/* ]]> */
Mar 092016
 

ரிக்கெட்ஸ்- வரக் காரணமும் சிகிச்சையும்;

RICKETS

  • ரிக்கெட்ஸ் என்றால் என்ன?

எலும்புகள் வளர்ச்சி குன்றி வலுவிழந்து, வளைந்து இருப்பதற்கு, ‘ரிக்கெட்ஸ்’ என்று பெயர்.

  • ரிக்கெட்ஸ் வரக் காரணம் என்ன?

‘வைட்டமின்-டி’ குறைபாடுதான் பிரதானக் காரணம். இது தவிர, கால்சியம் குறைபாடு, சிறுநீரகம், கல்லீரல், உணவுக் குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாலும் ரிக்கெட்ஸ் வரலாம்.

  • எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம்தானே முக்கியம்?

நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களை உறிஞ்சுவதற்கு, வைட்டமின்-டி அவசியம். வைட்டமின்-டி குறைபாடு இருந்தால், வைட்டமின்-டியின் ஆதாரமான ‘கால்சிட்டால் ஹார்மோன்’ போதுமான அளவு உற்பத்தி ஆகாது. இதனால் போதுமான அளவு கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போய்விடும்.

  • ரிக்கெட்ஸ் நோயின் அறிகுறிகள் எவை?

இரும்பு மற்றும் புரதச் சத்துக் குறைபாடு, கை கால் முட்டி தடித்து இருப்பது, கை கால் வளைந்து இருப்பது, நெஞ்சு எலும்பு முன்னோக்கி துருத்தி இருப்பது, கூன் விழுந்த முதுகு இதன் அறிகுறிகள்.

  • மரபியல் காரணமாக ரிக்கெட்ஸ் ஏற்படுமா?

மரபியல் காரணங்கள் இதில் மிக அரிது.

  • எலும்பு வளர்ச்சி தவிர , வைட்டமின்-டி யின் வேறு பயன்கள் என்ன?

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றலும் வைட்டமின்-டி க்கு உண்டு. எலும்புப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. தசைகளின் நெகிழ்வுத் தன்மையைத் தடுக்கிறது. சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

  • வைட்டமின்-டி போதுமான அளவு கிடைக்க என்ன செய்யவேண்டும்?

காலை நேரத்தில் சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், உடலின் சருமப் பகுதியில் படும்போது, சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து, வைட்டமின்-டியை உடல் உற்பத்தி செய்துகொள்ளும்.

  • எந்தெந்த உணவுகளில் வைட்டமின்-டி சத்து உள்ளது?

பால், மீன், முட்டை, மாமிசம், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளில் உள்ளது.

  • ரிக்கெட்ஸ் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?

நம் உடலுக்குத் தேவையான  வைட்டமின்-டி, இயற்கையான முறையில் கிடைப்பதற்கான மிகச் சிறந்த வழி சூரிய ஒளி. சருமத்தில் வெயில் படும் வகையில் தினமும் காலையில் 20 நிமிடங்கள் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். காலை அல்லது மாலை நேரத்து வெயிலில் குழந்தைகள் விளையாடினால், தேவையான அளவு வைட்டமின்-டி கிடைக்கும்.

  • சிகிச்சை முறைகள் என்ன?

பொதுவாக கால்சியம், வைட்டமின்-டி குறைபாட்டால் ரிக்கெட்ஸ் வருகிறது என்பதால், வைட்டமின் மாத்திரைகள், இணை உணவுகள் மூலமே சிகிச்சை தரப்படுகிறது. வேறு காரணங்கள் இருந்தால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும்.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>