/* ]]> */
May 102011
 

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2011 2012 அனைத்து ராசிகளும்

 

 

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

 

 

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2011 2012 அனைத்து ராசிகளும்

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்

கர வருடம் வைகாசி மாதம் 2ஆம்தேதி (16.5.2011) கேட்டை நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் விருச்சிக ராசியில் ராகுவும் மிருக சிரீஷம் 2ஆம் பாதத்தில் ரிஷப ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறாகள். திங்கட்கிழமை காலை 9.55 மணிக்கு ராகு ,கேது பெயர்ச்சி ஏற்பட இருக்கிறது. இந்தப் பெயர்ச்சியில் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நாலு ராசிக்காரர்களும் அற்புத பலன்களைப் பெறப் போகிறார்கள். மற்ற ராசிக்காரர்கள், ராகு , எழுந்தளியுள்ள ஸ்தலமான திரு நாகேஸ்வரத்துக்கும், கேது எழுந்தளியுள்ள ஸ்தலமான கீழ்ப்பள்ளத்தூருக்கும் சென்று வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்து வந்தால், நன்மைகள் யாவும் அடைந்து வாழலாம். மேலும் உங்கள் சுய ஜாதகத்தில் ராகு கேதுக்கள் எப்படி இருக்கிறார்கள் ; எந்த நட்சத்திரக் காலில் இணைந்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பரிகார ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரங்களச் செய்து வழிபட்டு வந்தால், போராட்டமான வாழ்க்கை கூட பூந்தோட்டமாக அமையும். இனி ஒவ்வொரு ரர்சிக்காரர்களுக்கும் உள்ள பலன்களைப் பார்க்கலாம். வாசகர்களின் நல்ல யோக பலனுக்காக ராகு கேது ஸ்தோத்திரங்களும் ராகு, கேது ஸ்துதியும் , ராகு கேது காயத்ரியும் தரப்பட்டிருக்கிறது. இடைவிடாது பாராயணம் செய்து பலன் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். ராகு ஸ்தோத்திரம் :- “அர்த்த காயம் மகா வீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம் ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராகும் ப்ரணமாம் யஹம்” ராகு துதி:- வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப் போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமே யற்றுப் பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீணடும் பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே! ராகு காயத்ரி:- ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ: ராகு ப்ர சோதயாத். கேது ஸ்தோத்திரம்:- பலாச புஷப சங்காசம் தாரகா கிரக மஸ்தகம் ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம் யகம். கேது துதி:- பொன்னையன் உரத்திற் கொண்டோன் புலவர் தம் பொருட்டால் ஆழித் தன்னையே கடைந்து முன்னம் தன்னமுது அளிக்கலுற்ற பின்னே நின் கரவாலுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய் என்னையாள் கேது தேவே எம்மை இனி ரட்சிப்பாயே! கேது காயத்ரி:- ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ: கேது ப்ரசோதயாத் இனி ஒவ்வொரு ராசியாகப் பார்க்கலாம்.

1.மேஷம்

 

இதுவரை 9ல் இருந்த ராகு இப்போது 8ஆம் இடத்துக்கும் 3ல் இருந்த கேது இப்போது 2ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். ராகு கொடுக்கும் பலன்களை ஆராய்ந்தோமானால், அது சஞ்சரிக்கப் போகும் எட்டாமிடம் என்பது கெட்ட ஸ்தானம். சஞ்சலம்,ஏமாற்றம்,விபத்து, பீடை, கௌரவ பங்கம், கவலை இவற்றைக் குறிக்கும் இடம். ஆனால், அஞ்சத் தேவையில்லை. இயற்கையில் பாப கிரகமாகிய ராகு மேற்கண்ட பாப ஸ்தானத்துக்கு வருவதனால், அவர் பாபத் தன்மைகளை விரட்டி அடிப்பார் அல்லது அழித்து விடுவார். டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பது போல கெட்ட இடத்தில் வந்திருக்கும் கெட்ட கிரகம் கெட்ட பலனைக் கொடுப்பதால் நன்மை உண்டாகும். அதே நேரத்தில் 22.1.2012வரை புதன் சஞ்சாரத்தில் இருக்கும்வரை பணத் தட்டுப்பாடு குடும்பத்தில் குழப்பம், கண் கோளாறு போன்றவை இருக்கும். அத்துடன் குரு ஜென்ம ராசியில் நின்று, 5,7,9 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் தைர்யம் உண்டாகும். விருச்சிக ராகு 2ம் இடத்தைப் பார்ப்பதால்,வித்தை, ஞானம், வாக்குப் பலிதம் ஆகியவை உண்டாகும். அடுத்து, ராகு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் துறையிலும், வேலையிலும் நல்ல திருப்பம் உண்டாகும். 10க்குடைய சனி ராசிக்கு 6ல் மறைந்து 8ல் உள்ள ராகுவைப் பார்ப்பதால், தொழிலில் நல்ல திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். விருச்சிக ராசியில் இருக்கும் ராகு 6,2,10 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், ஆறாமிடம் என்பது நோய். ஆனால் கெட்ட கிரகமான ராகு பார்ப்பதால், நோய் விலகும். விரோதிகள் விலகுவர். 6ம் இடம் கடனையும் குறிக்கும். நீங்களாகவே, வீட்டுக் கடன், கல்விக் கடன், கல்யாணக் கடன் என்று ஏற்படுத்திக்கொள்ளலாம். மேலும் கும்பகோணம் அருகில், திருச்சேறை என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சார பரமேஸ்வரரை வழிபட்டால், கடன் அடையும். கேது பகவான், 2ல் நின்று, 12,8,4, ஆகிய இடங்களைப் பார்ப்பதால், சுப விரயம் ற்படும். எடுத்த காரியம் சட்டுன்னு முடியாது. மொத்தத்தில், ராகு கேது பெயர்ச்சி பிரபல யோகமாக இல்லாவிட்டாலும், பாதிப்பான பலன்களைச் செய்ய மாட்டார். காளஹஸ்தி சென்று ருத்ராபிஷேக பூஜை செய்தால், தடைகள் விலகும்

பரிகாரம்

குல தெய்வ வழிபாட்டை முறைப்படி செய்யவும். வருடத்தில் ஒருமுறை கதிராமங்கலம் போய் வன துர்க்கை அம்மனுக்கு உதிரி எலுமிச்சை கொடுத்து கும்பிட்டு வந்தால், துன்பம் விலகும். பக்கத்திலுள்ள பிள்ளையார் கோவிலுகு அடிக்கடி சென்று வழிபடுவதும் கஷ்டங்களை நிவர்த்தி செய்யும்

 

2.ரிஷபம்

 

இதுவரை 8ல் இருந்த ராகு இப்போது 7ம் இடத்துக்கும் 2ல் இருந்த கேது இப்போது ஜென்ம ராசிக்கும் மாறுகிறார்கள். ரிஷப ராசிக்கு 7ல் நிற்கும் ராகு சனியின் பார்வையைப் பெறுவதாலும், ரிஷப ராசிக்கு குரு 12ல் இருப்பதோடு ராகுவுக்கு 6ல் மறைவதாலும் திருமணத் தடை ஏற்படும். ஜாதக தசா புத்திகள் பாதகமாக இருந்தால், விவாக ரத்து ஏற்படவும் வாய்ப்புண்டு. கணவன் மனைவி சேர்ந்து வாழ பார்வதி சுயம்வரகலா ஹோமத்தில் பதிகமன ஹோம மந்திரம் சொல்லி கலச அபிஷேகம் செய்ய வேண்டும். கேது ஜென்ம ராசியில் இருப்பதால், உங்களுடைய செல்வாக்கு உயரும். மதிப்பு மரியாதை அற்புதமாக இருக்கும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ராகு கேது தசா புத்திகள் நடந்தால், சிலர் மாந்த்ரீகம் வசியம், ஹிப்னாடிஸம் பயிர்ச்சியில் ஈடுபட்டு அருள் வாக்கு சொல்ல ஆசைப்படலாம். ஆனால், நியாயத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். ரிஷப ராசிக்கு 9க்குடைய சனி கன்னியில் இருந்து விருச்சிக ராகுவைப் பார்க்கிறார். அப்பழுக்கற்ற புகழை அடைந்து , வணங்கத்தக்க அந்தஸ்த்தை உண்டாக்கும். உங்களுடைய பேராசையின் காரணமாக உங்களைத் தவறான வழிக்குத் திசை திருப்பி விட்டால், சனியின் பார்வைப் பலனாகவும், 8ஐப் பார்க்கும் குருவின் பார்வைப் பலனாகவும் கேவலத்தையும் அபகீர்த்தியையும் உண்டாக்கும். ராகு ரிஷப ராசிக்கு 5ம் இடத்தையும் ஜென்ம ராசியையும் ,9ம் இடத்தையும் பார்க்கிறார். ஜென்ம கேது ரிஷப ராசிக்கு 11ம் இடத்தையும், 7ம் இடத்தையும் , 3ம் இடத்தையும் பார்க்கிறார். ஜென்ம ராசியில் கேது நிற்பதும், அதை ராகு பார்ப்பதும் விஷேஷம்தான். உங்கள் செயல்களைப் பொறுத்து கௌரவப் பதவிகளும் அரசியல் தொடர்பும் ஏற்படும். வி.ஐ.பி.க்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களால் முடியாமல் போகும் காரியங்களும் உங்கள் கெட்டிக்காரத் தனத்தால், முடிந்து பேர் வாங்கலாம். விருச்சிக ராகு 7ம் இடத்தைப் பார்ப்பதும், ஜென்ம கேது 7ம் பார்வையாக கணவன் அல்லது மனைவி ஸ்தானத்தைப் பார்ப்பதும், உங்கள் செல்வாக்கு, பெருமையில் உங்கள் கணவனுக்கோ மனைவிக்கோ பங்கு இடைக்கும். ரிஷப ராசிக்கு 5ம் இடத்தை ராகு பார்க்கிறார். 5ல் ராகு, கேது,சனி போன்ற கிரகங்கள் புத்திர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஏற்படும். ராகு 9ம் இடத்தையும் பார்க்கிறார். 9ம் இடம் என்பது புத்திரஸ்தானம். அதனால், 5லும், 9லும், ராகு, கேது, சனி நிற்பது தோஷமாகக் கருதப்படுகிறது. யோக பலன்கள் குரு ரிஷப ராசிக்கு வரும்போது எதிர்பார்க்கலாம். ரிஷப ராசிக்கு சூரியன் 4மக்குடையவர். ராகுவும் கேதுவும் சூரியனுக்குப் பகைவர்கள். எனவே ராகு கேது பெயர்ச்சி ஆரோக்கியத்தைக் கெடுக்கும். கடனையும், விரயத்தையும் தருவதோடு, யோகத்தையும் லாபத்தையும் தரும். சிலருக்கு தாயாருக்கு சங்கடமும் சிலருக்கு சரீர உபாதை , குடும்பப் பிரச்சினை உண்டாகும். சிக்கல்களைக் கொடுத்தால் அதற்கு நிவர்த்தி தேடும் வகையில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும்.

 

பரிகாரம்;- விடுபட்ட குல தெய்வ வழிபாட்டை வியாழக் கிழமைகளில் நிறைவேற்றுங்கள். சங்கடஹர சதுர்த்தியில் ஆனை முகனுக்கு அருகு சாத்தி வழிபடுங்கள். . ஏழை நோயாளிகளுக்கு உங்களால் முடிந்த உ தவிகளைச் செய்யவும்.

3.மிதுனம்

 

இதுவரை உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் கேது இப்போது 12ம் இடமான ரிஷபத்துக்குப் போறாங்க. ஏழாம் இடத்தில் இருந்த ராகு இப்போது ஆறாமிடமான விருச்சிக ராசிக்குப் போகிறார். முறையான முயர்ச்சிகள் மூலம் தடைப்பட்ட அலுவலக உத்தியோக உயர்வுகள் தடை விலகி கை கூடும். எதிர்பார்த்த இட மாற்றம் , ஊதிய உயர்வுகள் செய்தால், உங்க உயவுல சீரான வளர்ச்சி ஏற்படும். கிட்டும்.சின்ன பணிகளைக்கூட சிறப்பாக திட்டமிட்டுச்ஸ்தால் உங்க வளர்ச்சி சீராக இருக்கும். மசில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதனால், சீல்களில் திறமை வெளிப்படும். பியருடைய தவறுகளை பூதக் கண்ணாடி வச்சுப் பார்க்க வேண்டாம். இதன் மூலம் விரோதம் குறையும். குடும்பத்டில் மகிழ்ச்சி நிலைக்கணும்னா விட்டுக் கொடுத்துப் ப்ங்க. வாரிசுகள் விஷயத்தில் வீண் கௌரவம் பார்த்து விலக்கி வைக்க வேண்டாம். சுப காரியத் தடை நீங்கும். அக்கம்பக்க வீட்டாரோட வீண்பகையை வளர்க்க வேண்டாம். கல்விப் அணிக்காஅ வாரிசுகள் வெளிநாடு செல்ல ஹடை ஏதும் சொல்ல வேண்டாம். செலவைக் குறைத்துக் கொள்ளும்படி திட்டமிட வேண்டும். வியாபாரத்துல் புதுப் போட்டியாளர்கள் முளைக்கலாம். புதுமையான முயர்ச்சிகல் மூலம்தான் போட்டிகளை சமாளிக்க முடியும். புதுமையைப் உகுத்தி பழைய தொழிய சீர்படுத்தினா சிறப்பான ஆதாயம் பெறலாம். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துல நேரடிக் கவனம் மிக அவசியம். கூடுத் தொழில்ல பெரும் முதலீஐப் போடுஅதற்கு முன்பு நன்கு, யோசித்து குடும்பத்தினர் ஆலோசனையுடன் செயல்பட வேண்டும். வரவு அதிகரிச்சாலும் செலவும் கூடும். ஸ்லருக்கு திடீர் அதிர்ஷ்டத்துக்கான வாய்ப்புக்களும் குறைவில்லை. அரசுத் துறையைச் சேர்ந்தவங்க திடீர் பொறுப்புகள், புகழ்ன்னு சந்தோஷப்படலாம்

பரிகாரம் : சமயபுரம் மாரியம்மனை வணங்னுங்கள். கூடவே , ஒரு ரத்த தானமும் செய்யுங்கள். சிறப்புக்கள் சேரும்.

 

4.கடக ராசி

 

உங்கள் ராசிக்கு 6ல் இருந்த ராகு இப்போது 5ம் இடத்துக்கும் 12ல் இருந்த கேது இப்போது 11 ம் இடத்துக்கும் மாறியிருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த இடங்களும் கூட யோகமான இடம்தான். அதற்காக இப்போது மாறியுள்ள இடங்கள் யோகமில்லை என்று அர்த்தமில்லை. குறிப்பாக ராகு மாறியுள்ள இடத்தை விட கேது மாறியுள்ள இடம் மிக மிக யோகமுள்ள இடம். ராகு இப்போது மாறியுள்ள ஐந்தாமிடம் மிகச் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கேது மாறப்போகும் 11மிடம் அற்புதமான இடம். எனவே கடந்த காலத்தைவிட இந்தப் பெயர்ச்சி அதி யோகமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். குரு கடக ராசிக்கு 10ல் இருந்தபடி 2,4,6ம் இடத்தைப் பார்ப்பதால், பிள்ளைகள் வகையில் சுபச் செலவுகள் உண்டாகும். பணப் பற்றாக்குறைக்கு வெளியிலும் கடன் வாங்க நேரும். டிஸம்பரில் துலா ராசிக்கு மாறும் சனியின் பார்வை ஜென்ம ராசிக்கும் 10 ஆம் இடத்துக்கும் கிடைக்கும். அதனால், பிள்ளைகள், மனைவி வகையில் ஆதரவும் சகாயமும் கிடைக்கும். ராகு விருச்சிகத்தில் இருக்கும் காலத்திலேயே குரு ரிஷப ராசிக்கு மாறுவார். அப்போது, 3,5,7ம் இடத்துக்கு குரு பார்வை கிடைப்பதால், உங்கள் பிள்ளைகளின் தொழில் உயர்வு உங்கள் தன லாபத்தைப் பெருக்கும். உங்கள் ராசிக்கு 3ம் இடத்து சனியின் கடைசிக் கட்டம் என்றாலும், ராகுவுக்கு லாப ஸ்தானம் பெற்று சனி ராகுவைப் பார்ப்பதால்,, நற்பலன்களைத் தருவார். கொடுக்கல் வாங்கலில் நாணயம் கெடாதபடி சமாளிக்க முடியும். 5ல் ராகு கேது இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும் என்ற ஒரு கருத்து இருந்தாலும்,அதை அப்படியே நம்பி பயப்படத் தேவையில்லை. காலதாமதமாக வேண்டுமானால், இருக்கலாமே தவிர புத்திர தோஷம் கடுமையாக இருக்கது. 11ல் இருக்கும் ராகு தொழில் தொய்வடையாமல் காப்பாத்துவார். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடனும் அதிகமாகி வட்டியே பயமுறுத்தும். ஆனாலும், மேஷ குரு நல்ல வருமானத்தை ஏற்படுத்தி, வரவு செலவு விஷயததை மேன்மையடைய வைப்பார். 11ம் இடத்தில் கேது வருவதால், கடல் கடந்து வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். தாரம் இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். ராகு மூன்றாமிடத்தைப் பார்ப்பதால், சகோதரர் வழியில் சகாயம் உண்டாகும். 11ம் இடத்தை ராகு பார்ப்பதால், லாபம் உண்டாகும். ராகு கடக ராசிக்கு 7ம் இடத்தைப் பார்ப்பதால், திருமணத்தடை ஏற்படலாம். ரிஷப கேது 5,9,ஜென்ம ராசியையும் பார்ப்பதால், மதிப்பு மரியாதை உண்டாகும். மொத்தத்தில் ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்கு நல்ல அனுகூலங்களைக் கொடுக்கும். ராகு கேது பெயர்ச்சி பெரிய மாற்றங்களைச் செய்யாவிட்டாலும்,சுப விரயங்களைச் செய்வார். சீர்காழியில் உள்ள ராகு கேது கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடவும்.

 

பரிகாரம்:- குல தெய்வ நேர்த்திக் கடனை நிறைவேற்றுங்க. பிறந்த கிழமையில் இஷ்ட தெய்வத்தை அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். சங்கரன் கோவில் போய், கோமதி அம்மனை வழிபடுங்க. ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து பிராத்திக்கவும். வாழ்க்கையில் நன்மை உண்டாகும்

5.சிம்ம ராசி

 

இதுவரை உங்கள் ராசிக்கு 5ல் இருந்த ராகு இப்போது 4 ம் இடத்துக்கும், 11ல் இருந்த கேது இப்போது 10 ம் இடத்துக்கும் மாறியிருக்கிறார்கள். இதுவரை ராகுவும் கேதுவும் நல்ல இடங்களில் இருந்தாலும், நீங்கள் எதிர்பார்த்த நல்ல யோகங்களைத் தரவில்லை. அதற்குக் காரணம் உங்களுக்கு இப்போது நடந்து வரும் ஏழரைச் சனிதான். அது மட்டுமல்ல. ராகுவுக்கு வீடு கொடுத்த குரு 8 ல் மறைந்ததோடு, சனி கேதுவைப் பார்த்தும் மற்றொரு காரணம். இப்போது பாதச் சனி நடக்கிறது. ராகுவுக்கு 11 ல் சனி நின்று, ராகுவை பார்ப்பதால், ராகுவும் கேதுவும் தாங்கள் கொடுக்க வேண்டிய பலன்களைத் தவறாமல் தருவார்கள். ராகு நிற்கும் 4 ஆமிடம் வீடு வாகனம், தாய், கல்வி ஆகியவற்றைக் குறிக்கும். ராகு தங்கியிருக்கு மேஷ ராசியின் வீடான செவ்வாய், ராகுவுக்கு 9 ல் திரிகோணத்தில் சஞ்சரிப்பதால், வீடு சம்பந்தப்பட்ட சுபச் செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 10ல் கேது இருப்பதால், வேலை, உத்தியோகம் சம்பந்தமான தடைகள், தாமதங்கள் ஏற்படும். இந்த தடை, குரு மேஷத்தில் இருந்து, ராகுவுக்கு 6ல் இருப்பதால் ஏற்படுகின்றது. குரு ரிஷப ராசிக்கு மாறியதும் இந்நிலைமை மாறிவிடும். அப்போது 3ல் சனி உச்சம் பெறுவதால், போட்டி பொறாமை ஏற்பட்டாலும், அது உங்களுக்கு அனுகூலமாக அமைந்துவிடும். மனைவி பெயரில் சொத்துக்கள் வாங்குவீர்கள் கடன் அடையவும் வழி கிடைத்துவிடும். விருச்சிக ராசியில் இருக்கும் ராகு, சிம்ம ராசிக்கு 2,4,6,8,10,12 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். அதனால் கடல் கடந்து வெளிநாட்டுக்கு, ஜாலிடூர், ஆன்மீகப் பயணம், வர்த்தகம் ஆகியவைகளை சம்பந்தபபடுத்தி, பயணம் போகலாம். 6ம் இடத்தை ராகு பார்ப்பதால், சிக்கல், நஷ்டம், எதிரி, கடன் ஆகியவற்றால் சஞ்சலப்பட நேரும். ரிஷப கேது உங்கள் ராசிக்கு 4,8,12ம் இடங்களைப் பார்க்கிறார். இந்த மூன்றுமே கெடுபலன்களை நிகழ்த்தும். .ராகு கடன் ஸ்தானத்தைப் பார்ப்பதால் கடன் உருவாகும் .அந்தக் கடனை அடைக்க முடியாது எனும் நிலையை கேது ஏற்படுத்துவார். 4 ம் இடத்தைப் பார்த்த கேது தாய்க்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் பிரச்சினைகளை உண்டுபண்ணலாம். அல்லது தாயாரின் உடல் நலத்தைப் பாதிக்கலாம். ஆனால் அங்கு ராகு நின்று கேதுவைப் பார்ப்பதால், கேதுவின் செயல்களை மட்டுப் படுத்தலாம்.4 ல் ராகுவோ கேதுவோ இருந்தால் நீங்கள் எவ்வளவு உண்மையாக இருந்தாலும் தாயாரிடமிருந்து சர்டிபிகேட் வாங்கமுடியது . அந்த அம்மாவுக்கு பெண் இருந்துவிட்டால், உங்கள் சகோதரிமீது மட்டும் பாசத்தைப் பொழிவார்கள். அதுபோல மூணாமிடத்துக்கு குருபார்வையும் 11க்கு சனி பார்வையும் இருப்பதால், உடன்பிறப்புகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி ஏற்படாது.

 

பரிகாரம்:- குல தெய்வ வழிபாடு அவசியம். குடும்பத்து முன்னோர்கள் படத்து முன்னால் தீபம் ஏற்றி வைத்து வழிபடவும். திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் சென்று ராகு கேதுவை தரிசிப்பதோடு, பிள்ளயார்படடி கணபதியையும் வணங்கி வழிபட்டால், துன்பம் விலகும்.

 

6.கன்னி ராசி

உங்கள் ராசிக்கு இதுவரை 4ல் இருந்த ராகு 3ம் இடத்துக்கும், 10ல் இருந்த கேது இப்போது 9 ம் இடத்துக்கும் மாறியிருக்கிறார்கள். ராகு மாறியுள்ள இடம் சூப்பரான இடம் .கேது ஞானகாரகனானதால், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட 9ம் இடத்துக்கு வந்திருப்பதால், , தெய்வ அனுகூலம் பரிபூர்ணமாகக் கிடைக்கும். மேலும் 9ம் இடத்தை மோட்சகாரகனான ராகுவும் பர்ப்பதால், குறையிருக்காது. 3ஆமிடம் சகோதர ஸ்தானம் என்பதால், . கூடப் பிறந்தவர்களும் உறவினர்களும் உஙகளை ஒதுக்கிய நிலை மாறும். மதிப்பு, மரியாதை கூடும். 2007ல் ஏழரைச் சனி வந்ததுமுதல் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை எல்லாம் போய்விட்டது. இந்த ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு மீண்டும், தெம்பும் தைரியமும் வந்து விடும். எப்போதும் தைரியம்தான் உங்கள் முதலீடு. அதை இழக்ககாமலிருக்கும் சக்தியை ராகு தருவார். பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் கேதுவும் உங்களை பக்தி மார்க்கத்தில் செலுத்துவதால், இறைவனருள் பரிபூர்ணமாகக் கிடைக்கும். 5ம் இடமான புத்திர ஸ்தானத்தை ராகு பார்க்கிரார். அதனல் . பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் அவமானத்தையும் ஏளனத்தையும் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்

முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆரோக்கியம்தான்

பரிகாரம்

பிள்ளையாரை வழிபட வேண்டும்.. அது பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோயிலாக இருந்தாலும் சரி… பிள்ளையார்பட்டி கோயிலாக இருந்தாலும் சரி.. அன்னதானம் செய்யுங்கள். அது இன்னமும் சிறப்பு!

 

7.துலாம் ராசி

 

இதுவரை உங்கள் ராசிக்கு 3 ல்இருந்த   ராகு இப்போது 2மிடத்துக்கும், 9ல் இருந்தகெதுஇ  ப்போது 8மிடத்துக்கும் மாறிய்ருக்கிஆர்கல். இது அவ்வளவு சிறப்பானது என்று கூற முடியாது. ராகுவுகு வீடு கொடுத்த செவ்வாய் 7ல் நின்று ராகுவைப் பார்ப்பதால், பொருளாதாரத்தில் பிரச்சினை  வராது. இருக்காது. . வாக்கு தனம் குடும்பம்  போன்றவர்றில் பிரசினைக் இடம் இருக்காது. அத் சமயம் 12ல் நின்று ராசியைப்  பாப்பதல்  சில தடைகள் இருக்கும்.  8மிடம் விபது, மரணம் ஆகியவர்றைக் குரிக்கும் என்றாலும், 2,9,11 குறிய சம்பந்தம்   ஏற்படும்போது அதிர்ஷ்டம் ஏற்படுகின்றது.  மாணவர்கள், மந்தமகக்  காணப்ட்டாலும்,   முதல்  மாணவனாக வர முடியும்.  தகப்பனார் வழிச்   சொத்தில்  சிக்கல் வரும். ஊண்று தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக  இருந்துவந்த  போதும், இப்போது பாஅம் பிரிக்கும்போது குடும்பத்தில் ஏற்கெனவே நீங்கள் மேற்கொண்ட கல்யாணச் செலவுகள் கருத்தில்  கொள்ளப்படாமல்,  பாகப் பிரிவினைன நடக்கும்.  உங்களுடைய  சகோதரர் வழியிலும் பிரச்சினைகள்  ஏற்படும்.   12ம் இடத்தை  ராகு பார்க்க 10மிடத்டதை கேது பார்ப்பதால், தொழில், புது வேலை சம்பந்தமான செலவுகள் ஏற்படலாம்.  சிலருக்கு மனைவி வகையில்  ஏற்பட்ட கடன்களை  கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதே சமயம்  நண்பர்களின் உதவி கிடைக்கும். மொத்தத்தில் இந்த  ராகு கேது பெயர்ச்சி,   கடந்த  கால  கஷ்டங்களுக்கு  விமோசனம் கிடைப்பதாக அமையும்

பரிகாரம்:- மயிலாடுதுறையிலிருந்து  திருவாரூர்  செல்லும் வழியில் பேரளம் பக்கத்தில் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் வழிபடவும்

 

8.விருச்சக ராசி

 

இதுவரை உங்கள் ராசியில் 2ல் இருந்த ராகு இப்போது ஜென்மத்தில் மாறியிருக்கிறார். 8ல் நின்ற கேது இப்போது 7ம் இடத்துக்கு மாறியிருக்கிறார். கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. விரிசல்கள் உருவாவதற்கான வாக்கிய கூறுகள் உள்ளன. குரு ரஷபத்திற்கு போகும்போது ( டிசம்பர் 2012) இது போன்ற பிரச்சினைகள் பனி போல விலகும். கேதுவின் பலனால் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சகோதர வைகையில் நட்பும் நல்லுறவும் உண்டாகும். சகோதரர் வழியில் கூட்டுத்தொழிலில் இறங்கி லாபம் பார்க்கவும் யோகம் உண்டு. மனைவி வகை உற்றார்கள் வகையில் செல்வுகள் ஏற்படலாம். அவர்கள் பட்ட கடனை நீங்கள் அடைக்க நேரிடலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ( டிசம்பர் 2012) பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.  ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். ஆலயங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு உண்டு. சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். புது பதவிகள் வந்து சேரும்.

பரிகாரம் : அமாவாசை வழிபாடு சிறப்பு தரும். கண்தானத்துக்கு பதிவு செய்தால் கூடுதல் சிறப்பு.

9.தனுசு ராசி


இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்த ராகு இப்போது பன்னிரண்டாம் இடத்திற்கும் 7ம் இடத்தில் இருந்த கேது இப்போது ஆறாம் இடத்திற்கும் மாறியிருக்கிறார்கள்.

 

வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு பயணம் இடம் மாற்றம், வெளியூர் வாசம் ஆகியவை நிகழ வாய்ப்புகள் அதிகம். ஊர் விட்டு ஊர் சென்று புது தொழில் தொடங்கக் கூடிய யோகம் உண்டு. குடும்பத்தில் சுப மங்கள செலவுகள் உண்டாகும். எதிரி, கடன் தொல்லை, போட்டி பொறாமை, நோய், வைத்திய செலவு போன்ற எல்லா பிரச்சினைகளும் இப்போது அடங்கி விடும்.  ஆனால் பூமி, மனை வாங்குதல் போன்ற விஷயங்களில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் ஜாகிரதையாக கையாள வேண்டும். கோர்ட் கேஸ் என்று அவை அலைச்சல் கொடுக்கலாம்.

 

பரிகாரம் :

திருச்செந்தூர் போகும் வழியில் தொலைவில்லி மங்கலம் என்னும் தலத்திற்கு போய் பிரார்த்தித்தால் சுப மங்களம் உண்டாகும். கூடவே  ஏழை மாணவர்களுக்கு கல்விச் செலவுக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள் . நன்மை பெறுவீர்கள்.

10. மகர ராசி

இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் இருந்த கேது 5ல்லும் , 12ம் இடத்தில் இருந்த ராகு  11ல்லும் வருகிறது.

பிள்ளைகள் இடல் நிலையில் அதீத கவனம் தேவை. மற்றபடி இது ஒரு முன்னேற்ற பெயர்ச்சியே. செல்வம் சேரும். கடன் தொல்லைகள் அகலும். பல நாள் கடனை அடைக்கக் கூடிய அளவிற்கு பலம் பெறுவீர்கள். ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள் மேலும் மேன்மை பெறுவார்கள். குடும்பத்தில் இணக்கமான சந்தோஷ நிலை இருக்கும்.

ஆனால் செலவுகள் அதிகமாகும். சில முக்கியமான சந்தோஷ செலவுகளும் நடக்கும். உத்தியோகத்தில் மேன்மை பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் சீக்கிரம் நடக்கும். சில மனக்குழப்பங்கள் அவ்வப்ப்போது வந்து அகலும்

பரிகாரம் : பழனி முருகனை வழிபடுங்கள். அநாதை குழந்தைகளுக்கு உதவுங்கள். நன்மைகள் தேடி வரும்.

11.கும்ப ராசி

உங்கள் ராசியில் இதுவரை 12ல் இருந்த ராகு இப்போது 11ம் இடத்திற்கும் 6ல் இருந்த கேது இப்போது 5ம் இடத்திற்கும் மாறியிருக்கிறார்கள்.

 

இந்த பெயர்ச்சி உங்களுக்கு ஒரு மிகச் சிறப்பான பெயர்ச்சி. பல நல்ல திருப்பங்கள் அமையப் போகும் பெயர்ச்சி இது. பாட்டனார் வகை சொத்துக்கள் கிடைக்கலாம். சிலருக்கு சுய முயற்சியின் மூலமே பல நன்மைகள் விளையலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பிள்ளை பெறாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மண வாழ்வில் சந்தோஷம் கிட்டும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். பாங்காளிச் சண்டைகள் முடிந்து போகும். பெருந்தன்மையோடு நடந்து கொண்டால் இன்னும் புகழ் கூடும். இது ஒரு யோகமான ராகு கேது பெயர்ச்சி.

 

பரிகாரம் : தெங்காளஹஸ்திக்கு போய் பிரார்த்தித்தால் நன்மை கிடைக்கும். கூடவே , அன்னதானமும் செய்யுங்கள். யோகம் வளரும்.

12.மீன ராசி

இதுவரை 10ல் இருந்த ராகு 9ம் இடத்திலும் 4ல் இருந்த கேது 3ம் இடத்திலும் மாறுகிறார்கள்.  இது உங்கள் செல்வாக்கும் மரியாதையும் உயருகிற காலம். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியில் இருப்போருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுடைய செயல்களில் வேகமும் விவேகமும் உண்டாகும் காலம். இது பாராட்டுகளும் பரிசுகளும் குவிகிற காலம்.சிலர் விஸ்ஜ்யத்தில் கணவன் அல்லது மனைவிக்கு எதிர்பாரா வைத்திய செலவு ஏற்படலாம். அவர்கள் உடல்நிலையில் கவனம் தேவை. அதேபோல் தந்தை உடல்நிலையிலும் கவனம் தேவை. ஆக இந்த ராகு கேது பெயர்ச்சி பலனில் ராகு மத்திம பலனை மீன ராசிக்கு தந்தாலும் கேது பல நன்மைகளை அளிப்பார்.

 

பரிகாரம் :

 

பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்குங்கள். விநாயகர் வினை தீர்ப்பார். அனாதை குழந்தகளுக்கு உங்களால் இயன்ற நன்மைகளை செய்யுங்கள் மேலும் நன்மை கூடும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.