில் வர்ணங்களை சேர்த்து, ஒப்பனை முடிக்க குரைந்தது மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகும். முகத்தில் பூசும் வர்ணங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மூலிகைப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
விதர்ப நாட்டு அரசர் பிஷ்மகாவின் புத்திரி ருக்மினி, பேரழகி. அவள் பகவான் கிருஷ்ணனின் மேல் தீரா மையல் கொண்டு, பகவானையே மணமுடிக்க நினைத்தாள். அவள் தந்தையும் கிருஷ்ணனையே மணமுடிக்க நினைத்தார் ஆனால் ருக்மினியின் சகோதரர் ருக்மி, கிருஷ்ணரின் கடும் எதிரியான சிசுபாலனையே மணமுடிக்க நினைத்து அதற்க்குண்டான ஏற்பாடுகள் செய்து வர, ருக்மினி செய்வதரியாது, கிருஷ்ணனை மணமுடிக்க வழிதேடலானாள்.
ருக்மினி, சிசுபாலனுடன் நடக்கயிருக்கும் தன் திருமணத்தை தடுக்க சுந்தர பிராமனின் உதவியை நாடினார்.
அவரும் ருக்மினிக்கு உதவும் பொருட்டு, தானே கிருஷ்ணனிடம் சென்று, அவளின் துயரத்தை கூறி ஆவன செய்யுமாறு கேட்டுவருகிறேன் என்று துவாரகைக்கு கிழம்பிச்சென்றார்
சுந்தர பிராமணர் துவாரகைக்குச்சென்று, கிருஷ்ணனிடம், ருக்மினியின் துயரத்தை எடுத்து கூறி அவளின் துயரத்தை துடைக்குமாறு கூற, கிருஷ்ணரும், தான் விதர்ப நாட்டுக்கு வந்து ருக்மினியை காப்பாற்றுவதாக கூறி தன் ரதத்தில் அவரை திருப்பி அனுப்பினார்.
சுந்தரபிராமணரும் தனக்கும் கிருஷ்ணரின் நடுவில் நடந்ததை ருக்குமினியிடம் கூறினார். ருக்மினியும் கண்ணனின் வருகைக்காக மகிழ்ச்சியுடனும், ஆவலுடனும், கிருஷ்ணனுடன் துவாரகைக்கு செல்லும் நாளுக்காக காத்துக்கொண்டிருந்தாள். கிருஷ்ண்னும் தான் கொடுத்தவாக்கு மீராமல். ருக்மினியை மணமுடித்து துவாரகைக்கு அழைத்துச்சென்றார்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments
















Please comment with your real name using good manners.