/* ]]> */
Jul 122014
 

ரஜனியின் ‘லிங்கா’ வில் தொழில் நுட்பங்கள்:

LINGA
‘ மோஷன் கேப்சர்’ டெக்னாலஜியை இந்தியாவுக்கு முதன் முதல் கொண்டு வந்தவர் ரஜனி. அதையடுத்து, இதுவரை, இப்போது லிங்கா படத்துக்காக , இதுவரை எந்த இந்தியப் படத்திலும் பயன்படுத்தாத ஒரு அதி நவீன கேமராவைக் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக ரஜனி நடிக்கும் சண்டைக் காட்சிகளில் மட்டுமே, இந்த கேமரா பயன்படுத்தப்படும். அதை இயக்குவதற்காக ஹாலிவுட்டில் இருந்து சிலரை வரவழைத்திருக்கின்றனர். இந்தக் கேமராவுக்கு ஒரு நாள் வாடகையே 10 லட்சம் ரூபாய். இதே போல் லிங்காவில் மேலும் பல பிரம்மாண்டங்கள் இடம் பெறப் போகின்றன.
விருது வாங்கப் போகிறார், ஹன்சிகா:

HANSIKA
சுந்தர்-சி இயக்கத்தில் ‘அரண்மனை’ என்ற படத்தில் ஹன்சிகா ஒரு வித்தியாசமான ரோலில் ந்டித்துள்ளார். பழங்கால அரண்மனையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு உருவாகியுள்ள இந்த திகில் படத்தில், ‘ சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்தது போன்ற கெட்டப்பில் நடித்துள்ள ஹன்சிகா, உடம்பில் ஆவி புகுந்துகொள்ள , தலைவிரி கோலத்தில் அதிரடி ஆட்டம் போட்டுள்ளார். குறிப்பாக ‘ சந்திரமுகி’ படத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பை மிஞ்சிவிடவேண்டுமென்று உயிரைக் கொடுத்து நடித்திருப்பதாகச் சொல்லும் ஹன்சிகா, சந்திரமுகியில் நடித்த ஜோதிகாவுக்கு விருது கிடைத்தது போன்று, தனக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்.
கலக்கத்தில் தனுஷ்:

DHANUSH
சிவகார்த்திகேயனை ‘ 3′ படத்தின் மூலம் சினிமாவுக்குக் கொண்டு வந்ததே, தனுஷ்தான். அதன்பின் தான் தயாரித்த ‘ எதிர்நீச்சல்’ படத்திலும், அவரை நாயகனாக நடிக்கவைத்த தனுஷ், இப்போது ‘ டாணா’ என்ற படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன் தயாரிப்பில் ‘ வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில் நடித்துள்ள தனுஷ், அப்படத்தை ரிலீஸ் செய்வது சம்பந்தமாக ஒரு நிறுவனத்திடம் பேசினார். அப்போது நீங்கள் நடித்த படத்தை வெளியிட வேண்டுமானால், சிவகார்த்திகேயனை வைத்து நீங்கள் தயாரித்துள்ள ‘ டாணா’ படத்தையும் எங்களுக்குத் தர வேண்டும். ஒருவேளை உங்கள் படத்தினால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அதை சிவகார்த்திகேயன் படத்தில் எடுத்துவிடுவோம், என்றனர். ஆக, சிவகார்த்திகேயன் படத்தைத் தந்தால்தான், உங்கள் படத்தை வாங்குவோம் என்று அவர்கள் நேரடியாகவே சொன்னதால், தன் மார்க்கெட் மந்தமாகிவிட்டதை எண்ணி, சோர்வாகக் காணப்படுகிறார், தனுஷ்.
உலகளவில் மீடியாக்களில் மல்லிகா ஷெராவத்:

MALLIKA SHERAVATH
மல்லிகா ஷெராவத் தன் நடிப்புலக அனுபவத்தில் ஒரேயொரு நல்ல படத்தில்கூட நடித்ததில்லை. எல்லாமே க்ளாமர் வேடங்களும் குத்துப் பாடல்களும்தான். இப்போதுகூட சொல்லிக்கொள்ளும் அளவில் அவர் கைவசம் ஒருபடம்கூட இல்லை. ஆனால் செய்திகளில் அடிபட்டுக்கொண்டுதான் இருக்கிறார். இம்முறையும் அப்படித்தான் என்றாலும், ஒரு சின்ன மாறுதல். இந்த முறை இந்திய மீடியாவில் மட்டும் அவர் தலை உருளவில்லை. பதிலாக சர்வதேச அளவில் அனைத்து அச்சு-காட்சி ஊடகங்களும் அவர் பெயரை அந்தந்த மொழிகளில் விதவிதமாக உச்சரித்துக்கொண்டிருக்கின்றன. காரணம், அந்தோனியோ பாந்தரஸ் என்ற ஸ்பானிஷ் நடிகர் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகராக இருக்கிறார். தன் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கிறார். இதற்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரி மல்லிகா ஷெராவத்தான் என அனைவரும் சத்தியம் செய்கிறார்கள். அந்தோனியோ பாந்தரஸ் பல பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களில் நடித்தவர். அப்படிப்பட்டவரையும் மல்லிகா ஷெராவத்தையும் இணைத்து பேசுகிறார்கள். இந்த ஹாலிவுட் நடிகர் தன் மனைவியை விவாகரத்து செய்யப்போகிறாராம். இதையே சொல்லிச் சொல்லி மேட்டரை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>