/* ]]> */
Mar 102011
 

 

விஜய்காந்த் - கே.எஸ்.ரவிகுமார்

விஜய்காந்த் - கே.எஸ்.ரவிகுமார்

 

இன்று நமது கப்சா நிருபருக்கு கே.எஸ்.ரவிகுமாரிடமிருந்து வந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“அன்பு கப்சா நிருபருக்கு

கே.எஸ்.ரவிக்குமார் எழுதிக்கொள்வது…

அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சினிமாவிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டி உள்ளது… அண்ணா கலைஞர் காலத்திலிருந்தே அரசியலின் தொடர்ச்சி தானே சினிமா…சமீபத்தில் கறுப்பு எம்.ஜி.ஆர், புரட்சிக் கலைஞர் டாக்டர் விஜய்காந்த அதிமுக கூட்டணியில் இணைந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்… அதேபோல் முத்து படத்தில் ரஜினி மீனா நாடக மேடையில் மோதும் காட்சிகளில் இருந்தே எனக்கும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவுக்கும் எவ்வளவு ஈடுபாடு என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.. அம்மா அவர்கள் தன் உடன்பிறவா சகோதரரான விஜய்காந்திற்கு சினிமாவில் ஒரு மெகா ஹிட் கட்டாயம் தேவை என்று நினைக்கிறார்கள். ஆகையால் அம்மா அவர்கள் என்னிடம் அன்பு கட்டளையிட்டு சொன்னபடி ராணா என நான் தற்போது எடுத்து வரும் படத்தில் நண்பர் ரஜினியின் கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடிப்பதே பொறுத்தமாக இருக்கும் என்று சொன்னார்கள்…நண்பர் ரஜினியும் இதைக்கேட்டு ” நான் எந்திரன் பார்ட் 2 மாதிரி சின்ன ப்ராஜக்ட்லயே நடிச்சுக்குறேன்… இது விஜிக்குத்தான் பொறுத்தமா இருக்கும்” என்று விலகிவிட்டார்…ஆகவே ராணாவின் கதாநாயகன் விஜய்காந்த்”

 

கடிதத்தை நம்மால் நம்ப முடியவில்லை…

நேராக ராணா ஷூட்டிங்க் எடுத்துக் கொண்டிருக்கும் ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு விரைந்தோம்…

அங்கே நாம் கண்ட காட்சிகள்….

விஜய்காந்த் காமெடி

விஜய்காந்த் காமெடி

விஜய்காந்தும் கே.எஸ்.ரவிகுமாரும் ரொம்ப ஆழ்ந்த டிஸ்கஷனில் இருந்தார்கள்….

” அந்த வயசான ரஜினி அலெக்ஸ் பாண்டியன் கெட்டப்புல இருந்தத நாம “பூந்தோட்ட காவல்காரன் “  கெட்டப்புக்கு மாத்திடலாம்.. ஆனா சின்ன ரஜினிக்கு நீங்க சின்ன கவுண்டர் கெட்டப் தான் போடுவீங்கன்னு அடம் புடிக்கிறது சரியில்ல… இது சிட்டி சப்ஜெக்ட்…”

ரவிகுமார் டென்ஷனாய் பேசிக்கொண்டிருந்தார்…

திடீரென அசிஸ்டென்ட் உள்ள வந்து

“சார் அந்த கிராஃபிக்ஸ் ரஜினிக்கு பதிலா அனிமேஷன்ல கிராஃபிக்ஸ் விஜய்காந்த் ரெடி பண்ணிட்டோம்…ஆனா அந்த கிராஃபிக்ஸ் விஜய்காந்த “அ ஆங்க்” சொல்ல வைக்க முடியவே இல்ல..”

கே.எஸ்  பிபி இன்னும் எகிறியது…

அப்போது அவர் மொபைல் லைனில் த்ரிஷா…

” சார்… ராணா வுல நடிக்க நீ தானம்மா சான்ஸ் கேட்ட…”

“இல்ல சார்… இப்போ சம்மர் ஸ்டார்ட் ஆயிடுச்சி … அதனால ஸ்விட்சர்லாந்துல இருக்குற சித்தி வீட்டுக்கு போறேன் சாரி சார்”

trisha

தீபிகா படுகோனேவிடமிருந்து ஃபோன்…

” சார் நான் ஹாங்காங்க்ல இருக்குற அண்ணன் வீட்டுக்கு போறேன்…”

வித்யா பாலனிடமிருந்து ஃபோன்…

“என்னம்மா நீ  ஆஸ்திரேலியாவுல இருக்குற அண்ணி வீட்டுக்கு போறியா?”

“சார் எப்படி சார் இப்டி கரக்டா கண்டு பிடிச்சீங்க?”

மீண்டும் விஜய்காந்திடம் பேச திரும்புகிறார்…

” சார்.. இப்பத்தான் என் ரசிகர்டேர்ந்து ஃபோன்”

கே.எஸ் விஜய்காந்தை பார்க்க… விஜய் சொன்னார்…

“இல்ல… படத்துல எனக்கு எப்படியும் 5 லெக் ஃபைட்டு … காத்தாடி மாதிரி நான் பறந்து பறந்து அடிக்கற மாதிரி படம் பேர ஏன் “பாணா”னு மாத்தக் கூடாது…

கே.எஸ் திக்கு முக்காடிப் போகிறார்…

காஸ்ட்யூம்ஸ் வருகிறது.. மூணு வித சைசில் காகி சட்டை பேண்ட்….

விஜய்காந்த் சொல்கிறார்…

“அப்புறம் சொல்ல மறந்துட்டன… மூணு கேரக்டரும் போலீஸ் தான்… ஒருத்தர் இன்ஸ்பெக்டர்.. ஒருத்தர் எஸ்.பி இன்னொருத்தர் டி.ஜி.பி”

கே.எஸ்.ரவிகுமார் சொல்கிறார்…

“சார்.. நான் மறந்தே போயிட்டேன்… இந்த சம்மருக்கு சைனா இருக்குற எங்க நைனா வீட்டுக்கு…. “

மறுநாள் பேப்பரில் விளம்பரம்

 

“அம்மா ஆசீர்வாதத்துடன்

பேரரசு இயக்கத்தில்

புரட்சிக் கலைஞர் டாக்டர் விஜ்ய்காந்த்

மூன்று புதுமுகங்களுடன் நடிக்கும்

பாணா “

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>