/* ]]> */
Apr 112012
 

குறும்படங்கள் மாற்று சினிமாவுக்கான முயற்சியாகவும் , திரைத்துறையில் மக்கள் பங்கேற்பை கொண்டு வரும் முயற்சியாகவும் இருப்பதால் அதனை ஊக்குவிக்கும் பொருட்டு பிரபல திரைப்பட இயக்குனர் மு,களஞ்சியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தமிழர் நலம் பண்பாட்டியக்கம் ஆண்டு தோறும் மே மாதத்தில் “” குறும்பட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது … அதன்படி இந்த ஆண்டு தன் முதல் குறும்பட போட்டியை நடத்தவுள்ளது ….

போட்டியில் வெற்றி பெறும் குறும்படங்களுக்கு முதல் பரிசு ரூ.20000 /. , இரண்டாம் பரிசு ரூ.10000 /. மூன்றாம் பரிசு ரூ.5000 /. மற்றும் ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 /.. வீதம் ஐந்து குறும்படங்களுக்கும் தரப்படும் எனவும் அறிவித்துள்ளது …

எடிட்டர் லெனின் தலைமையில் இயக்குனர் ஜனனாதன் உட்பட பிரபல இயக்குனர்கள் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்வார்கள் எனவும் , போட்டிகள் முன்னணி இயக்குனர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முன்னிலையில் நடைபெறும் எனவும் தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் செ.பி.முகிலன் தெரிவித்தார் … தமிழர் நலம் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அக்னி ராஜ் (எ) தமிழரன் உடனிருந்தார் …திரைப்படநடிகை அஞ்சலி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெறப்போவதும் மற்றொரு சிறப்பம்சம்…

தமிழ் குறும்பட குறுவட்டையையும் ( டி.வி.டி ) , “ தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் ” என்ற பெயருக்கு ரூ.250 / க்கான வரைவோலையையும் ( டி.டி) போட்டியில் பங்கு பெறுவதற்கு கடைசி நாளான ஏப்ரல் 20 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர் , தமிழர் நலம் பேரியக்கம் ,

எண் : 5 முதல் தெரு , இரண்டாவது நிழற்சாலை ,

அசோக் நகர் , சென்னை – 600083 .

அலை பேசி : 73588 38594

 

விதிமுறை பற்றிய மற்ற தவல்களுக்கு கீழ்கண்டவற்றை பார்க்கவும்

www.thamilarnalam.com email : thamilarnalam@gmail.com 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>