/* ]]> */
Dec 252011
 

  ராஜபாட்டை திரைவிமர்சனம் – RAJAPATTAI FILM REVIEW

மல் பொதுவாக ஒரு சீரியஸ் படத்திற்கு பிறகு காமெடி படம் பண்ணுவார் , அந்த பாணியில் ஜாலியாக ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் விக்ரமும், சுசீந்திரனும் கை கோர்த்திருக்கும் படம் “ ராஜபாட்டை ” … காமெடி படமானாலும் அதையும் சீரியசாக திட்டமிட்டு எடுக்க வேண்டும் என்பதை ராஜபாட்டையில் ஏனோ கோட்டை விட்டிருக்கிறார்கள் …

வில்லனாக வேண்டுமென்ற கனவோடு சினிமாவில் பைட்டராக வலம் வந்து கொண்டிருக்கும் அனல் முருகன் ( விக்ரம் ), அனாதை ஆஸ்ரம இடத்திற்காக தட்சிணா மூர்த்தியை ( கே.விஸ்வநாத் ) துரத்தும் நில மாபியா கும்பலிடமிருந்து அவரை காப்பாற்றுகிறார் … கடைசியில் நில அபகரிப்பு மூலம் ஊரையே அடித்து உலையில் போடும் அரசியல்வாதி அக்காவிடமிருந்து விஸ்வநாத்தையும் , ஆஸ்ரமத்தையும் விக்ரம் மீட்டாரா என்பதே கதை …

V

தெய்வதிருமகளில் நடித்தவரா இவர் என ஆச்சர்யப்பட வைக்கும் உடற்கட்டுடன் இருக்கிறார் விக்ரம் … க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிந்தாலும் கெட்அப்பில் மறைக்கிறார் … முதல் காட்சியிலேயே காமெடி பைட் மூலம் அறிமுகமாகும் விக்ரம் பிறகு முப்பது , நாப்பது அடியாட்களை சீரியசாக அடிக்கும் போது கூட நமக்கு சிரிப்பு வருவது கேரக்டரைஷேஷன் கோளாறு …

படத்தின் முதல் பாதியை நகர்த்தி செல்லும் இரண்டாவது ஹீரோ கே.விஸ்வநாத் … கமலுக்கே நடிப்பு சொல்லி தந்தவர் என்பதை நிரூபிக்கிறார் .. இவர் கொடுக்கும் காதல் டிப்ஸ் எல்லாம் அதர பழசு என்றாலும் இவர் சொல்லும் போது அழகாக இருக்கிறது …விக்ரமுக்கும்,  இவருக்கும் இடையேயான நட்பில் அழுத்தம் இல்லாததால் வா , போ என்று விக்ரம் இவரை அழைக்கும் போது நெருடுகிறது …

D

ஹீரோயினாக நடித்திருக்கும் தீக்ஷா சேத் உயரமாக இருக்கிறார் , முகத்தில் ஒரு பொலிவே இல்லை … டூயட் தவிர படத்தில் அவருக்கு பெரிதாக வேலையும் இல்லை … சொல்லப்போனால் ஹீரோயினை விட வில்லி அக்காவாக நடித்திருப்பவர் முகத்தில் தெரிகிறது பொலிவு. வில்லிக்கு பக்கபலமான வாப்பா கேரக்டரில் பிரதீப் பொருத்தமாக இருக்கிறார், விக்ரம் பல கெட்டப்களில் வந்து இவரிடம் குறுக்கு விசாரணை செய்யும் காட்சிகள் கல கல …

” அசிங்கத்த பாத்தா அவார்ட் வாங்க முடியுமாப்பா ” , ” நான் கோ டைரக்டர் , கோ படத்தோட டைரக்டர் இல்ல ” என்று சொல்லும் தம்பி ராமையாவின் காமெடியும் , விக்ரமிடம் பயந்து நடுங்கும் அருள்தாசின் காமெடியும் நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் சமாச்சாரங்கள் …

யுவனின் இசையில் “ பொடி பையன் ” , ” பனியே ” பாடல்கள் முனுமுனுக்க வைக்கின்றன … யுவன் , மதி , ராஜீவன் இப்படி நிறைய டெக்னீஷியன்களின் உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது … பாஸ்கர் சக்தியின் வசனங்களும் பெரிதாக உதவவில்லை …

V

விக்ரம்-விஸ்வநாத் நடிப்பு, விக்ரம் சாங் சீக்குவன்ஸ் யோசிக்கும் போது பைட்டர்கள் வந்தவுடன் சாங்கையே அவாய்ட் செய்வது  , பதிவாளர் அலுவகத்தில் புகுந்து புத்திசாலித்தனமாக இட பத்திர பதிவை நிறுத்துவது, வேகமாக செல்லும் இரண்டாம் பாதி , சில இடங்களில் தேவையில்லாத பைட்களை தவிர்த்திருப்பது போன்றவை படத்தின் ப்ளஸ் ..

விக்ரமின் கேரக்டரைஷேஷன் , இம்ப்ரெஸ் செய்யாத கதை , திரைக்கதை , என்ன தான் பைட்டராக இருந்தாலும் ஊரையே ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதி அனுப்பும் ஆட்களை கொட்டாவி விட வைக்கும் அளவுக்கு விக்ரம் அடித்துக் கொண்டேயிருப்பது , சப்பென்று முடிந்து விடும் க்ளைமாக்ஸ்  , லட்டு பிகர்களுடன் விக்ரம் ஆடியும் வீணடிக்கப்பட்ட “ லட்டு லட்டு ” பாடல் இவையெல்லாம் மைனஸ்… மசாலா படம் எடுப்பது எவ்வளவு சீரியசான பிசினஸ் என்று இப்போது இயக்குனருக்கு புரிந்திருக்கும்…

இணை இயக்குனர் சீனுவிடம் இருந்து நடப்பு நிகழ்வான நில அபகரிப்பை வைத்து எழுதப்பட்ட கதை ! யை வைத்து முழு நீள ஆக்சன் மசாலாவாக எடுக்கலாமா ? அல்லது காமெடியாக எடுக்கலாமா ? என்ற குழப்பத்திலேயே படம் நெடுக சுசீந்திரன் இயக்கியிருப்பதால் ரசிகர்களுக்கு ராஜபாட்டை ஒரு ரெண்டுங்கெட்டான் …

ஸ்கோர் கார்ட் - 38 

 

tags : rajapattai review, rajapattai review, rajapattai cinema review, rajapattai movie,  ராஜபாட்டை சினிமா விமர்சனம், ராஜபாட்டை விம்ர்சனம்,RAJAPATTAI, RAJAPATTAI FILM REVIEW, VIKRAM,SUSEENTHRAN,REEMA,SHREYA,அனந்து, சினிமா, திரைவிமர்சனம், ராஜபாட்டை, விக்ரம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>