/* ]]> */
May 172013
 

ஐபில் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் குடுத்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் கைது செய்ய பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல் டீம்-ஐ சேர்ந்த ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு பந்துவீச்சாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வியாழன் அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீசாந்த் ஒரு ஓவருக்கு 60 லட்சம் வாங்கியுள்ளார்.
டெல்லி போலீஸ்-ஆல் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஐபில் ஆட்டத்தில் இருந்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தும் பிசிசிஐ நிறுத்திவைத்துள்ளது.போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் வீரர்களுக்கும் பணம் குடுத்தவர்களுக்கும் இடையேயான பல மணி நேர தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார். மேலும் இது சம்பந்தமாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியப்படுத்தினார். அவர்கள் பிரிவு 420 மற்றும் 120(பி) பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 5,9,15, ஆகிய தினங்களில் புனே வாரியர்ஸ், கிங்க்ஸ் 11 பஞ்சாப்,மும்பை இந்தியன்ஸ் உடன் நடந்த போட்டிகள் அனைத்தும் மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டவை என கூறினார்.
மேலும் விசாரணை பற்றி விசாரித்த பொழுது மேட்ச் பிக்ஸ்-ல் மும்பை நிழல் உலக தாதாக்களும் இடம் பெற்று இருப்பதாக கூறினார்.ஆனாலும் ஆதாரம் இன்றி அவர்களின் பெயர்களை தெரிய படுத்த முடியாது. மேலும் அவர் நாங்கள் ஏப்ரலில் இருந்தே இவர்களை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டோம். மேட்ச் பிக்ஸ்- ல் ஈடுபட்டுள்ள இவர்களின் தலைவர் வெளிநாட்டில் உள்ளதாகவும் கூறினார்.ஐபில் போட்டிகளில் எந்த அளவு சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை இந்த நிகழ்ச்சி வெளிச்சம் போட்டு காட்டிஉள்ளது

Ajit chandila

Ajit chandila

Akeet chavan

Akeet chavan

Sreesanth

Sreesanth

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>