சமீபத்தில் ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து அது‘ சன் டி.வி.யில் காட்டப்பட்டது. படத்தில் ‘கொலவெறி’ பாடலில் ஸ்ருதிஹாஸனும், தனுஷும் நடித்திருந்தார்கள். அதுபோல மேடையிலும் இருவரும் பாடி ஆடினார்கள். ரசிகர்களும் கூடவே மேடைக்குக் கீழே ஆடினார்கள். அந்த விழாவுக்கு ரஜினியை வரவழைக்க ஐஸ்வர்யா தனுஷ் மூலம் சன் டி.வி. பெரும் முயற்சி எடுத்ததாம். ஆனால், ரஜனி அதை மறுத்துவிட்டாராம். மாப்பிள்ளையின் போக்கு மீது மாமாவுக்கு சில மன வருத்தம்.அதுவும் தனுஷ் சமீப காலமாக சினிமா வட்டாரத்திலேயே ஓபனாக சில ஜில் ஜில் வேலைகள் செய்தது ரஜினியின் காதுக்கு போனது. அரசல் புரசலாக வரும் செய்திகளுக்கு ரஜினி முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் தன் நெருங்கிய வட்டாரத்திலிருந்தே செய்திகள் நம்பகத்தகமாக வர, நொந்து போயிருக்கிறாராம் ரஜினி. ரஜினியின் புறக்கணிப்புக்கு அதுதான் காரணம் என கிசுகிசுக்கிறவர்களும் உண்டு. லதா ரஜினிகாந்த் மட்டும் தனியாக வந்து மகள் டைரக்டராவதை பார்த்தார். மாமனாருடன் மோதும் மாப்பிள்ளை?
மூன்று 3 படத்தில் ஆடியோ விழாவின் விரிவான கவரேஜ் படிக்க க்ளிக் செய்யுங்கள்
tags : rajini, dhanush, 3 movie audio launch, 3 , ரஜினி, தனுஷ், ஸ்ருதி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments