/* ]]> */
Jan 132012
 
ரஜினிகாந்த் மன்மோகன் சிங்க்

ரஜினிகாந்த் மன்மோகன் சிங்க்

 

 சமீபத்தில் ரஜினிகாந்த் மீது காங்கிரஸ் பிரமுகரான இ.வி.கே.எஸ். இளங்கோவன் புழுதி வாரித் தூற்றியிருக்கிறார். ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை ரஜினிகாந்த் கறுப்புப் பணத்தில்தான் கட்டினார் என்று  கூறினார். வெகுண்டெழுந்த ரஜினி ரசிகர்கள் இளங்கோவனின் போஸ்டர்களைக் கிழித்து தீயிட்டுக் கொளுத்தினர். காஞ்சீபுரம் ரஜினி ரசிகர்கள் மன்ற துணைத்தலைவர் கூறுகையில் ரஜினியைப்போல ஒரு புனிதத் தலைவரை எங்கும் காண முடியாது. ஒரு ரூபாய்கூட வருமான வரி பாக்கி இல்லாமல் வருமான வரி கட்டுபவர் ரஜினிகாந்த். யாருக்கும் உதவும் மனசு அவருக்கு உண்டு. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மன்மோஹன்சிங் ரஜினிக்கு ஜப்பானில் இருந்த செல்வாக்கைப் பார்த்து வியந்து போய், ஜப்பான் பாராளுமன்றத்தில் “ ரஜினி இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டான மனிதர் என்று புகழாரம் சூட்டினாராம்.  அப்படிப்பட்ட உயர்ந்த குணங்களைக் கொண்டவர் ரஜினிகாந்த். ஆனால், இளங்கோவனோ முரண்பாடுகளின் மொத்த உருவம். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியைத் தாக்கி மேடை தோறும் முழங்கி கூட்டணியே உடைந்துவிடுமோ என்ற பயத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்திவிட்டு, ஈரோட்டில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கருணாநிதியின் காலில் விழுந்தவர்தான் இந்த இளங்கோவன். இவர் 4 கிரௌண்டில் ராமாவரத்தில் கட்டியுள்ள ஆடம்பர பங்களாவைக் கட்ட எங்கிருந்து பணம் வந்தது என்று இவரால் கணக்கு சொல்ல முடியுமா? கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம். “ என்று எச்சரிக்கிறார் ரசிகர் மன்றத் துணைத் தலைவர்.

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>